இந்தியாவில் விடுதலை என்பது யாருக்கு?
வளர்ச்சி என்பது விடுதலை என்பார் நோபல் பரிசு அறிஞர் அமிர்தியா சென்.அவர் எழுதிய புத்தகத்தின் தலைப்பே அதுதான்.பட்டினியிலிருந்தும் சுகாதாரக் கேட்டிலிருந்தும் விடுதலை. பாலின ஏற்றத்தாழ்வு,வருமான ஏற்றத்தாழ்விலிருந்தும் விடுதலையை வலியுறுத்துகிறார் அமிர்தியா சென். விடுதலை நோக்கில் கல்வியின் பங்கு பற்றி புத்தகத்தில் விரிவாக அலசுகிறார் சென்
நீடித்த வளர்ச்சி இலக்கு (sustainable development goals? எனும் தலைப்பில் ஐநா தலைமையகத்தில் இரு வாரங்களுக்கு முன் நடந்த ஆய்வுக் கூட்டத்தின் அறிக்கையில் தரப்பட்டிருக்கும் தற்போதைய இந்தியாவின் வளர்ச்சி நிலை பற்றிய விவரங்கள் நம்மை மேலும் கவலையில் ஆழ்த்துகிறது மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டில்(HDI) இந்தியாவின் நிலைமை மோசம் என்பது அறியப்பட்ட உண்மை.நிலைமை மேலும் மோசம் அடைந்து 134 வது இடத்திற்கு- 193 நாடுகளில், இந்தியா தள்ளப்பட்டு இருக்கிறது. அண்டை நாடுகளான மலேசியா(63) தாய்லாந்து(66) சீனா (75) இலங்கை(78) இந்தோனேசியா(112) பூட்டான்(125) பங்களாதேஷ்(129) இடத்திலும் இருக்கின்றன.
நீடித்த வளர்ச்சி இலக்கு குறியீட்டில் பாஜக அரசின் பத்தாண்டு கால ஆட்சியில் முன்னேற்றமே இல்லை. பங்களாதேஷ் பூட்டான் சீனா போன்ற நாடுகள் 10-20 படிகள் மேலேறி இருக்கின்றன. நம் நாட்டில் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை 28.3%. இது மிக மிகக் குறைவு என்கிறது ஐநா அறிக்கை. இதுவே சீனாவில் 53.6% பூட்டானில் 53.5% பங்களாதேஷில் 39.2%.
வருமான ஏற்றத்தாழ்வுக்கு வருவோம். முதல் 1% இந்திய பணக்காரர்களின் வருமானம்(சொத்து அல்ல)21.7% ஆக இருக்கிறது. முதல்1% பணக்காரர்களின் வருமானம் பங்களாதேஷ்(11.6) சீனா(15.7) பூட்டான்(18.1) நேபாளம்(9.7)% உலக அளவில் வருமான ஏற்றத்தாழ்வு(17.5). இந்தியா உலக சராசரிக்கும் மேலாக 4.2% இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.
ஆணாதிக்க,கார்ப்பரேட் ஆதிக்க அரசின் பிடியில் இந்தியா சிக்கித் தவிப்பதை ஐநா அறிக்கை உறுதிப்படுத்துகிறது வளர்ச்சி என்பது விடுதலை எனும் அமிர்தியா சென் தரும் விளக்கப்படி இந்தியாவில் விடுதலை என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே. ஏழைகளுக்கு சிறை