‘செஞ்சிக் கோட்டை’ -யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலுக்கு பரிந்துரை!
2024 – 25 ஆம் ஆண்டிற்கான யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலுக்கு செஞ்சிக் கோட்டை பரிந்துரைக்கப் பட்டுள்ளதாக உலக பாரம்பரிய மையம் அறிவித்துள்ளது.
1510-ம் ஆண்டில் விஜயநகர மன்னர்களால் செஞ்சிக்கோட்டை கட்டப்பட்டது. இதையடுத்து, ராஜகிரி, கிருஷ்ணகிரி, சதுரகிரி ஆகிய 3 கோட்டைகளுடன் இன்றும் செஞ்சிக்கோட்டை கம்பீரமாக காட்சி அளிக்கிறது. அதாவது தமிழ் நிலத்தை ஆண்ட மன்னர்கள் எப்படி வாழ்ந்தார்கள், எங்கே இருந்து ஆட்சி செய்தார்கள் என்பதற்கெல்லாம் சாட்சி சொல்லும் சரித்திர அடையாளமாக கம்பீரத்துடன் நிமிர்ந்து நிற்கிறது செஞ்சிக் கோட்டை. சுமார் 834 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட செஞ்சிக் கோட்டை, முழுமையான வடிவத்துடன் மிச்சமிருக்கும் ஒரே தமிழ் மன்னர்களின் கோட்டை.தர்பார் மண்டபம், அந்தப்புரம், படைவீடுகள், யானை மண்டபம், குதிரை லாயங்கள், மாட மாளிகைகள், கோயில்கள், தானியக்களஞ்சியங்கள், ஆலயங்கள், உடற்பயிற்சிக்கூடம், பீரங்கி மேடை, வெடிமருந்துக் கிடங்கு, தோரண வாயில்கள், காவல் அரண்கள், பாதாள சிறை, மதில்சுவர், அகழி என ஒரு கோட்டைக்கான சகல அம்சங்களோடும் தமிழகத்தில் இருக்கும் ஒரே கோட்டை, செஞ்சிக் கோட்டை. 60 அடி அகல கோட்டைச்சுவர்,
அதற்கு வெளியில் 80 அடி அகலத்தில் அகழி, அதைத் தாண்டி மலையும் காடுகளும் என இயற்கை அரண்கள் சூழ்ந்த செஞ்சிக்கோட்டை, இந்தியாவின் மிகப் பாதுகாப்பான கோட்டையாக இருந்தது. இதனாலேயே இதை 'கிழக்கு உலகத்தின் டிராய் கோட்டை’ என ஐரோப்பியர்கள் புகழ்ந்தனர். பல ஆண்டுகள் எதிரிப்படைகள் முற்றுகையிட்டாலும் வீழாத கோட்டையாக இது இருந்தது. 60 அடி அகல கோட்டைச்சுவர், அதற்கு வெளியில் 80 அடி அகலத்தில் அகழி, அதைத் தாண்டி மலையும் காடுகளும் என இயற்கை அரண்கள் சூழ்ந்த செஞ்சிக்கோட்டை, இந்தியாவின் மிகப் பாதுகாப்பான கோட்டையாக இருந்தது. இதனாலேயே இதை 'கிழக்கு உலகத்தின் டிராய் கோட்டை’ என ஐரோப்பியர்கள் புகழ்ந்தனர்.
பல ஆண்டுகள் எதிரிப்படைகள் முற்றுகையிட்டாலும் வீழாத கோட்டையாக இது இருந்தது.இரண்டாவது மலை, கிருஷ்ணகிரி. சுமார் 300 விருந்தினர்களை மன்னர் சந்திக்கும் அழகிய தர்பார் மண்டபம் இதன் உச்சியில் உள்ளது. காற்று உள்ளே வந்து தாலாட்ட வசதியாக திறந்த சாளரங்களுக்கு மத்தியில் மன்னர் அமர இருக்கை. சுற்றிலும் விருந்தினர் இருக்கைகள் உள்ளன. இந்த இரண்டு மலைகளிலும் கோயில்கள், தானியக் களஞ்சியம் என எல்லாமே உள்ளன.
மற்ற இரண்டு மலைகளில் காவல் அரண்கள் தவிர முக்கியமாக ஏதுமில்லை.. பாதுகாப்பு அரண்களைக் கடந்து கோட்டையின் மையப் பகுதிக்குச் சென்றால், கல்யாண மகால் நம்மை வரவேற்கும். மையத்தில் ஒரு மேடை; நீச்சல் குளம், தண்ணீர் வருவதற்கு சுடுமண் ஓடு குழாய்கள், சுற்றிலும் அரச குடும்பப் பெண்கள் தங்குவதற்கு அறைகள் இருக்கிறது. இதன் ஒரு பகுதியில் எட்டு அடுக்குகள் கொண்ட கோபுரம் உள்ளது. மேலும் கீழும் செல்ல குறுகிய செங்குத்தான படிகள்; ஒவ்வொரு அடுக்கிலும் நடுவில் ஒரு அறை. இதன் உச்சி வரை தண்ணீர் செல்ல அந்தக் காலத்திலேயே சுடுமண் குழாய் பதித்திருந்த தொழில்நுட்பம் வியக்க வைக்கும். இதற்கு இணையாகச் சொல்ல ஒரு கட்டடம் எங்கும் இல்லை!
இந்நிலையில், 2024-25-ஆம் ஆண்டிற்கான யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் அங்கீகாரம் பெறுவதற்கு தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தின் அருகேயுள்ள செஞ்சிக்கோட்டை உள்ளிட்ட மராத்தா ராணுவ நிலப்பரப்பு காட்சிகள் பரிந்துரைக்கப்படுவதாக ஒன்றிய கலாசாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மராட்டிய ஆட்சியில் ராணுவ சக்தியின் உத்தியாக பன்னிரண்டு பகுதிகள் இருந்தன. மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் சல்ஹேர் கோட்டை, ஷிவ்னேரி கோட்டை, லோகாட், கந்தேரி கோட்டை, ராய்காட், ராஜ்காட், பிரதாப்காட், சுவர்ணதுர்க், பன்ஹாலா கோட்டை, விஜய் துர்க், சிந்துதுர்க் போன்றவற்றோடு தமிழ்நாட்டில் உள்ள செஞ்சி கோட்டையும் இடம் பெற்றுள்ளது.
இந்தக் கோட்டைகள் மராட்டிய ஆட்சியின் ராணுவ சக்தியாக இருந்து, 800 ஆண்டுகளுக்கு முந்தைய சரித்திரத்தை தற்போதும் வெளிப்படுத்துகின்றன. இந்த 12 புவியியல் மற்றும் நிலப் பகுதிகள் உலகப் பாரம்பரியப் பட்டியலில் அங்கீகாரம் பெற, இந்திய அரசு சார்பில் யுனெஸ்கோவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.