கருக்கலைப்பு உரிமையை அரசியலமைப்பில் வழங்கும் முதல் நாடானாது பிரான்ஸ்!
நம் இந்தியாவை பொறுத்தவரை, 1971-ம் ஆண்டுக்கு முன்புவரை கருக்கலைப்பு சட்டவிரோதமாக கருதப்பட்டது. இதன்பின் சாந்திலால் ஷா தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் கருக்கலைப்பு செய்ய சில வழிகாட்டுதல்களுடன் அனுமதி வழங்க அக்குழு பரிந்துரைத்தது. அதன்படி MTP(medical termination of pregnancy regulation)படி அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் உரிய வழிகாட்டுதலின் கீழ் மட்டும் கருக்கலைப்பு செய்யலாம் என அனுமதி வழங்கப்பட்டு தற்போது வரை நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டு பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்கு சட்ட உரிமை கோரி போராடி வருகின்றனர். அதேவேளையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இதனை சட்டமாக நிறைவேற்றவும் உறுதியளித்திருந்தார். இதன்படி பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நடந்த கூட்டத்தொடரில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஐந்தில் மூன்று பங்கு வாக்குகள் பெற்றால் சட்டமசோதா நிறைவேற்றப்படும் என்ற சூழலில், கருக்கலைப்பு சட்டத்துக்கு ஆதரவாக 780 வாக்குகளும், எதிராக 72 வாக்குகளும் கிடைத்தன. இதனடிப்படையில் மிகப்பெரிய ஆதரவோடு கருக்கலைப்பு சட்டமசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் கருக்கலைப்பு உரிமை மசோதாவை நிறைவேற்றி அரசியலமைப்பில் பதிவு செய்த முதல் நாடாக பிரான்ஸ் உள்ளது. இதைதொடர்ந்து பலர் ஆதரவளித்தாலும், இந்த சட்டமசோதாவிற்கு பல வலது சாரி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2022ல் , பெண்கள் கருக்கலைப்பு செய்வது அடிப்படை உரிமை இல்லை என்று அமெரிக்காவில், அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு பிறகு பிரான்ஸில் கருக்கலைப்பு உரிமையை பெண்களின் தனிப்பட்ட உரிமையாக மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை குரல்கள் ‘என் உடல் என் உரிமை’ என்கிற கோஷத்துடன் வலுத்தது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இதற்கான உறுதிமொழியை அளித்திருந்த நிலையில், பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பெண்களின் அடிப்படை உரிமையாக கருக்கலைப்பை அங்கீகரிக்கும் சட்ட மசோதா நேற்று நிறைவேறியது.
பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டுக்கூட்டத்தில் கருக்கலைப்பு மசோதாவிற்கு ஆதரவாக 780 உறுப்பினர்களும், எதிராக 72 உறுப்பினர்களும் வாக்களித்தனர். மொத்த உறுப்பினர்களில் ஐந்தில் மூன்று பங்கு உறுப்பினர்கள் ஆதரவு வாக்களித்தால் போதும் என்ற நிலை இருந்தது. ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான உறுப்பினர்கள் ஆதரவுடன் இந்த மசோதா பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதன் மூலம் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமையை வழங்கும் முதல் நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது.
இது குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் திரண்ட மக்கள், ஈபிள் கோபுரத்தில் "எனது உடல், எனது விருப்பம்" என்கிற வாசகங்களுடன் வண்ணவிளக்குகள் மின்ன மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். சர்வதேச பெண்கள் உரிமைகள் தினமான மார்ச் 8ம் தேதி, சட்டதிருத்தம் நிறைவேற்றப்பட்டதைக் கொண்டாடும் வகையில், இதை விழாவாக அரசாங்கம் நடத்தும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். அதாவது
முக்கியத்துவம் வாய்ந்த சட்டங்களுக்கு பாரம்பரிய முறைப்படி ‘சீலிங் செரிமனி’ விழா அந்த நாட்டில் நடத்தப்படும். அந்த வகையில் இதற்கு வரும் மகளிர் தினத்தன்று (வெள்ளிக்கிழமை) சீலிங் செரிமனி நடைபெறும் என அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.