For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சிறிய கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி வசூலிக்கத் தடை!

10:32 PM Jan 13, 2019 IST | admin
சிறிய கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி வசூலிக்கத் தடை
Advertisement

ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை நாடெங்கும் அறிமுகப்படுத்தியதில் இருந்து, தொடர்ச்சியான முன்னேற்றங்கள் ஏற்பட்டு கொண்டுதான் வருகின்றன. மாநில நிதி அமைச்சர்கள் பலர் பங்கு பெற்ற, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டங்கள், ஒவ்வொரு முறையும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன.  அதிலும் இங்கேயுள்ள சிறு வணிகர்கள், பெரு வணிகர்கள் என, அனைத்து தரப்பினரும் தெரிவிக்கும் பல்வேறு கருத்துகளை, இந்தக் கவுன்சில் பொறுப்புடன் கவனத்தில் எடுத்துக் கொள்கிறது. அவர்கள் சந்திக்கும் சிரமங்களும், நடைமுறை சிக்கல்களும் மிகச் சரியாக புரிந்து  கொள்ளப் படுகின்றன.அதனால் தான், ஒவ்வொரு கவுன்சில் சந்திப்பிலும், மாறுதல்கள் செய்யப்பட்டு வருகின்றன. தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என, அரசு கடுமை காட்டாமல் இருப்பதே, மிகப்பெரிய வளர்ச்சி தான். சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, ஜி.எஸ்.டி., திருத்தங்கள் மேற்கொள்ளப் படுகின்றன. இதன் ஒரு பகுதியாக சிறிய கடைகளில் நீங்கள் வாங்கும் பொருட் களுக்கு ஜிஎஸ்டி வரி வசூலிக்கின்றனரா? இதற்கு முற்றுப் புள்ளி வைக்க வருகிறது புதிய திட்டம் கொண்டு வர முடிவாகி இருக்கிறது.

Advertisement

இங்குள்ள எல்லா சில்லரை கடைகளில் வாங்கும் பொருட்கள், அது போல வாடிக்கையாளர்களுக்கு தரப்படும் சேவைகளுக்கு 0.05 வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. உண்மையில் வாடிக்கையாளர்களிடம் இருந்து இப்படி வசூலிக்க தேவையில்லை என்று நிதி அமைச்சகம் சொல்கிறது. இனி வரும் காலங்களில் ஜிஎஸ்டி அறிக்கை தாக்கல் செய்யும் போது, அதில், வாடிக்கையாளர்ளிடம் இருந்து ஜிஎஸ்டி வரி வசூலிக்கவில்லை என்பதற்கான சான்றையும் கேட்க உள்ளது. படிவத்திலயே இதற்கான தனி அம்சங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது.

Advertisement

அதாவது ஜிஎஸ்டி வரி திட்டத்தில் வியாபாரிகள், சேவை நிறுவனங்களுக்கு காம்போசிஷன் வரி முறை என்று தனி வரி முறை உள்ளது. ஒரு கோடி ரூபாய் வரை மொத்த ஆண்டு வர்த்தகம் செய்வோர் இந்த முறைக்கு விருப்பம் தெரிவிக்கலாம். இதன்படி, தயாரி்ப்பாளர்கள், அவர்களிடம் பொருட்களை வாங்கும் சிறிய வியாபாரிகள் பரஸ்பரம் மொத்த வர்த்தகத்தில் தலா ஒரு சதவீதம் வரி செலுத்த வேண்டும். இப்படி செலுத்தும் போது, வாடிக்கையாளர்களிடம் வரி வசூலிக்க கூடாது என்பது தான் இந்த முறையில் அரசு அளித்துள்ளது சலுகை.

இதை சில வியாபாரிகள் சரிவர செய்வதில்லை. ஜிஎஸ்டி வரியை வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலித்து, அரசுக்கு கட்டுவதில்லை. இதற்காக தான் காம்போசிஷன் வரி முறையை கொண்டு வந்தது அரசு. ெமாத்தம் பதிவு செய்துள்ள 1.17 கோடி வர்த்தகர்களில் 20 லட்சம் பேர் இப்படி காம்போசிஷன் வரி முறையில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்கள் இனி, ஜிஎஸ்டி அறிக்கை தாக்கலின் போது, வாடிக்கையாளர்களிடம் இருந்து வரி வசூலிக்கவில்லை என்பதை உறுதிபடுத்த வேண்டும். இந்த வியாபாரிகள் மொத்த வர்த்தக வரம்பு ஒரு கோடி ரூபாய் என்று ஜிஎஸ்டி கவுன்சில் நிர்ணயித்துள்ளது. விரைவில் இந்த அளவு 1.5 கோடியாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement