For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

லியோ சக்சஸ் மீட்டில் விஜய் பேச்சின் முழு விபரம்!- வீடியோக்களுடன்!

10:13 AM Nov 02, 2023 IST | admin
லியோ சக்சஸ் மீட்டில் விஜய் பேச்சின் முழு விபரம்   வீடியோக்களுடன்
Advertisement

ஆக்டர் விஜய் நடிப்பில் உருவான ‘லியோ’படம். டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படம் பாக்ஸ் ஆஃபிஸில் வசூலை அள்ளி வருகிறது. ஆனாலும் விஜய் படம் என்றாலே சர்ச்சைகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் பஞ்சமிருக்காது. அவ்வகையில் இப்படத்திற்கும் பல பிரச்னைகளும், சிக்கல்களும் இருந்தது. இதற்கிடையில் லாஸ்ட் மந்த் ரிலீஸான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்ற அதேசமயம் சில கலவையான விமர்சனங்களையும் பெற்றிருந்தது. இருப்பினும், பாக்ஸ் ஆபிஸில் வ. 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்ததாகப் படக்குழுவும் அறிவித்திருந்தது. ஆனாலும் விஜய்யின் பட ரிலீசின் போது ரசிகர்கள் ரொம்பவும் மிஸ் செய்த ஆடியோ லாஞ்ச் மற்றும் குட்டி ஸ்டோரியை சொல்லி கோலிவுட்டில் அதிர்வலையைக் கிளப்ப ஒரு வெற்றி விழா ஏற்பாடு செய்யப்பட்டது.இவ்விழாவில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்றும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கே அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மட்டுமே அனுமதி என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தது.மதியம் முதலே அந்தப் பகுதியை ரசிகர்கள் வட்டமிட தொடங்கினர். மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. பிரபலங்கள் ஒவ்வொருவராக நிகழ்ச்சிக்கு வரத்தொடங்கினர். பின்னர் சுமார் 7 மணியளவில் நடிகர் விஜய் அரங்கிற்கு வந்தார்.

Advertisement

விழாவில் விஜய் பேசியது இதுதான்:

Advertisement

“என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா... நண்பி. இவ்ளோ நாள் நான் தான் உங்கள என் நெஞ்சுக்குள்ள வச்சுருகேன்னு நினைச்சேன். இப்போது தான் உங்கள் இதயத்தில் எனக்கு ஒரு பெரிய இடத்தைக் கொடுத்து உள்ளீர்கள் என்பதை உணர்ந்து கொண்டேன். என்னோட தோலை செருப்பாக தேய்த்து கொடுத்தாலும் உங்கள் அன்புக்கு ஈடாகாது. நான் உங்களுக்கு என்றும் உண்மையாக இருப்பேன். சமீப காலமாக சமூக வலைதளங்களில் உங்களது கோபம் அதிகமாக உள்ளது. ஏன்? இவ்வளவு கோபம் உடம்புக்கு நல்லதில்லை. அதெல்லாம் வேண்டாம் நண்பா. நாம் யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். அது நம்முடைய வேலையுமில்லை. நமக்கு நிறைய வேலை இருக்கிறது.

ஒரு காட்டுக்கு ரெண்டு பேர் வேட்டைக்கு போறாங்க. அந்த காட்டுல மான், மயில், முயல், இந்த காக்கா, கழுகு. காடுன்னு இருந்தா இதெல்லாம் இருக்கும் தானே. அதுக்கு சொன்னேன் பா. ஒருத்தர் வில் அம்பு எடுத்து போறார். உன்னொருத்தர் ஈட்டி எடுத்து போறார். வில் எடுத்து போனவர் முயல அடிச்சி தூக்கிட்டாரு. ஈட்டி வைத்திருந்தவர் யானைய குறி வெச்சு மிஸ் பண்ணிட்டார். ரெண்டும் பேரும் ஊருக்கும் திரும்பி வருவாங்க. இதுல யாருக்கு வெற்றி. அந்த யானைய குறி வைத்தவர் தான் வெற்றி அடஞ்சவர். ஏன்னா, நம்மால் எதில் எளிதாக வெல்ல முடியுமோ அதை செய்வது வெற்றி அல்ல. எது முடியாதோ அதை செய்வது தான் வெற்றி. முயற்சியாவது செய்ய வேண்டும். பெரிதினும் பெரிது கேள். ஆசைப்பட வேண்டும். அதில் என்ன தப்பு இருக்கு.

