For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

இரவு ஜிம்முக்கு போய் உடற்பயிற்சி செய்வது ஆபத்து!

09:06 PM Jul 25, 2024 IST | admin
இரவு ஜிம்முக்கு போய் உடற்பயிற்சி செய்வது ஆபத்து
Advertisement

ப்போதெல்லாம்  இரவு நேரங்களில் பிரகாசமான விளக்கொளியில் கண்ணாடிச்சுவர் அறைக்குள் தீவிரமாக உடற்பயிற்சி செய்துகொண்டிருப்பவர்களை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். நம் வீட்டில்கூடக் காலை நேர அலுவலகப் பணி காரணமாக இரவு நேரத்தில் உடற்பயிற்சி செய்பவர்களும் இருக்கலாம். அப்படி உடற்பயிற்சி ஆரோக்கியமானது. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், உடற்பயிற்சி செய்வதற்கான நேரம் முக்கியமானதல்லவா? இரவு நேர உடற்பயிற்சி ஏற்றுக்கொள்ள கூடியதுதான் எனக் கூறும் மருத்துவர்கள் கூடவே சில எச்சரிக்கைகளையும் விடுக்கின்றனர். அறியாமையினால் ஒருவர் மேற்கொள்ளும் உடற்பயிற்சியானது தூக்கத்தைப் பாதித்து உடல்நலப் பாதிப்புக்கு அழைத்துச் செல்லும் எனச் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Advertisement

இதுகுறித்து மருத்துவர்கள் தரப்பில், “இரவு நேர உடற்பயிற்சி நிச்சயம் நமது தூக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், நமது உடல் வெப்பநிலையை அதிகரித்து அட்ரினலின், எண்டார்ஃபின் ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிக்கிறது. இதன் காரணமாக உடற்பயிற்சிக்குப் பின் உறக்கம் வருவது தாமதமாகிறது” என்று கூறப்படுகிறது. இவ்வாறான சூழலில் உறங்குவதற்கு முன் இதமான நீரில் குளிப்பது நன்மை தரும் எனவும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் படுக்கைக்குச் செல்வதற்கு 4 முதல் 5 மணி நேரத்துக்கு முன்பாக மேற்கொள்ளப்படும் மிதமான உடற்பயிற்சி தூக்கத்தைத் தொந்தரவு செய்யாது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மாலை நேரத்தில் மிதமான அளவிலான உடற்பயிற்சிகள் நம் உறக்கத்தை மேம்படுத்தும் என 2019 இல் நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது. அதேநேரம் மாலையில் ஜிம் போய் கடினமான உடற்பயிற்சிகள் கூடாது என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஜூலை 2023இல் வெளியிடப்பட்ட மற்றொரு ஆராய்ச்சி முடிவில், இரவில் நீண்ட நேரம் மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகள் உறக்கத்தை மிக மோசமான அளவில் பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Tags :
Advertisement