ஜெர்மனியின் சர்வாதிகாரி– அடொல்ஃப் ஹிட்லர் இறுதி தினம்!
வரலாற்றில் பாசிஸ்டுகள் மரணம் படுமோசமானது ! நன்கறியப்பட்ட பாசிஸ்டுகளான முசோலினி மற்றும் ஹிட்லர் தங்களுடைய இறுதிக் காலத்தில் நல்லபடியாகச் சாகவில்லை. வரலாற்றின் பக்கங்களைத் திரும்பிப் பார்ப்போம்:-
ஏப்ரல் 29, 1945 :
இரண்டாம் உலகப் போரின்போது, இத்தாலிய தலைவர் பாசிஸ்டு முசோலினி அவரது சொந்த மக்களால் பிடிக்கப்பட்டு, மிலன் நகரில் தூக்கிலிடப்பட்டான். அதற்கு முன்பாக முசோலினி, அவரது துணைவி மற்றும் பிற பாசிஸ்டுகள் தலைகீழாகத் தொங்க விடப்பட்டு, எச்சில்களால் காறி உமிழப்பட்டு, உதைக்கப்பட்டு, கல்லெறியப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்.
ஏப்ரல் 29, 1945 அன்று நண்பகல் முசோலினியின் மரணம் குறித்து ஹிட்லருக்குத் தெரிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில், ஜெர்மனியில் பெர்லின் போரில் சோவியத் படைகள், ஹிட்லர் பதுங்கியிருந்த ஃபுரர் பங்கரில் இருந்து சில நூறு மீட்டர்கள் தொலைவில் இருந்தன; "எல்லாம் முடிவடையப் போகிறது" என்று ஹிட்லருக்குத் தெரிந்து விட்டது. முசோலினி கொல்லப்பட்ட விதத்தைக் கேள்விப்பட்டபோது, தலைகீழாகத் தொங்க விடப்பட்டுக் கொல்லப்படும் நிலையில் தன்னைக் கற்பனை செய்து பார்ப்பது ஹிட்லருக்குப் பயங்கரமாக இருந்தது. ஹிட்லர் தனது சகாக்களிடம் கூறினான்: “ நான் உயிருடனோ அல்லது இறந்த பின்போ எதிரிகளின் கைகளில் சிக்க விரும்பவில்லை. என் மரணத்திற்குப் பிறகு, என் சடலம் எரிக்கப்பட வேண்டும், அதுவும்கூட எப்போதும் யாராலும் கண்டுபிடிக்கப்படக் கூடாது."
ஏப்ரல் 30, 1945 ,
பெர்லினில் உள்ள தனது தலைமையகத்தின் கீழ் உள்ள பதுங்கு குழியில், அடால்ஃப் ஹிட்லர் ஒரு சயனைட் குப்பியை விழுங்கி, தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டான்.
அதற்குப் பிறகு, உடனடியாக ஜெர்மனி நிபந்தனையின்றி நேச நாட்டுப் படைகளிடம் சரணடைந்து, ஹிட்லரின் '1,000 ஆண்டு' ஜெர்மானியப் பேரரசு பற்றிய கனவுகளை முடிவுக்குக் கொண்டு வந்தது.பாசிச அரசியல், அகண்ட தேசக் கனவு காண்பவர்களுக்கு, வரலாற்றின் பக்கங்களை நினைவுபடுத்துவது நமது கடமையாகும்.!
கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் 1933ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற அடுத்த மாதமே, ஜெர்மன் பாராளுமன்றத்திற்கு தானே தீ வைத்து விட்டு, அந்த பழியை கம்யூனிஸ்ட்கள் மீது சுமத்தி, ஏறத்தாழ 5000கம்யூனிஸ்ட்களை கைது செய்து கொன்று வீசியவன்....!.
தேசிய உணர்வுகளுக்கு குந்தகம் விளைவிப்பவை என்று கூறி, வரலாற்று நூல்களையும், தத்துவ நூல்களையும் தீ வைத்து கொளுத்தியவன்...
தனது குடி மக்களான யூதர்களையும், கம்யூனிஸ்ட்களையும், அறிஞர்களையும், எழுத்தாளர்களையும் கொன்று குவித்தவன்..
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், தாமஸ் மான் போன்ற அறிஞர்கள் தாய் நாட்டிலிருந்து வெளியேற காரணமாக இருந்தவன்....
