தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

திமுக இளைஞரணி மாநாட்டுக்கான சுடர் தொடர் ஓட்டம் : உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்!

12:54 PM Jan 18, 2024 IST | admin
Advertisement

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்துள்ள ஏத்தாப்பூரில் திமுக இளைஞரணி மாநாடு வருகிற 21-ம் தேதி மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் 5 லட்சத்துக்கும் அதிகமான நிர்வாகிகள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு நடைபெறும் மாநாடு என்பதால் இதை வெற்றி மாநாடாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டையொட்டி இன்று காலை சென்னை அண்ணாசாலை சிம்சன் சந்திப்பு அருகே உள்ள பெரியார் சிலை அருகில் இருந்து மாநாட்டுக்கு சுடர் தொடர் ஓட்டத்தை  உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டு மாநாடு வருகின்ற 21ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக தலைவர் இளைஞர் அணியின் மாநாடு பொறுப்பை எனக்கு கொடுத்தது மிகப்பெரிய சவால். அதை நாம் வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும். இந்த மாநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இது கூடி கலைந்த கூட்டம் அல்ல , கொள்ளை கூட்டம் என்பதை நிரூபிக்க வேண்டும். 2024ஆம் ஆண்டு தேர்தலில் இந்தியாவை காப்பாற்றவும் இளைஞர் அணி செயல்படும். அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. 3 முதல் 4 லட்சம் இளைஞர்கள் மாநாட்டிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.310 கிலோ மீட்டருக்கு சுடர் ஏந்தி தொடர் ஓட்டம் நடைபெறும். அதனை இறுதியாக சேலத்தில் தலைவரிடம் கொடுக்கப்படும். 85 லட்சம் கையெழுத்துகள் நீட் தேர்வை வேண்டாம் என கோரி மக்களிடம் வாங்கி உள்ளோம். மாநாட்டின் போது அதனையும் திமுக தலைவரிடம் ஒப்படைப்போம்.பின்னர் நேரடியா நானே குடியரசு தலைவரை சந்தித்து அதனை வழங்க உள்ளேன்..” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Advertisement

மேலும் அவரிடம், “ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்பது அவரவர் விருப்பம் அதை அரசியலாக பார்க்கக்கூடாது” என்று அதிமுக கூறியுள்ள கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், ‘அது அவர்களுடைய கருத்தாக இருக்கலாம். திமுக எந்த மதத்துக்கும், நம்பிக்கைக்கும் எதிரானது கிடையாது என்று கலைஞர் ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். ராமர் கோயில் திறப்புக்கோ, மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல. அங்கே கோயில் வருவது எங்களுக்குப் பிரச்சினை கிடையாது. ஆனால் அங்கே இருந்த மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எங்கள் பொருளாளரும் ஏற்கெனவே இதுதொடர்பாக, “ஆன்மிகத்தையும் அரசியலையும் ஒன்றாக்காதீர்கள்” என்று சொல்லியிருக்கிறார் என்றார். “கால் வலி இருப்பதால் ராமர் கோயில் விழாவில் பங்கேற்பது குறித்து யோசிக்கிறேன்” என இபிஎஸ் கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, இருக்கலாம், “அவர் தவழ்ந்து தவழ்ந்து நிறைய போவதால் அவருக்கு அடிக்கடி கால் வலி வரலாம்” என்று கூறிச் சென்றார்.

இந்நிலையில் இன்று தொடங்கி வைத்த இந்த சுடர் தொடர் ஓட்டம் அண்ணாசாலை, பிலால் ஓட்டல், ஸ்பென்சர் சிக்னல், ஆயிரம் விளக்கு மெட்ரோ, ஆயிரம் விளக்கு மசூதி, அண்ணா மேம்பாலம் அமெரிக்க தூதரகம், அண்ணா அறிவாலயம், அன்பகம் சைதாப்பேட்டை, நந்தனம் கலைக் கல்லூரி, கிண்டி கத்திபாரா, ஆலந்தூர் மெட்ரோ, மீனம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், சிங்க பெருமாள் கோவில், செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல் மருவத்தூர், அச்சரப்பாக்கம், திண்டிவனம், மயிலம், விக்கிரவாண்டி, விழுப்புரம், அரசூர், உளுந்தூர்பேட்டை, தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், தலைவாசல் ஆத்தூர் வழியாக பெத்த நாயக்கன் பாளையத்துக்கு 20-ம் தேதி மதியம் 1.30 மணிக்கு சென்றடைகிறது.

சேலம் மாநாட்டு திடல் முன்பு மாநாட்டு சுடரை மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் மற்றும் துணைச் செயலாளர்கள் பெற்றுக்கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் அதை ஒப்படைக்க இருக்கிறார்கள். மாநாட்டுச் சுடர் ஓட்டம் செல்லும் இடங்களில் எல்லாம், அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. மாநாட்டு சுடர் தொடர் ஓட்டத்தில் பங்கு பெற்று சுடர் ஏந்தி செல்ல மாவட்ட மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் இளைஞரணி நிர்வாகிகள் ஆகியோர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இதை மாநாடு குறித்த விழிப்புணர்வாகவும் திமுக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

Tags :
DMK Youth ConferenceFlame RelaySalemUdayanidhi Stalinஇளைஞ்ரணி மாநாடுதிமுக
Advertisement
Next Article