For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு விடுதலை.!

07:41 PM Oct 31, 2023 IST | admin
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு விடுதலை
Advertisement

ந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான என் சந்திரபாபு நாயுடு, அவரது ஆட்சி காலத்தில் (2014-19) இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக திறன் மேம்பாட்டு கழகத்தில் சீமென்ஸ் நிறுவனம் மூலம் பொறியியல் கல்லூரிகள் உட்பட தொழில்நுட்ப கல்லூரி மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதில் ஆந்திர அரசு 10 சதவீதம் நிதி வழங்கியது. 10 சதவீதம் மற்றும் ஜிஎஸ்டி ரூ.40 லட்சம் என மொத்தம் ரூ. 371 கோடி நிதியை சீமென்ஸ் நிறுவனத்திற்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதலின் பேரில் அப்போதைய சந்திரபாபு நாயுடு அரசு வழங்கியது.இதில் ரூ.118 கோடி ஊழல் நடந்ததாகவும், அதில் சந்திரபாபு நாயுடுவுக்கு தொடர்பு இருப்பதாகவும் கடந்த 2021ம் ஆண்டில் தற்போதைய ஜெகன் அரசு குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக சிஐடி போலீஸார் 2021ம் ஆண்டே வழக்குபதிவு செய்தனர். தொடர் விசாரணைக்குப் பின்னர் அந் நிதியில் சுமார் 371 கோடி ரூபாய் வரையில் ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக, கடந்த செப்டம்பர் 9ம் தேதி அதிகாலை குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு 53 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் இருந்தவருக்கு ஐகோர்ட் நிபந்தனை ஜாமீன் வழங்கிய நிலையில் இன்று விடுதலையானார்.

Advertisement

முன்னதாக சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆந்திரா மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருந்தும் சந்திரபாபு நாயுடுவுக்கு தொடர்ந்து நீதிமன்ற காவல் விதித்து ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார். சந்திரபாபு நாயுடு கைது ஆந்திர மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து, சந்திரபாபு நாயுடுவின் முன்ஜாமீன் மனுக்களை ஆந்திர ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அக்டோபர் 18 அன்று நாயுடுவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் அவரை ராஜமகேந்திராவரம் மத்திய சிறையில் சந்தித்து அவரது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் நாயுடுவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தனர்.

Advertisement

இந்த நிலையில், சந்திரபாபு நாயுடுவின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு ஆந்திர ஐகோர்ட் நான்கு வாரங்களுக்கு நவம்பர் 24ஆம் தேதி வரை நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இதனால் நவம்பர் 24ம் தேதி சந்திரபாபு நாயுடு மீண்டும் சரணடைய உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 10ம் தேதி முக்கிய ஜாமீன் மனு மீதான வாதங்களை நீதிமன்றம் விசாரிக்கும். மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர வேறு எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கக் கூடாது என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஊடகங்கள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் சந்திரபாபு நாயுடு பங்கேற்கக் கூடாது எனவும் உத்தரவிட்டது.

ஒருவழியாக் , தற்போது 53 நாட்கள் நீதிமன்ற காவலுக்குப் பிறகு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி மத்திய சிறையில் இருந்து இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வெளியே வந்து அனைவர் மத்தியிலும் பேசிய சந்திரபாபு நாயுடு, “நான் கஷ்டத்தில் இருந்தபோது, ​​நீங்கள் அனைவரும் சாலைகளில் வந்து எனக்காக பிரார்த்தனை செய்தீர்கள். ஆந்திரா மட்டுமின்றி, தெலுங்கானாவிலும், உலகம் முழுவதும் என் மீது மக்கள் காட்டிய பாசத்தை என்னால் மறக்க முடியாது” என கூறினார்

Tags :
Advertisement