தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

குஜராத்தில் போலி நீதிமன்றம் அமைத்து மோசடி!

06:26 PM Oct 22, 2024 IST | admin
Advertisement

பிரதமர் மோடியின் சொந்த மண்ணில் போலி வங்கி, போலி அரசு அலுவலகங்கள், போலி சுங்கச்சாவடிகள் வரிசையில், ஒரு நபர் ஒரு போலி நீதிமன்றத்தை நிறுவி மோசடி செய்த சம்பவம் அம்பலத்து வந்து அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.அந்த நபர் தன்னை நீதிபதியாக அடையாளப்படுத்தி பல உத்தரவுகளையும் பிறப்பித்தது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன், கடந்த 2019-ம் ஆண்டு அரசு நிலம் தொடர்பான வழக்கில், தனது கட்சிக்காரருக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பித்ததால், கடந்த 5 ஆண்டுகளாக நீதிமன்றம் செயல்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

Advertisement

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், சமீபத்தில், போலி அரசு அலுவலகம் செயல்பட்டு வந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது, போலி நீதிமன்றம் நடைபெற்று வந்தது தெரிய வந்துள்ளது. இதுதான் பிரதமர் மோடியின் குஜராத் மாடல் என விமர்சிக்கப்பட்டு வருகிறது.போலியான ஐபிஎல் முதல் போலி நீதிமன்றங்கள் வரை அனைத்து போலி திட்டங்களிலும் குஜராத் முன்னிலை வகிக்கிறது என்றும் பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்தில், அடுத்தடுத்து நடைபெறும் சட்டவிரோத சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்படும் வருகிறது.

Advertisement

குஜராத் மாநில தலைநகர் காந்திநகரில் வசிக்கும் மாரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன் என்ற நபர், அகமதாபாத்தில் ஐந்தரை ஆண்டுகளாக போலி நீதிமன்றத்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது, இவர் நிலம் தொடர்பான விஷயங்களில் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவாக, தானே நடுவராக ஆள்மாறாட்டம் செய்து போலி நீதிமன்றம் நடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டுஉள்ளது. இவர் போலி உத்தரவுகளை (ஆர்டர்கள்) வழங்கியது தொடர்பான புகாரில் காவல்துறை விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட போலி நீதிபதியை கைது செய்து, அந்த நீதிமன்றமும் மூடப்பட்டுள்ளது.

அகமதாபாத்தில் உள்ள கரஞ்ச் காவல்நிலையத்தில் சிட்டி சிவில் நீதிமன்றத்தின் பதிவாளர் ஹர்திக் சாகர் தேசாய் தாக்கல் செய்த புகாரின் அடிப்படையில், அகமதாபாத் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இந்த போலி நீதிமன்றம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கிறிஸ்டியன் தன்னை நடுவர் மன்றத்தின் நீதிபதியாகக் காட்டி மக்களை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. மேலும் சட்ட தகராறுகளைத் தீர்ப்பதற்காக நீதிமன்றத்தால் நடுவராக நியமிக்கப்பட்டதாகக் கூறி சாதகமான உத்தரவுகளைப் பிறப்பித்ததாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.தான் நீதிமன்ற தலைமையால் அமைக்கப்பட்ட ஒரு மத்தியஸ்தர் எனக்கூறி மாரிஸ் சாமுவேல் கிறிஸ்டியா என்பவர் நீதிமன்றம் போன்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் மனுக்களைப் பெற்று நிலம் தகராறு தொடர்பான வழக்குகளை நீதிமன்றம் போலவே அலுவலகத்தை உருவாக்கி அதில் வைத்து விசாரித்து தீர்ப்பளித்து வந்துள்ளார்.

இந்த போலி நீதிமன்றம் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Tags :
fake courtfraudGujaratsetting upகுஜராத்போலி கோர்ட்
Advertisement
Next Article