பிரான்ஸின் யங் பிரைம் மினிஸ்டராகும் மிஸ்டர் கே ஆன கேப்ரியல் அட்டல்!
பிரான்ஸ் பிரதமராக இருந்த எலிசபெத் போர்ன் ராஜினாமா செய்த நிலைமையில் நாம் நேற்றே குறிப்பிட்டப்படி இளம் வயதினரான கேப்ரியல் அட்டல் அந்த பதவிக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறார் கேப்ரியல் அட்டல் பிரான்ஸ் நாட்டின் கல்வித்துறை அமைச்சராவும், அரசின் செய்தி தொடர்பாளராகவும் இருந்தார்..
நம் நாட்டில் குடியரசு தலைவரை விட பிரதமருக்கு தான் அதிக அதிகாரம் உண்டு. ஆனால் பிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகளில் பிரதமரை காட்டிலும் அதிபருக்கு தான் அதிக அதிகாரம் இருக்கிறது..அந்த வகையில் பிரான்ஸ் நாட்டின் அதிபராக இருப்பவர் இமானுவேல் மேக்ரான். இவர் இந்தியாவுடன் நெருக்கமான உறவு வைத்தார். பிரதமர் மோடியுடன் நெருங்கிய நட்பில் உள்ளார். மேலும் வரும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் இவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.பிரான்ஸில் தற்போது இமானுவேல் மேக்ரானுக்கு எதிராக மக்கள் திரும்பி உள்ளனர். கடந்த ஆண்டு ஓய்வூதியம் மற்றும் குடியுரிமை சட்டத்திட்ட திட்டத்தில் அவர் கொண்டு வந்த அதிரடி மாற்றங்கள் என்பது இமானுவேல் மேக்ரானுக்கு எதிராக மக்களை திருப்பி உள்ளது. இதனால் அவரது செயல்பாட்டில் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். இதற்கிடையே தான் பிரான்ஸ் பிரதமராக இருந்த எலிசபெத் போர்ன் திடீரென்று ராஜினாமா செய்தார். பிரான்சின் பிரதமராக பொறுப்பேற்ற 2 வது பெண் என்ற பெருமையை பெற்ற அவர் திடீரென்று ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து அடுத்த பிரதமராக யாரை நியமனம் செய்வது என்ற கேள்வி எழுந்தது.
அடுத்த ஐந்து மாதங்களில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக கேப்ரியல் அட்டல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரான்சின் இளம் பிரதமர் என்ற பெருமையை கேப்ரியல் அட்டல் பெற்றார். கேப்ரியல் அட்டல் பிரதமராக நியமிக்கப்பட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் இரண்டாவது உயர்ந்த பதவியை வகிக்கவுள்ள இவர், தன்பாலின ஈர்ப்பாளர் ஆவார். தன்பாலின ஈர்ப்பாளர் ஒருவர் பிரான்ஸ் பிரதமர் ஆவது இதுவே முதல் முறையாகும்.
முன்னதாக இந்த கேப்ரியல் அட்டல், கொரோனா நோய்த்தொற்று பரவலின்போது பிரான்ஸ் அரசின் செய்தித் தொடர்பாளராக இருந்தார். அதிபர் இமானுவேல் மேக்ரானின் நெருங்கிய நண்பரான அவர், நாட்டின் மிகவும் பிரபலமான அரசியல்வாதி. மேலும், அறிவார்ந்த அமைச்சர்களில் ஒருவர் எனவும் பாராட்டப்பட்டவர். இவர் தன்னை தன்பாலின ஈர்ப்பாளர் என வெளிப்படையாக அறிவித்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.