தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

2025–26 ஆம் கல்வியாண்டு முதல், 2 முறை பொதுத் தேர்வு - மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு!

08:00 PM Feb 20, 2024 IST | admin
Advertisement

ள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்டத்தை (NCF) ஒன்றிய அரசு கடந்த ஆண்டு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து பொதுத் தேர்வுகள் நடத்தும் முறையில் பெரிய அளவில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. அதாவது, ஓராண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. பொதுத் தேர்வுக்கு தயாராகும் வகையில் மாணவர்களுக்கு போதுமான கால அவகாசம் வழங்குவதற்காக இந்த முறை நடைமுறைப்படுத்த உள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்தது.

Advertisement

மேலும், 2 பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டாலும், மாணவர்கள் 2 தேர்வுகளில் எந்த தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்கிறார்களோ அதையே இறுதி மதிப்பெண்ணாக எடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கும், மாநில பாடத்திட்டங்களின் கீழ் பயிலும் மாணவர்களுக்கும் இந்த முறை பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

ஆனால், இந்த முறை எப்போதிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், வரும் 2025–26 ஆம் கல்வியாண்டு முதல் இந்த முறை நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.

Tags :
2 times2025-26academic yearDharmendra PradhanPublic ExaminationUnion Education Minister
Advertisement
Next Article