For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ஃபேமிலி படம்- விமர்சனம்!

01:04 PM Dec 08, 2024 IST | admin
ஃபேமிலி படம்  விமர்சனம்
Advertisement

சிஸ்டெண்ட் டைரக்டர்களின் போராட்ட வாழ்க்கைக் குறித்தான பட்டியலில் இடம் பிடிக்க வந்துள்ளது ஃபேமிலி படம். சினி ஃபீல்ட் சம்பந்தப்பட்ட கதைக்கு எதற்கு இந்தப் பெயர்? என்று கேட்டல் எந்தத் துறையில் ஒருவன் இருந்தாலும் அவனுக்குக் குடும்பத்தினர் ஆதரவு இருந்தால் அந்தத் துறையில் சாதிக்க முடியும் என்பதைச் சொல்லியிருப்பதால் இப்படியோர் டைட்டிலாம்.

Advertisement

கதை என்னவென்றால் திரைப்படம் இயக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடும் நாயகன் உதய் கார்த்திக், தயாரிப்பாளரை தேடி அலைகிறார். அவரது தேடலுக்கான வெற்றியாக தயாரிப்பாளர் ஒருவர் அவருக்கு வாய்ப்பு கொடுக்க முன் வருகிறார். மகிழ்ச்சியில் பட வேலைகளை தொடங்கும் உதய் கார்த்திக்கிற்கு சில பிரச்சனைகள் வருவதோடு, சில சூழ்ச்சிகளால் அவரது வாய்ப்பு நிராகரிக்கப்படுவதோடு, அவரது கதையும் சட்ட ரீதியாக திருடப்படுகிறது. என்ன செய்வதென்று தெரியாமல் புலம்பும் உதய் கார்த்திக், தனது வாழ்க்கையே பறிபோய்விட்டதை நினைத்து வருந்தும் போது, அவரது குடும்பம் அவரது லட்சியத்திற்கு துணை நிற்கிறது. குடும்பத்தின் துணையோடும், உதவியுடம் மீண்டும் தனது லட்சியத்தை நோக்கி பயணிக்கும் உதய் கார்த்திக் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதை சொல்வது தான் ‘ஃபேமிலி படம்’.

Advertisement

ஹீரோவாக நடித்திருக்கும் உதய் கார்த்திக், லட்சியங்களை சுமந்துக்கொண்டு பயணிக்கும் ஒரு இளைஞராக நடிப்பில் அசத்தியிருக்கிறார். குறும்படம் இயக்கிய அனுபவத்தோடு, நல்ல கதையை வைத்துக்கொண்டு வாய்ப்பு தேடி அலையும் அவருக்கு இயக்குநராகும் வாய்ப்பு கிடைத்தவுடன் அதை நம்ப முடியாமல் மகிழ்சியில் மூழ்குவதும், அதே வாய்ப்பு சூழ்ச்சியால் பறிபோன பிறகு தடுமாறுவதும் என்று நேர்த்தியான நடிப்பின் மூலம் தான் ஏற்று நடித்த கதாபாத்திரத்திற்கு முழுமை சேர்த்திருக்கிறார்.

நாயகனின் காதலியாக நடித்திருக்கும் நாயகி சுபிக்‌ஷாவுக்கு, எளிமையான பணி என்றாலும் அதை சரியாக செய்திருக்கிறார்.ஹீரோ அண்ணனாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா, தம்பியின் முயற்சிகளுக்கு துணையாக நிற்கின்ற வேடத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார். மற்றொரு அண்ணனாக நடித்திருக்கும் பார்த்திபன் குமாரின் நடிப்பும் கச்சிதம்.நாயகனின் நண்பர் மற்றும் நடிகர் அஜித் இரசிகராக வரும் சந்தோஷ் நல்வரவு.இவருக்கு முழுநீள நகைச்சுவை நடிகராக வலம்வர வாய்ப்பிருக்கிறது.

நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரீஜா ரவி, காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் காயத்ரி, நாயகனின் தாத்தாவாக நடித்திருக்கும் பட்டிமன்றப் பேச்சாளர் மோகனசுந்தரம் உள்ளிட்டோரும் படத்துக்குப் பலமாக இருக்கிறார்கள்.

மெய்யேந்திரன் காட்சிகளுக்குத் தக்க ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அனீவியின் இசையில் பாடல்கள் இதம்.அஜீஷின் பின்னணி இசை அளவு. சுதர்சனின் படத்தொகுப்பு தாழ்வில்லை.

இயக்குநர் செல்வ குமார் திருமாறன்,பழகிய கதையை எடுத்துக் கொண்டிருந்தாலும் திரைக்கதை, காட்சி அமைப்புகள் மற்றும் வசனங்களில் படத்தை இற்றைப்படுத்தியிருக்கிறார். விரும்பும் தொழில் அல்லது இலட்சியத்தோடு குடும்பமும் முக்கியம். அவர்கள் துணையிருந்தால் வெற்றி நிச்சயம் எனும் நற்கருத்தை பரப்புரை தொனியின்றியும் இயல்பான திரைமொழியிலும் சொல்லியிருக்கிறார்.

குடும்ப காட்சிகளை சீரியல் போல் படமாக்காமல், இயல்பாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, காட்சிக்கு காட்சி சிரிக்க வைத்து ரசிக்க வைக்கும் வித்தையை சர்வசாதாரணமாக செய்திருக்கும் இயக்குநர் செல்வ குமார் திருமாறன், கமர்ஷியல் மசாலாவை அளவாக பயன்படுத்தி அமர்க்களமான படமாக கொடுத்து கவர்து விடுகிறார்

மொத்தத்தில் இந்த ஃபேமி படம் - குடும்பத்தினர் காணத் தக்க சினிமா

மார்க் 3.25/5

Tags :
Advertisement