தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

காஸா மக்களுக்கு உதவ நடுக்கடலில் மிதக்கும் மருத்துவமனைகள்!

12:57 PM Nov 11, 2023 IST | admin
Advertisement

ர்வதேச நாடுகளை கவலையுறச் செய்யும் வகையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே, கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் இன்று வரை கடும்போர் நடந்து வருகிறது. தொடர்ந்து 36 வது நாளாக நடந்து வரும் இந்த போரில் இதுவரை இஸ்ரேல் இரண்டுகட்டமாக வான்வழி தாக்குதல் நடத்திய நிலையில், மூன்றாவது கட்டமாக தரை வழி தாக்குதலைத் தொடங்கியது. இஸ்ரேல் ராணுவத்தின் நஹாஸ் காலாட்படை பிரிவினர் காஸாவில் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தியதால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவிலிருந்து வெளியேறியுள்ளனர். இந்த போர் தொடங்கியதில் இருந்து இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுவருகிறது. காசா சுகாதார அமைச்சகத்தின்படி, 11,070 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸா மக்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்ய இந்தோனேஷியா மற்றும் இத்தாலி நாடுகளின் போர்க்கப்பல்கள் மத்திய தலைக்கடல் பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

Advertisement

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் ஒரு மாதத்தை கடந்து நீடித்து வருகிறது. ஹமாஸை ஒழிக்காமல் ஓயமாட்டோம் என்று சூளுரைத்த இஸ்ரேல், போர் நிறுத்தத்திற்கு செவி சாய்ப்பதாக இல்லை. இதன் உச்சமாக காஸாவிற்குள் நுழைந்த இஸ்ரேல் படையினர், ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கும் கட்டடங்கள் அனைத்தையும் குண்டு வைத்து தகர்த்து தரைமட்டமாக்குகினர். இதில் காஸாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைகளும் குண்டுகளுக்கு இரையாகின.

இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதலில், 4 ஆயிரத்து 300 குழந்தைகள் உட்பட சுமார் 10 ஆயிரத்து 500 பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததாக காஸா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும், காஸாவில் உள்ள 16 மருத்துவமனைகள் குண்டு வீச்சில் சேதம் அடைந்துள்ளதால், மருத்துவ சேவையும் ஸ்தம்பித்துள்ளது. காஸாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, எகிப்தின் ராஃபா எல்லை வழியாக அடிப்படை பொருட்கள் மட்டுமே உலக நாடுகளால் அனுப்பப்படுகிறது. இதனால், மருத்துவ தேவை சிறிதளவு கூட நிறைவேறவில்லை.

Advertisement

இந்நிலையில், காஸாவில் இருந்து சுமார் 1000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்தோனேசியா, மத்திய தரைக்கடல் பகுதிக்கு மிதக்கும் கப்பல்களை அனுப்ப இருப்பதாக அறிவித்திருக்கிறது. 124 மீட்டர் நீளம் கொண்ட இந்தோனேசியாவின் இப்போர்க் கப்பலில், சுமார் 500 பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும். 3 ஹெலிகாப்டர்களுடன் 30 நாட்கள் கடலில் தாக்குப்பிடிக்கக்கூடிய இக்கப்பலில், 66 மருத்துவ பணியாளர்களை அனுப்பவும் இந்தோனேசியா ஆயத்தமாகி வருகிறது.

Tags :
Floating hospitalshelp GazaIsrealPalastens!
Advertisement
Next Article