தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு தொழில் நிறுவனங்கள் வழங்கிய நன்கொடைகள் முழு விவரம்!

09:43 AM Mar 15, 2024 IST | admin
Advertisement

ந்தியாவில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் முறை கடந்த 2017-ம் ஆண்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு 2019-ம் ஆண்டில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க நினைப்போர் எஸ்பிஐ வங்கியில் தேர்தல் பத்திரங்கள் வாங்கி, அதன்மூலம் நன்கொடையை வழங்கலாம்.இதில் நன்கொடை வழங்கியவர்களின் பெயர் விபரம் வெளியே தெரியாது. இந்நிலையில் தான் தேர்தல் பத்திரம் முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு தேர்தல் பத்திரம் செல்லாது என அதிரடியாக தீர்ப்பளித்தது.

Advertisement

சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி எஸ்பிஐ வங்கி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் நேற்று முன்தினம் வழங்கியது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் தற்போது அந்தப் பட்டியலைத் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பட்டியல்களில் நன்கொடையாளர்கள் மற்றும் கட்சியின் விவரங்கள் தனித்தனியாக பட்டியலிடப்பட்டுள்ளன. எந்தெந்த நன்கொடையாளர்கள் எந்தெந்த கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் மூலமாக நிதியளித்தார்கள் என்பதைக் குறிப்பிடாமல், அதன் அசல் வடிவில் தரவுகளைச் சமர்ப்பிக்க வேண்டுமென எஸ்பிஐக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதால் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது..!

Advertisement

முதல் பட்டியல்  காண - ஆந்தை ரிப்போர்ட்டர் தேர்தல் பத்திரம் - என்ற லிங்க்கை கிளிக் செய்யவும் 

இரண்டாம் பட்டியல் காண - ஆந்தை ரிப்போர்ட்டர் தேர்தல் பத்திரம் 2 - என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்

நேற்று எ ஸ்பிஐ வங்கி தாக்கல் செய்த தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களில், "கடந்த 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15ஆம் தேதி வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 22,030 பத்திரங்கள் அரசியல் கட்சிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 187 பத்திரங்களின் தொகை பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற்ற கட்சிகளின் பட்டியலில், பாரதிய ஜனதா கட்சி, இந்திய காங்கிரஸ் கட்சி, அதிமுக, சிவசேனா, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், திமுக, ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி போன்ற இந்தியாவின் முன்னணி கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகம் நிதி பெற்ற அரசியல் கட்சியாக பாஜக உள்ளது.

Tags :
Election BondElection Commision of IndiaSBISCsupreme court of india
Advertisement
Next Article