அஞ்சல் துறையில் 44, 228 கிராம அஞ்சல் பணி வாய்ப்பு!
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 44 ஆயிரத்து 228 கிராம அஞ்சல் பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 3,789 காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது.
அஞ்சல்துறையின் துறை சாராத சேவை அமைப்பு (Extra Departmental system in the department of Post ) 150 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. கிராமப்பகுதிகளில் முறையான முழு நேர ஊழியர்களுக்கு அவசியம் இல்லாத நிலையில் அடிப்படை, சிக்கன அஞ்சல் சேவை வழங்க இந்த அமைப்பு தேவைப்பட்டது. 1,29,346 துறை சாராத கிளை அஞ்சல் அலுவலகங்கள் இந்த கிராம அஞ்சல் பணியாளர்கள், கிளை போஸ்ட் மாஸ்டர்கள் ஆகியோரால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் கிளை போஸ்ட் மாஸ்டர்கள் அல்லாத கிராம அஞ்சல் பணியாளர்கள், துணை மற்றும் தலைமை அஞ்சல் அலுவலகங்களில் பணியாற்றி வருகிறார்கள் (Branch, Sub and Head Post offices). கிராம அஞ்சல் பணியாளர்களைப் பகுதி நேர ஊழியர்களாக அதாவது நாள் ஒன்றுக்கு 3 முதல் 5 மணி நேர ஊழியர்களாகப் பயன்படுத்துதல் இந்த அமைப்பின் முக்கிய அம்சமாகும். இவர்கள் வாழ்வாதாரத்துக்கு வேறு வகைகளிலும் தொழில்கள் மூலமாகவும் வருமானம் ஈட்ட வேண்டும். இந்தப் பணியாளர்கள் தங்களது 65வது வயது வரை பணியில் இருப்பார்கள்.
இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் கட்டாயமாக உள்ளூர் மொழியறிவு கொண்டிருக்க வேண்டும். அதேபோன்று, மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும்.
இந்த பணி ஒரு மத்திய அரசு பணியாகும். இருந்தாலும், அஞ்சல்துறை துறை சாராத சேவை அமைப்பின் (Extra Departmental system in the Department of Posts) கீழ் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கான ஆள்சேர்கை, படிகள் மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டாலும், அஞ்சல் துறையில் முழு நேர ஊழியர்களுக்கான சம்பள விகிதம் இவர்களுக்குப் பொருந்தாது. (Gramin Dak Sevaks are holders of civil posts but they are outside the regular civil service) என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும் மேலும், இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் வழக்கமான தளர்வுகள் உள்ளது. இந்த பதவிக்கான விண்ணப்பச் செயல்முறை ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெறும்
இந்த கிராம அஞ்சல் பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆந்தை வழிகாட்டி/வேலைவாய்ப்பு என்ற லிங்க்கை க்ளிக் செய்து வரும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் அஞ்சல் வட்டத்தை முதலில் தேர்வு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடைசித்தேதி :
05.08.2024