50% இந்தியர்களிடம் நிதி மோசடி: ஆய்வில் அம்பலம்!
நிதி மோசடிகளில் ஈடுபடும் நிறுவனங்கள் வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு விதங்களில் மக்களிடம் கைவரிசை காட்டிவருகின்றன. காவல்துறை இந்த மோசடிகள் தொடர்பாக விசாரணை, நடவடிக்கை எடுத்துவந்தாலும் எதுவும் குறைந்தபாடில்லை. கடந்த நிதியாண்டில் நிதி மோசடியின் எண்ணிக்கை 166 சதவீதம் அதிகரித்துள்ளது. ரூ.13,930 கோடி அளவுக்கு பொதுமக்கள் பணம் மோசடி செய்யப்பட்டு உள்ளது. நாட்டில் பெரும்பாலான மக்கள் இணையவழி பணப் பரிவர்த்தனை தளமான ‘யுபிஐ’ மற்றும் கிரெடிட் கார்டுகளில் பணப்பரிவர்த்தனை செய்கின்றனர். ஆனால் அதில் அதிகப்படியான மோசடிகள் பதிவாகியுள்ளன.
இணையவழி நிதி மோசடி தொடர்பாக 302 மாவட்டங்களில் 23,000 பேரிடம் ‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ என்ற அமைப்பு ஆய்வு நடத்தியது. 302 மாவட்டங்களில் 23,000 பேரிடம் ‘லோக்கல் சா்க்கிள்ஸ்’ என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், ‘53 சதவீதம் மக்கள் தங்களது கடன் அட்டைகளில் (கிரெடிட் கார்டுகளில்) உள்நாட்டு அல்லது வெளிநாட்டு வணிகா்கள் அல்லது இணையதளங்களில் அங்கீகரிக்கப்படாத கட்டணங்களைச் சுமத்தியுள்ளதாக தெரிவித்தனா். 36 சதவீதம் மக்கள் இணையவழி பணப் பரிவா்த்தனை தளமான ‘யுபிஅய்’யில் நிதி மோசடியை எதிர்கொண்டதாகத் தெரிவித்தனா்.
கடந்த மூன்று ஆண்டுகளில், நிதி மோசடியில் சிக்கிய 10-இல் 6 இந்தியா்கள் மோசடி குறித்து ரிசா்வ் வங்கி அல்லது சட்ட அமலாக்க நிறுவனங்களிடம் புகாரளிப்பதில்லை. ரிசா்வ் வங்கி தரவுகளின்படி, கடந்த நிதியாண்டில் நிதி மோசடியின் எண்ணிக்கை 166 சதவீதம் அதிகரித்துள்ளது. ரூ.13,930 கோடி அளவுக்கு பொதுமக்கள் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டிருந்தது.
மேலும் ரிசர்வ் வங்கி தரவுகளின்படி, கடந்த நிதியாண்டில் நிதி மோசடியின் எண்ணிக்கை 166 சதவீதம் அதிகரித்துள்ளது. ரூ.13,930 கோடி அளவுக்கு பொதுமக்கள் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. எனவே நிதி மோசடிகளைத் தடுக்க பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான அவசரத் தேவை உள்ளது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழக டிஜிபி ``இந்த ஆண்டில் மட்டும் ஆருத்ரா, ஹிஜாவு போன்ற 22 வெவ்வேறு நிறுவனங்களின் நிதி மோசடிகள் அம்பலமாகியிருக்கின்றன. அவற்றில் 87 பேருக்கு எதிராக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் 3,703 பேரிடம் ரூ.157.44 கோடி மோசடி செய்துள்ளனர். இந்த மோசடிகள் இதுவரை 141 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ரூ.104.05 கோடி மதிப்பிலான சொத்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் ரூ.25.81 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன`` என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.