படத்துல வர பாட்டுல ‘விரல் இடுக்குல தீ பற்றணும்னு’ எழுதியிருக்காங்க அத பேனா என்று எடுத்துக்கொள்ளலாம். அதேபோல ‘பத்தாது பாட்டில்’ என்று எழுதியிருக்கிறார்கள். அதை ஏன் சரக்கு என எடுத்துக் கொள்ள வேண்டும். கூல் என்று எடுத்துக் கொள்ளலாம் இல்லையா?. இப்படியான மழுப்பலான கதையெல்லாம் சொல்லி நான் எஸ்கேப் ஆக தேவையில்லை. தயவு செய்து, சினிமாவை சினிமாவாக பாருங்கள். பள்ளி கல்லூரி போகிற வழியில் ஒயின் ஷாப் இருக்கு. ரெண்டு ரவுண்டு போட்டு விட்டா ஸ்கூலுக்கு போகிறார்கள்.

ஒரு குட்டிப் பையன் ஆசையா அவங்க அப்பா சட்டைய எடுத்து போட்டுக்குவான். அப்பாவோட வாட்ச் எடுத்து கட்டிக்குவான். அப்பாவோட சேர்ரில் ஏறி உட்கார்ந்துக்குவான். அந்த ஷர்ட் அவனுக்கு செட்டே ஆகாது. தொள தொளனு இருக்கும். வாட்ச் கையிலயே இருக்காது. அந்த சேர்ல உட்காரலாமா வேணாமா? தகுதி இருக்கா, இல்லையா? அதெல்லாம் அவனுக்கு தெரியாது. அப்பா சட்டை. அப்பா மாறி ஆகணும்னு கனவு. அதில் என்ன தவறு. அதனால, பெருசா கனவு காணலாம். ஒருத்தரும் ஒன்னும் பண்ண முடியாது!

ஒரு முறை ஏவிஎம் சரவணன் சார், வடபழனி மெயின் ரோட்டுல கார்ல போனப்போ சிக்னல்ல இருந்த ஒரு அம்மாவுக்கு உதவி செய்திருக்கார். அந்த அம்மா உடனே நீ நல்லா இருப்ப எம்.ஜி.ஆர்-ன்னு சொல்லி இருக்காங்க. அந்த காலத்துல யார் அள்ளி கொடுத்தாலும் எம்.ஜி.ஆர் அவர்களா தான் இருக்கும். அப்படின்னு பேர். நாம யாரையும் ஒப்பிட்டு பேசல. நாம அவ்வளவு பெரிய ஆளும் இல்ல. ஆனா, நல்ல விஷயத்த எடுத்துக்கலாம். அந்த வகையில எனக்கு ஒரு குட்டி ஆசை. எதிர்காலத்துல எங்க நல்லது நடந்தாலும் அதை நம்ம பசங்கதான் பண்ணி இருப்பாங்க. அப்படின்னு ஒரு பேர் எடுக்கணும்னு எனக்கு ஒரு ஆசை.

சரி, லியோவுக்கு வருவோம். இயக்குநர் லோகேஷ் கனகராஜை எண்ணி பெருமை கொள்கிறேன். ‘மாநகரம்’ நம்மள பாக்க வெச்ச. ‘கைதி’ எல்லாரையும் பாக்க வெச்ச. ‘விக்ரம்’ இந்தியாவையே பாக்க வெச்ச. இப்போ லியோ. இன்னும் ஹாலிவுட் மட்டும் தான் பாக்கி இருக்குன்னு நினைக்குறேன். உன்ன நினைக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு. 20 வயசுல ஹீரோயின் ஆகுறது பெருசு இல்ல. 20 வருஷமா முன்னணி ஹீரோயினா இருக்குறது தான் பெருசு. நம்ம இளவரசி குந்தவை (திரிஷா) சூப்பர். சஞ்சய் தத் சார், அர்ஜுன் சார், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் சார்னு இந்த படத்துல அங்கமா இருக்குற எல்லாருக்கும் எனது வாழ்த்துகள்.அட்லி, லோகேஷ், நெல்சன் எல்லாரும் நம்ம பசங்க. அவங்களை நெனச்சி நான் பெருமை கொள்கிறேன். அவர்கள் மிக திறமையானவர்கள். அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.

பாருங்க, புரட்சி தலைவர்னா ஒருத்தர் தான். நடிகர் திலகம்னா ஒருத்தர் தான். அதே மாதிரி உலக நாயகன் ஒருத்தர் தான். சூப்பர்ஸ்டார்னா ஒருத்தர் தான். தல-னா ஒருத்தர் தான். நீங்கள் மன்னர்கள். நான் உங்களுக்கு கீழ் இருக்கும் தளபதி. நீங்க ஆணையிடுங்க நான் செய்கிறேன்” என விஜய் பேசி முடித்தப் போது ஒலிக்க ஆரம்பித்த கரவொலி அவர் வீடு போய் சேரும் வரை ஒலித்ததாம்

Tags :
Advertisement