தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

2025ம் ஆண்டுக்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள் முழு விபரம்!

06:35 PM Nov 22, 2024 IST | admin
Advertisement

ரும் 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம் ஆண்டில் அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் அரசு விடுமுறை நாட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மொத்தம் 24 நாட்கள் பொதுவிடுமுறையாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் மொத்தம் 5 நாட்கள் உள்ளது. ஜனவரி 1ஆம் தேதி விடுமுறையுடன் 2025ஆம் ஆண்டு தொடங்குகிறது. பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்ட 24 நாள்களில், 3 ஞாயிறும் அடங்கும். 24 நாள்களிலும் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படாது. ஆனால், நவம்பர் மாதம் மட்டும் எந்தவித பொதுவிடுமுறை நாட்களும் கிடையாது.

Advertisement

விரிவாகச் சொல்வதானால்

01. ஆங்கில புத்தாண்டு( ஜன.,01)- புதன்

02. தைப்பொங்கல் (ஜன.,14) - செவ்வாய்

03. மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம்(ஜன.,15) - புதன்

04. உழவர் திருநாள்(ஜன.,16) - வியாழன்

05. குடியரசு தினம் (ஜன.,26)- ஞாயிறு

06.தைப்பூசம்(பிப்.,11) - செவ்வாய்

07. தெலுங்கு வருட பிறப்பு( மார்ச்.,30)- ஞாயிறு

08. ரம்ஜான் பண்டிகை(மார்ச் 31)- திங்கள்

09. வங்கி கணக்கு முடிவு(ஏப்.,01)- செவ்வாய்

10. மகாவீர் ஜெயந்தி(ஏப்.,10)- வியாழன்

11.தமிழ் வருட பிறப்பு (ஏப்.,14) - திங்கள்

12 புனித வெள்ளி(ஏப்.,18)- வெள்ளி

13. தொழிலாளர் தினம்( மே 1) -வியாழன்

14. பக்ரீத் பண்டிகை(ஜூன் 07) -சனி

15. மொஹரம் பண்டிகை( ஜூலை 06) -ஞாயிறு

16. சுதந்திர தினம்( ஆக.,15)- வெள்ளி

17. கிருஷ்ண ஜெயந்தி ( ஆக.,16) - சனி

18. விநாயகர் சதுர்த்தி( ஆக.,27) -புதன்

19. மீலாடி நபி( செப்.,09) - வெள்ளி

20. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை( அக்.,01)- புதன்

21.விஜயதசமி( அக்.,02) - வியாழன்

22. காந்தி ஜெயந்தி( அக்.,02) - வியாழன்

23. தீபாவளி ( அக்.,20) - திங்கள்

24. கிறிஸ்துமஸ் பண்டிகை(டிச.,25) - வியாழன்

ஆகிய நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

எந்தெந்த கிழமையில் எத்தனை நாள் அரசு விடுமுறை!

ஞாயிறு- 3

திங்கள் -3

செவ்வாய்- 3

புதன்- 4

வியாழன்- 6

வெள்ளி- 3

சனி- 2

மொத்தம் -24

Tags :
2025full detailsgovernmentholidaysTamil Nadu
Advertisement
Next Article