யூதர்களின் ஆலயங்கள் அனைத்தையும் தகர்த்து தரைமட்டமாக்கியவன்...
யூதர்களை கூட்டப்படுகொலை செய்ய தனிப்படை வைத்திருந்தவன்...
"டெப்ளிக்காவில், 2000பேர் நின்று "இறந்து போக"வசதியாக, Gas Chamber ஒன்று நிறுவப்பட்டிருந்தது.முதலில் மோனோக்சைட் வாயுவை பயன்படுத்தி கூட்டக் கொலைகளை செய்தோம்; ஆனால், அவர்கள் இறந்து போக அதிக நேரம் தேவைப்பட்டதால், சைக்கியான் B கொண்டு வந்தோம்.. மூன்று முதல் ஐந்து நிமிடங்களுக்குள் மனிதர்களை கொன்று விட இது பயன்பட்டது; கூட்டக்கொலைகளை "இரைகள்"அறியாமல் செய்ய வேண்டும் என்று எங்களுக்கு உத்தரவு கிடைத்திருந்தாலும், பிணங்களின் அழுகிய முடை நாற்றம், தங்களுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை "இரைகள்"உணர்ந்து கொள்ள முடிந்திருக்கும்..". "Gas Chamberல் மெல்லிய இசை ஒலிக்கும்; குழந்தைகளையும், பெண்களையும் நிர்வாணமாக்கி, அந்த மரண அறைக்குள் திணிப்போம்; மேலேயிருந்து புனல்(Shower)வழியே குளிர்ந்த நீர் வரும் ஆனந்தமாக குளிக்கலாம் என்று"இரைகள்"காத்து நிற்கும் போது, விஷம் பொழியத் துவங்கும்.நொடிகளுக்குள் தங்களை மாறி மாறி பிய்த்து பிராண்டிக்கொண்டு, மூச்சு திணறி எதற்காக தாங்கள் கொல்லப்படுகிறோம் என்பதை அறியாமலே இறந்து போவார்கள் அவர்கள்; இந்த மரணங்கள் அனைத்தும் இயற்கையான மரணங்களே என்று சான்றளிக்க டாக்டர்களும் இருப்பார்கள் அங்கே" என்று, நியூரம்பர்க் பொது விசாரணையின் போது, நாசி தீவிரவாதிகளான, ருடால்ஃப் ஹோயஸ், ஹெரன் டோஸ் ஆகிய இருவரும் வாக்குமூலம் அளித்தனர்..!
இப்படி உலகை நடு நடுங்க வைத்த, வரலாற்று பிழை என்று வர்ணிக்கப்பட்ட கடைந்தெடுத்த போர் வெறியன் -அடால்ஃப் ஹிட்லர், ஜெர்மனி தலை நகரத்தை கைப்பற்றி,தனது மாளிகையை சோவியத் செஞ்சேனை சுற்றி வளைத்த போது, தனது மாளிகையின் கீழ் உள்ள ரகசிய அறைக்குள் சென்று தஞ்சம் புகுந்தான்..!
அங்கே..
1945,ஏப்ரல் மாதம் 27/28/29 தேதிகளில் ஒரு நாள்... ஈவா பிரவுன் என்ற தனது காதலியை திருமணம் செய்து கொண்டான்...!ஏப்ரல் மாதம் 30ம் தேதி, உலக வரலாற்றின் கொடிய மனிதன் ஹிட்லர் தனது கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டான்..!.அவனது காதல் மனைவி ஈவா பிரவுன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாள்...!
28-4-1945 அன்று கம்யூனிஸ்ட்களின் துப்பாக்கி குண்டுகளால் இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி கொல்லப்பட்டதும், இரண்டு நாட்கள் கழித்து,30-4. 45 அன்று முசோலினியின் நண்பன், ஹிட்லர், கம்யூனிஸ்ட்களின் துப்பாக்கி குண்டுகளுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டதும் கூட வரலாற்று விசித்திரம் தான் போலும்...!
எது எப்படியோ.. கொடிய ஆட்சியாளர்கள் நிச்சயமாக ஒரு நாள் வரலாற்று குப்பைக்கூடையில் வீசி எறியப்படுவார்கள் என்பது கூட தொடர்ந்து நிரூபிக்கப்பட்டே வருகிறது என்பது மட்டும் நிஜம்...!