For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

கம்யூனிசத்தின் தந்தை கார்ல் மார்க்ஸ்- பிறந்த தின பகிர்வு!

06:17 AM May 05, 2024 IST | admin
கம்யூனிசத்தின் தந்தை கார்ல் மார்க்ஸ்  பிறந்த தின பகிர்வு
Advertisement

ரலாற்றில் சிலர் இடம் பிடிக்கிறார்கள்;சிலருக்கு வரலாறே இடம் அளிக்கிறது.

Advertisement

இரண்டாவது கூற்றுக்கு நூறு சதவிகிதம் பொருத்தமானவர் மாமேதை கார்ல் மார்க்ஸ்.

உலக வரலாறு நூறு பக்கங்களில் எழுதப்படுகிறது என்றாலும்கூட, இவருக்கு அதில் சிலபல பக்கங்கள் ஒதுக்கித்தான் ஆகவேண்டும். மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகக் கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார். பெருவாரியான உழைப்பாளிகள் தங்களின் வாழ்க்கையை முதலாளிகளின் வர்க்கத்திற்காகவே தொலைத்திருந்தார்கள். சோகம் என்னவெனில், அவர்கள் தொலைத்தது அவர்களுக்கே தெரியவில்லை. ஒரு உழைக்கும் குடும்பத்தில் மகன் பிறந்தால், ‘நமக்கு இன்னுமொரு உழைப்பாளி கிடைத்துவிட்டான்’ என்ற நினைக்கும் அளவுக்கான நிலை இருந்துள்ளது.

Advertisement

“கூட்டி கழித்துப்பாரு கணக்கு சரியா வரும்” என்று கூறி தொழிலாளர்களை வஞ்சித்து வந்த முதலாளி வர்கத்தின் தப்பான ஒரு கணக்கை, அங்கிருந்த ஒரு புத்திசாலி மாணவன் கண்டுபிடிக்க முனைந்தான். அதற்காக உழைப்பாளிகளின் உலக வரலாற்றை ஆய்வு செய்யத்தொடங்கினான் அந்த மாணவன். ‘உலகம் தோன்றிய காலம் முதல் இப்பொழுது வரையிலான அனைத்து மாற்றங்களுக்கும் மனிதனின் உழைப்பே காரணமாக இருக்கிறது’ என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்தும் காட்டினான் அம்மாணவன்.

இதை அறிந்த உழைப்பாளிகள், விழித்துக்கொள்ள ஆரம்பித்தனர். ‘உழைப்பினால் கிடைத்த லாபத்தை தொழிலாளர்களுடன் முதலாளிகள் சமமாக பங்கிட்டுக்கொள்ளும் வரை பேதங்கள் ஏதும் இல்லை. அதுபோக மீதம் இருந்த உபரி பணமானது மீண்டும் மூலதனமாக மட்டுமே ஆக்கப்படும்போதுதான், அங்கு முதலாளிகளின் வர்க்கங்கள் உருவாகின்றன’ என்று கூறி ஒட்டுமொத்த முதலாளித்துவ அதிகார வரலாற்றின் முடிச்சுக்களை அவிழ்த்தார் அந்த மாணவர். அவர்தான், மாமேதை கார்ல்மார்க்ஸ்.

“விதைத்தவர் உறங்கலாம், விதைகள் என்றும் உறங்குவதில்லை” - கார்ல் மார்க்ஸ்.ஆம் அவர் விதைத்த கம்யூனிசம் என்ற விதை தான் இன்று உலகையே இயக்கிக் கொண்டிருக்கிறது.

.உலகின் தலைசிறந்த காதல்,நட்பு ,சித்தாந்தம் எல்லாம் ஒரே ஒரு மனிதன் வசம் என்றால் மார்க்ஸுக்கு தான் அப்பெருமை . போராட்டம், வறுமை, வலிகள், பசி இவையே வாழ்க்கையின் ஒவ்வொரு அங்குலத்திலும் நிறைந்திருந்த பொழுது எளியவர்களும்,பாட்டாளிகளும் எப்படி துன்பத்தில் இருந்து விடுதலை பெறுவது என ஓயாமல் சிந்தித்த அசாதாரணமான மனிதர் அவர் .ஜெர்மனியில் இதே மே - 5 -1818 இல் பிறந்த மார்க்ஸுக்கு அவரின் அப்பா எல்லையற்ற சுதந்திரம் தந்தார் ;மகனின் போக்கிலேயே இருக்க விட்டார் . மார்க்ஸ் இறக்கும் வரை அப்பாவின் புகைப்படம் சட்டைப்பையில் இருக்கிற அளவுக்கு இருவருக்குமான பந்தம் உறுதியானது ..

