தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

விழாக்கால மோசடிகள்..-பயனர்களை எச்சரிக்கும் ஜிமெயில்!

09:10 PM Dec 20, 2024 IST | admin
Advertisement

நாளுக்கு நாள் டெக்னாலஜி வளர்ச்சியின் காரணமாக தகவல் பரிமாற்றம் மிக விரைவாக நடைபெறுகிறது. சில செயலிகள் இந்த உடனடி தகவல் பரிமாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அப்படி தகவல் பரிமாறுவதற்கு வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட செயலிகள் உள்ள நிலையில், பெரும்பாலான மக்கள் பாதுகாப்பாக மற்றும் முக்கிய தகவலக்ளை பரிமாறுவதற்கு கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் செயலியை பயன்படுத்துகின்றனர். ஜிமெயில் மிகவும் பாதுகாப்பான செயலியாக இருக்கும் பட்சத்தில், அதனை பயன்படுத்தியும் அவ்வப்போது சில மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில், விழாக்கால மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க ஜிமெயில் நிறுவனம் தனது பயனர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

விழாக்கால மோசடி என்றால் என்ன?

இந்தியாவை பொருத்தவரை தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இந்த நிலையில், வழக்கமாக விழாக்காலங்களின் போது நிறுவனங்கள் சில சிறப்பு சலுகைகள் மற்றும் அறிவிப்புகளை வெளியிடும். அந்த வகையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வரவுள்ள நிலையில், சில நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்த சூழலை பயன்படுத்திக்கொண்டு மோசடி கும்பல்கள் சில மோசடியில் ஈடுபட முயன்று வருகிறது. அதாவது, ஏதேனும் சிறப்பு சலுகைகள் உள்ளது என கூறி பொதுமக்களின் மொபைல் எண், வாட்ஸ் அப், மெயில் உள்ளிட்டவற்றுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் மோசடிக்காரர்கள், அதை தொட்டதும் தனிப்பட்ட மற்றும் முக்கிய விவரங்களை திருடி அதன் மூலம் மோசடியில் ஈடுபடுகின்றனர். சமீபத்தில் வாட்ஸ்அப்பில் இத்தகைய மோசடி நடைபெற்ற நிலையில், தனது பயனர்களை பாதுகாப்பாக இருக்க ஜிமெயில் எச்சரித்துள்ளது.

Advertisement

மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

இவ்வாறு செயலிகள் மூலம் மோசடிகள் நடைபெற்று வரும் நிலையில் அதில் இருந்து எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சில வழிகாட்டு நெறிமுறைகளை ஜிமெயில் வெளியிட்டுள்ளது.

பொதுவாக மோசடி தொடர்பான மின்னஞ்சல்கள் பொதுமக்களுக்கு சென்று சேர்வதற்கு முன்பே தடுத்து நிறுத்தப்படுகிறது.

ஒருவேளை உங்களுக்கு விழாக்கால சிறப்பு தள்ளுபடி, பரிசு தொடர்பாக ஏதேனும் மின்னஞ்சல் வந்தால் அதை தொடாமல் இருப்பது உங்களை மோசடியில் இருந்து பாதுகாக்க உதவும்.

ஒருவேளை அத்தகைய மின்னஞ்சல்களை நீங்கள் திறந்துவிட்டீர்கள் என்றால், அதில் இருக்கும் லிங்குகளை கிளிக் செய்யாமல் இருக்க வேண்டும்.

ஜிமெயிலில் ஸ்பேம் பில்டர் வசதி உள்ள நிலையில், பயனர்கள் அதை பயன்படுத்தி மோசடி மெயில்களில் இருந்து பாதுகாப்பாக இருக்காலாம் என்றும் கூறியுள்ளது.

மேலும், ஜிமெயிலில் பாதுகாப்பு கருதி Tw0 – Step Authentication அம்சத்தை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே இத்தகைய மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க கூகுளின் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது அவசியமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Festival scamsந்-GmailusersWarns
Advertisement
Next Article