For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

விவாதிக்க மறந்த விவசாயிகள் வாழ்க்கையும், விவசாய நிலங்களும்!

05:55 PM Mar 04, 2025 IST | admin
விவாதிக்க மறந்த விவசாயிகள் வாழ்க்கையும்  விவசாய நிலங்களும்
Advertisement

‘சமத்துவ வளர்ச்சிக்கான தொழில்முனைவு அரங்கம்’ (FEED) அமைப்பு தயாரித்த ‘இந்திய விளிம்புநிலை விவசாயிகளின் நிலை-2024’ என்ற ஓர் அறிக்கை இப்போதாவது அனைவராலும் விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய ஆவணம். நம் இந்தியா முழுக்க விவசாய நிலங்களில் மற்றும் பல்வேறு தொவாழ்வாதாரத்துக்கு இனியும் விவசாய வருமானத்தை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்ற நிலைக்கு, விளிம்புநிலை விவசாயிகள் அனைவரும் வந்துவிட்டது இன்றுவரை செய்தித்தாள்களில் முக்கிய இடத்தைப் பிடிக்கவில்லை. நீட் தேர்வு, விமான நிலைய மேற்கூரை சரிவு தொடர்பாக நாடாளுமன்றத்தை முடக்கும் அரசியல் கட்சிகளும் இதற்கு முக்கியத்துவம் தருவதில்லை. மேலும் இந்தியா முழுக்க விவசாய நிலங்களில் மற்றும் பல்வேறு தொழில் வாய்ப்புகளில் வேலை செய்ய ஆள் பற்றாக்குறை இருக்கிறது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஏழை பணக்காரருக்கு இடையேயான வித்தியாசம் அதிகமாகிக் கொண்டு இருக்கிறது என்றும் அந்தப் புள்ளி விவரம் சொன்னது.ஏழை பணக்காரருக்கு இடையேயான வித்தியாசம் அதிகமாகிக் கொண்டு இருக்கிறது என்றும் அந்தப் புள்ளி விவரம் சொன்னது.

Advertisement

விரிவாகச் சொல்வதானால் ஒரு ஹெக்டேருக்கும் குறைவான பரப்பளவுள்ள (சுமார் இரண்டரை ஏக்கர்) நிலத்தைச் சொந்தமாக வைத்திருக்கும் விவசாயிகள் அல்லது குத்தகைக்கு எடுத்து பயிர் செய்யும் குடிவாரதாரர்கள் அல்லது ஊதியத்துக்குப் பாடுபடும் விவசாயிகள் ஆகியோரின் நிலை ஆராயப்பட்டது. இவர்களைத்தான் ‘விளிம்புநிலை’ (Marginal) விவசாயிகள் என்று அரசு வரையறுத்துள்ளது. வேளாண் துறை புள்ளிவிவர கணக்கெடுப்புப்படி 2020 - 2021இல் நம் நாட்டு விவசாயிகளில் 75.4%க்கும் மேற்பட்டோர் விளிம்புநிலை விவசாயிகளே.

Advertisement

ஒரு ஹெக்டேர் முதல் இரண்டு ஹெக்டேர் வரை நிலம் வைத்திருப்பவர்கள் ‘சிறு விவசாயிகள்’. இவ்விருவரும் சேர்ந்து மொத்த எண்ணிக்கை 92.4%. இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகமாகிக்கொண்டேவருகிறது. ‘பிரதமர் – கிஸான் சம்மான் நிதி’ உதவிபெறும் விவசாயிகளின் எண்ணிக்கையோ 2022இல் 10.47 கோடி என்று உச்சத்தில் இருந்தது இப்போது 9.26 கோடியாக இறங்கிவிட்டது. குடும்பங்களில் பாகப்பிரிவினை காரணமாக விவசாய நிலங்கள் துண்டுதுண்டாக பிரிவதுதான் அதிகம் என்ற நிலையில், இப்படிப் பயனாளிகள் எண்ணிக்கை குறைவது எதிர்மறையாக இருக்கிறதே என்று நினைக்கலாம், அரசிடம் உதவிபெற்ற விவசாயிகளின் வேறு வருவாய் ஆதாரம் பற்றிய தகவல்களால், பலர் அந்த உதவிபெறும் தகுதியை இழந்திருப்பார்கள், மிகச் சிலர், வேறு தொழில் அல்லது வேறு வகையில் வருமானத்தை அதிகப்படுத்திக்கொண்டும் இருக்கலாம்.

இந்த உதவித் தொகை அற்பமாக இருக்கிறது என்று கருதி சிலர் அதைப் பெறுவதில் ஆர்வமில்லாமலும் விலகியிருக்கலாம். ஆனால், ஆய்வறிக்கை தொடர்புகொண்ட விளிம்புநிலை விவசாயிகளில் 86% பேர், பிரதமரின் கிஸான் நிதி உதவித் திட்டம் மூலம் நேரடியாகவே பணப் பயனைப் பெற்று வருவதாக உறுதி செய்தது நேர்மறையான தகவலாக இருந்தது. அதேசமயம், இந்த விவசாயிகளுக்கு வங்கிகளிடமிருந்து விவசாயக் கடன், வேளாண் விரிவாக்க திட்டங்களின் பலன், பயிர் காப்பீடு, மண்வளச் சான்றிதழ் அட்டைகள் ஆகியவை கிடைப்பது அவ்வளவு எளிதாக இல்லை என்பதும் தெரியவருகிறது.