தனது 17 ம் வயதில் பான் பல்கலைக்கலகத்தில் சட்டம் பயின்றார் கார்ல் மார்க்ஸ். அப்பொழுதே பொதுவுடைமை கொள்கையுடன் இருந்த மார்க்ஸ், சோஷலிச துண்டறிக்கை வெளியிட்டதைக் கண்டித்து, பல்கழைக்கழகம் அவரை வெளியேற்றியது. அதன்பின் 1841 ல் தனது பட்டப்படிப்பை பெர்லின் பல்கழைக்கழகத்தில் முடித்தார் மார்க்ஸ். ஷேக்ஸ்பியர், கதே என்ற என்ணற்ற இலக்கிய ஆளுமைகளின் எழுத்தில் சிறுவயதிலிருந்தே அதீத ஆர்வம் கொண்டிருந்தார் கார்ல் மார்க்ஸ். தனது சிறு வயது தோழியான செனிவான் வெசுட்பலெனை (ஜென்னி) பல இன்னல்களை கடந்து 1843ல் காதல் திருமணம் செய்துக்கொண்டார். இவரது அரசியல் சாணக்கியதனத்தைக் கண்ட ஜெர்மனி அரசு 1844-ல் இவரை லண்டனுக்கு நாடு கடத்தியது. அங்கு ஜெர்மனிய தத்துவளாளரான பிரெட்ரிக் எங்கெல்சுடன் இவருக்கு ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. இருவரும் இணைந்து உலக தொழிளாளர்களின் வர்க்கத்தை மாபெரும் சக்தியாக மாற்றும் நோக்கத்தோடு ‘பிரிட்டானிய அருங்காட்சியக நூலக’த்தில் ஆய்வுகளை மேற்கொண்டு மார்க்சியத்தை (கம்யூனிசம்) தோற்றுவித்தார்கள்.

1844ல் பிரெடரிக் ஏங்கல்சுடன் இணைந்து பாட்டாளிகள் (தொழிலாளிகள்) எவ்வாறு முதலாளிகளால் சுரண்டப்படுகிறார்கள் என்பதை ஆய்வுகளின் வழியே கூறினார் மார்க்ஸ். 1850-க்குப் பின் கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் போராடினார் மார்க்ஸ். கடனாளியாக மாறிய போதும், தொழிலாளர் நலனுக்காக போராடிக்கொண்டே இருந்தார் மார்க்ஸ். அத்தனை நேரத்திலும் அவருக்கு உறுதுணையாக இருந்துவந்தார் அவரின் காதல் மனைவி ஜென்னி! இவர்களின் காதல் வாழ்க்கையே ஒரு தனிக்கதை!

வீட்டுப்பொருளாதாரமே நன்கு இல்லாத அந்த நேரத்திலும், உலக பொருளாதாரத்தை சிந்தித்தது அது தொடர்பாக கட்டுரைகள் பல எழுதி வந்தார் கார்ல் மார்க்ஸ்.1867ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி அன்று, மார்க்ஸ் தனது 15 ஆண்டு எழுத்துப் போராட்ட வடிவத்தை கேப்பிட்டல் (மூலதனம்) என்ற புத்தகமாக வெளியிட்டார். இப்புத்தகம் மக்களிடையே பெரிய அதிர்வலைவுகளை ஏற்படுத்தியது. இப்புத்தகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகமானது அவரின் இறப்பிற்குப் பின் வெளிவந்தன.
1883ம் ஆண்டு மார்ச் 14ம் நாள் பிற்பகல் 2.30 மணிக்கு படுக்கை அறையிலிருந்து படிக்கும் அறைக்கு நடந்த சென்று தனது சாய்வு நாற்காலியில் அமர்ந்து தனது கைகளில் தந்தை, மனைவி மற்றும் மகளின் புகைப்படங்களை ஏந்தியவாறு கடைசி வார்த்தைகள் என எதுவும் சொல்லாமல் தனது 61வது வயதில் மக்கள் நலன் குறித்தே தன் வாழ்நாளையெல்லாம் யோசித்துக் கொண்டு இருந்த அந்த சிந்தனைச் சிற்பி பூரண அமைதிக்குள் ஆழ்ந்தார்.

“யூதனாகப் பிறந்தார்!

கிறிஸ்தவனாக வாழ்ந்தார்!!

மனிதனாக இறந்தார்!!!

காலங்கள் தோறும் அவரது பெயர் நிலைத்து நிற்கும்............!

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement