மனசாட்சிக்காவது பயப்படுங்கள்!
கலப்படம் பண்ணது யாரு? எப்போ? எந்த காலத்தில் பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டன?
கலப்படத்தை கண்டறிந்து தவிர்க்க வேண்டிய இடத்தில் இருந்தவர்கள் யார் யார்?
அவர்கள் மீதான குற்றவியல் நடவடிக்கைகள் என்னென்ன? நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் என்னென்ன?
இதற்கெல்லாம் பதிலே இல்ல. இதையெல்லாம் கேட்டால் இந்துக்கள் மனதை புண்படுத்துகிறார்களாம்..
நடிகர் கார்த்தி அந்த சினிமா விழாவில் என்ன சொன்னார்? "லட்டு விவகாரம் இப்போ சென்சிட்டிவான பிரச்சனை. அத பத்தி பேச வேண்டாம்" என்றார். உடனே கார்த்தியை பிடித்து பிராண்டுகிறார்கள். அவர் பயந்து போய் மன்னிப்பு கேட்கிறார்.லட்டு விவகாரம் சென்சிடிவ் பிரச்சனை என்று சொல்லாமல் செம காமெடி காமெடி பிரச்சினை என்றா கார்த்தி பேசினார்?
நடிகர் பிரகாஷ்ராஜ், "லட்டு விவகாரத்தை வைத்து அரசியல் பண்ணாதீங்கடா.. பீதியை கிளப்பி விடாதீங்க"ன்னு வெளுத்து விட்டு இருக்காரு. அங்க போய் கேட்க துப்பு இல்லை? கலப்படம் என்று வெளியே சொல்லி பக்தர்கள் மனதை புண்படுத்திட்டு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது யாரு?கலப்பட விவகாரத்தில் குற்றவியல் நடவடிக்கை எடுங்கப்பான்னா, அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு 11 நாள் விரதம் இருக்கிறாராம்?
இங்கே இன்னொரு முக்கியமான விஷயத்தை குறிப்பிட்டாக வேண்டும்.
லட்டு கலப்பட தோஷம் நீங்க எல்லோர் வீடுகளிலும் மாலை 6 மணிக்கு விளக்கு ஏற்றி நமோ நாராயணா என்று சொல்லவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்கள்.திருப்பதி வெங்கடாஜலபதியை ஆத்மார்த்தமாக கும்பிடும் பக்தர்களில் பெரும்பாலோனோர் இதை ஏற்றுக் கொள்ளவில்லை.தப்பை நீங்கள் செய்துவிட்டு பரிகாரத்தை நாங்கள் ஏன் செய்ய வேண்டும் என்பதை கேட்கிறார்கள்.இறை நம்பிக்கையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அதை வைத்து விளையாடாதீர்கள் என்பது தான், இதன் அர்த்தம்.
ஈ விழுந்த டீயை தெரியாம குடிச்சிட்டு போறன் நிம்மதியா போயிடுவான். ஆனா நீ அவங்கிட்ட போய் நீ குடிச்ச டீல ஈ கிடந்ததுன்னு சொல்லி பார்.. அவனுக்கு அடிவயிறு கலக்க ஆரம்பிச்சுடும்.. ஈ விழுந்த டீயையா குடிச்சுட்டோம்னு மனசு உறுத்திகிட்டே இருக்கிறது!