For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் பிஷன் சிங் பேடி (77) காலமானார்

06:39 PM Oct 23, 2023 IST | admin
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் பிஷன் சிங் பேடி  77  காலமானார்
Advertisement

ம் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சுழல் ஜாம்பவானுமான பிஷன் சிங் உடல் நலக்குறைவு காரணமாக தனது 77ஆவது வயதில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பிசிசிஐ இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும், கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னையில் நடக்கும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போட்டியின் போது கூட கிரிக்கெட் வர்ணனையாளர்கள் பிஷன் சிங் பேடி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர் .

Advertisement

பிஷன் சிங் பேடி ஒரு இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆவார், 1967 தொடங்கி 1979 வரை 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 266 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 10 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தியாவின் சுழற்பந்து வீச்சு வரலாற்றில் ஒரு வகையான புரட்சியை உருவாக்கியவர் பேடி. மேலும் இந்தியாவின் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார். இவர் 22 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்தார்.

Advertisement

அமிர்தரஸில் பிறந்த இவர், மொத்தமாக 370 போட்டிகளில் விளையாடி 1,560 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். 1970-ம் ஆண்டு பிஷன் சிங் பேடிக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.1990களில் இந்திய அணியின் பயிற்சியாளராக பணியாற்றினார்.

இந்திய அணியில் இருந்து விலகிய பிறகு, பேடி சில மாநில அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்தார். 1992-93 சீசனில் பஞ்சாப் அணி ரஞ்சி டிராபி கோப்பையை வெற்றி கொள்வதற்குக் காரணமாக இருந்தார்

பின்னாள்களில் ஜென்டில்மேன் கேமில் வர்ணனையாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் கிரிக்கெட்டில் எப்போதும் வெளிப்படையாக பேசுபவர் ஆவார். இந்நிலையில் நீண்ட நாள் உடல்நலக்குறைவால் சிகிச்சைபெற்று வந்தவர் இன்று காலாமானார். அவருக்கு கிரிக்கெட் உலகத்தைச் சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags :
Advertisement