விவசாயத்துக்கான நிலத்தின் அளவை நம்மால் இனி அதிகரிக்கச் செய்ய முடியாது. ஆனால், அதில் செலுத்தக்கூடிய மூலதனம், உழைப்பு, சாகுபடித் தொழில்நுட்பம் ஆகியவற்றை அதிகப்படுத்த முடியும் என்று இந்த ஆவணத்தைத் தயாரித்தவர்களும் இது தொடர்பான விவாதங்களிலும் ஆலோசனைகளிலும் பங்கேற்றவர்களும் சுட்டிக்காட்டினர். அதற்கு அரசின் விவசாயம், தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு, பால் பண்ணைத் தொழில் கொள்கைகள் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

விளிம்புநிலை விவசாயிகள் சமுதாயத்தில் தனியொரு சமூகமாக இருக்கின்றனர் விவசாயத்துக்குத் தேவைப்படும் தண்ணீர், விதைகள், சாகுபடிக்கான இடுபொருள்கள், தொழில்நுட்ப ஆலோசனைகள், கடன் ஆகியவற்றைப் பெறுவதில் இடர்ப்பாடுகளைச் சந்திக்கின்றனர்.விளிம்புநிலை விவசாயிகள் எப்போதும் துயர நிலையிலேயே வாழ்கின்றனர். சந்தைகள் முக்கியம், அதைப் பயன்படுத்துவது அவசியம். ஆனால், விளிம்புநிலை விவசாயிகளின் சாகுபடியானது அந்தக் கால ‘சம்சாரிகளின் சாகுபடி’ நிலையைப் போலவே இருக்கிறது, அதாவது குடும்பத் தேவைக்குப் போதுமான அளவே விளைச்சலாகக் கிடைக்கிறது. எனவே, சந்தையில் விற்பதற்கு உபரி ஏதும் இருப்பதில்லை. இப்போது தீவிரமாகிவரும் பருவநிலை மாறுதலும் அவர்களுடைய வாழ்க்கையை மேலும் சிக்கலாக்கிக்கொண்டிருக்கிறது.

இதனால் ஆண்டுதோறும், கூடுதல் வருவாய் தேவைப்படும் விளிம்புநிலை விவசாயிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டேவருகிறது. பருவமழைக் காலம் தொடங்க தாமதம் ஆவதாலும், குளிர்காலமும் தாமதமாகவும் மிகவும் மிதமாகவும் தொடங்குவதாலும் விவசாயப் பணிகளும் உற்பத்தியும் பாதிப்படைகின்றன. 2023 காரிஃப் பருவத்தில் சாகுபடி செய்த விளிம்புநிலை விவசாயிகளில் சரி பாதிப்பேருக்கு நெல் – பருத்தி சாகுபடியில் இழப்புதான் ஏற்பட்டது, ராபி பருவத்தில் கோதுமை – உருளை சாகுபடி செய்தவர்களில் 45% பேருக்கு இழப்பு ஏற்பட்டது.

இதன் விளைவாக விளிம்புநிலை விவசாயிகள் அனைவருமே பிற வகை வருவாய் ஆதாரங்களையே பெரிதும் நாட நேரிட்டது. கால்நடை வளர்ப்பு, பால் விற்பனை, முட்டை – இறைச்சி விற்பனை, அல்லது வேலை தேடி பிற ஊர்களுக்குச் செல்வது என்று வருமான இழப்பை ஈடுகட்ட கூடுதலாக உழைக்க நேர்ந்தது. பருவநிலை மாறுதல்களால்தான் இப்படி நேர்கிறதா, அல்லது பொதுவாகவே விவசாயத்திலிருந்து கிடைக்கும் வருமானம் குறைந்துகொண்டிருக்கிறதா என்ற ஆராய்ச்சி முக்கியமல்ல, வருவாய் குறைவதற்கேற்ப மாற்றுத் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

விவசாயிகளின் வருமானம், சந்தைப்படுத்தலுக்குப் பல பிரச்சினைகள் சவாலாக இருக்கின்றன. வேளாண் வர்த்தகத்தில் அனைத்து தரப்பும் ஒரே மாதிரியான வலிமை உள்ளவை அல்ல, வேளாண் நடவடிக்கைகள் எளிமையானவை அல்ல, நில உடைமை ஆவணங்களையும் வேளாண் கடன் தேவைகள் தொடர்பான தரவுகளையும் பெறுவதும் எளிதல்ல. இந்தப் பிரச்சினைகள் விவசாயிகள் அனைவருக்கும் பொதுவானவை. இந்தியா வளர்ந்த நாடாக உருவாக விளிம்புநிலை விவசாயிகள், கட்டுப்படியாகக்கூடிய விதத்தில் தொழில்முனைவோர்களாக மாறுவதும் அவசியம்.

மேலும் இந்தியாவில் மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் அரசால் வங்கிக் கணக்கில் இலவசமாக செலுத்தப்படும் தொகைகள் போன்றவற்றால் கட்டடங்கள் கட்டும் வேலைக்குக் கூட ஆள் கிடைப்பது சிரமமாக இருக்கிறது என்று லார்சன் அண்டு டூப்ரோவின் சேர்மன் சுப்பிரமணியம் கூறுகிறார். இத்தகைய காரணங்களால் பலரும் சொந்த கிராமங்களை விட்டு வெளியூர் வேலைகளுக்குச் செல்வதை விரும்பவில்லை.உழைப்பற்ற சோம்பேறித்தனத்தை வளர்த்து விட்டுக் கொண்டு நாட்டுக்கு ஆக்கபூர்வமான வளங்களை உருவாக்குவதில் இன்றைய நவீனப் பொருளாதாரமும் அரசுகளும் தடுமாறுகின்றன என்பதைத் தவிர இதில் சொல்வதற்கு வேறு என்ன இருக்கிறது?

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement