தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

இலவச திரைப்படப் படிப்புகள்- ஆன்லைனில் வழங்குகிறது ராமோஜி ராவ் அகாடமி1

06:20 PM Apr 06, 2024 IST | admin
Advertisement

டகங்களிலேயே சக்தி வாய்ந்ததாக திகழ்கிறது சினிமா. சினிமா துறையில் சாதித்தவர்களை ஆட்சியில் அமர வைத்து அழகு பார்க்கும் வரலாறு கொண்டது தமிழகம், சினிமா என்னும் கனவுத் தொழிற்சாலைக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள், அதற்கான தொழில்நுட்ப படிப்பை கற்பதும் அவசியம். இந்த சினிமா துறை போட்டி நிறைந்தது என்பதால் உடனடியாக சாதிக்க இயலாவிட்டாலும் தொடர் மற்றும் புதுமையான மாற்று முயற்சிகள், கடின உழைப்பு, தனித் திறன்கள், புது யுக்திகள் மூலம் சாதனையாளர் ஆகலாம்.

Advertisement

தமிழகத்தில் தரமணியில் எம்.ஜி.ஆர். திரைப்பட அரசுக் கல்லூரி இயங்குகிறது. இங்கு டிப்ளமோ இன் ஃபிலிம் டெக்னாலஜி அண்டு டி.வி. புரடக்‌ஷன் (சினிமோடோகிராஃபி), டிப்ளமோ இன் சவுண்ட் இன்ஜினீயரிங் அண்டு சவுண்ட் ரிக்கார்டிங், ஃபிலிம் பிராசஸிங் கோர்ஸ் ஆகிய கோர்ஸ்களில் சேர விரும்புவோர், பிளஸ் 2-வில் இயற்பியல், வேதியியல் பாடப் பிரிவை எடுத்திருக்க வேண்டும்.அரசு திரைப்படக் கல்லூரியை தவிர்த்து எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் திரைப்படக் கல்லூரி இயங்குகிறது. தவிர, புனா உள்ளிட்ட வட மாநிலங்களில் உள்ள திரைப்படக் கல்லூரிகளிலும் படிக்கலாம்.

Advertisement

அதே சமயம் ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம்சிட்டியில் உள்ள ராமோஜி அகாடமி ஆஃப் மூவிஸ் சார்பில், திரைப்பட உருவாக்கம் குறித்தான படிப்புகள் இலவசமாக அன்லைனில் வழங்கப்படுகின்றன. கதை, திரைக்கதை எழுதுவது, இயக்கம், எடிட்டிங், படத் தயாரிப்பு, டிஜிட்டல் திரைப்பட உருவாக்கம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இதில் படிக்கலாம். இதில் சேர்பவர்களுக்கு ஆன்லைன் தகுதித் தேர்வு வைக்கப்படும். 15 வயதுக்கு மேற்பட்ட யாரும் விண்ணப்பிக்கலாம்.

தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு, மராத்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இங்குக் கற்றுக்கொடுக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு www.ramojiacademy.com என்ற இணையதள முகவரிக்குச் சென்று பார்க்கலாம்.

Tags :
actingactionactorBollywoodCinemaCinematographycoursesdirectionDirectorfilmFilmCoursesFilmEditingFilmIndustryFilmMakersFilmMakingFilmProductionFilmSchoolIndianCinemaIndianFilmskollywoodMoviesPhotographyRamRamojiRamojiAcademyScreenPlayScreenWritingshortfilmStorytellingTollywood
Advertisement
Next Article