தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

"நான் முதல்வன்" திட்டத்தின் மூலம் இலவசமாக கார் டிரைவர் பயிற்சி!

08:52 PM Nov 24, 2024 IST | admin
Advertisement

வாகன ஓட்டுநர்களுக்கு உலகளவில் தேவை அதிகரித்து வருவதால், குறிப்பாக ஜப்பான் போன்ற நாடுகளில் வாகன ஓட்டுநர்களுக்கு தேவை அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் அதற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இப்போது இலவச தொழில்முறை ஓட்டுநர் பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட உள்ளன. 45 நாள் இலகுரக வாகனம், கனரக வாகனம் மற்றும் 30 நாள் போர்க்லிப்ட் ஆபரேட்டர் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.

Advertisement

8வது, 10வது அல்லது 12வது வகுப்பு தகுதிகளை கொண்ட விண்ணப்பதாரர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைய முடியும். ரெட் ஹில்ஸ், மறைமலைநகர், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் பயிற்சி மையங்கள் உள்ளன. வரும் நாட்களில் மற்ற பகுதிகளுக்கு இந்த திட்டம் விரிவாக்கப்பட உள்ளது. இந்த முன்முயற்சி உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் வாகன ஓட்டுனர் வேலைவாய்ப்புகளை பெற உதவியாக இருக்கும். மாணவர்கள் பலருக்கு புதிய வாய்ப்புகளை நான் முதல்வன் திட்டம் வழங்கி வருகிறது. இன்னும் சொல்லப்போனால் தனியார் பள்ளிகளில் இருப்பவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை விட பெரிய வாய்ப்புகள் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

அந்த வகையில்தான் தமிழ்நாட்டில் வேலை தேடிக்கொண்டு இருக்கும் இளைஞர்களுக்கு என்று சிறப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்களா நீங்கள்? தற்போது கல்லூரி முடித்து அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? வேலை தேடும் 21 முதல் 24 வயதுக்கு உட்பட்ட 1 கோடி இளைஞர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் கிடைக்கும் 12 மாத இன்டர்ன்ஷிப் வாய்ப்பு. இதை பயன்படுத்த தவற வேண்டாம். இதற்காக மாதம் ரூ.5000 மாத ஊக்கத்தொகை வழங்கப்படும். இளைஞர்களின் ஆர்வத்தை பொறுத்து, எந்த துறையில் விரும்புகிறீர்களோ அந்த துறையில் 5 இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் தேர்வு செய்யலாம்.

10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, பாலிடெக்னிக், ஐடிஐ, டிப்ளமோ, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்தவர்கள் இதற்கு தகுதியானவர்கள். குடும்பத்தின் கடந்த ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கு மேல் இருக்கக்கூடாது.

மேலும் விவரங்களுக்கு, தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் இணையதளம் பாருங்கள்: www.naanmudhalvan.tn.gov.in. விண்ணப்பிக்க QR Codeஐ ஸ்கேன் செய்யவும்.’’இவ்வாறு தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஜப்பான் போன்ற நாடுகளில் வாகன ஓட்டுநர்களுக்கு தேவை அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் அதற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இப்போது இலவச தொழில்முறை ஓட்டுநர் பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட உள்ளன.

Tags :
car driverNaan Mudhalvan Schemeகார் ஓட்டுநர்
Advertisement
Next Article