தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

போலியான எஸ்பிஐ வங்கிக் கிளை!- சதீஸ்கரில் பகீர்!

07:40 PM Oct 04, 2024 IST | admin
Advertisement

பெரும்பாலும் நம் வங்கிப் பரிவர்த்தனையில் மோசடி, போலி ஆவணங்கள் மூலம் மோசடி, போலி சி.பி.ஐ., அதிகாரிகள், போலி அமலாக்கத்துறை அதிகாரிகள் எனச் சொல்லி பல்வேறு நிதி மோசடிகள் நாட்டில் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் ஒரு கும்பல் வங்கிக் கிளையையே போலியாக அதுவும் எஸ்பிஐ பெயரில் நடத்தி வந்த சம்பவம பெரும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலம், மல்காருதா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது சப்போரா கிராமம். இங்குள்ள ஓர் வணிக வளாகத்தில் வாடகை கட்டடத்தில் எஸ்பிஐ பேரில் வங்கிக் கிளை ஒன்று கடந்த மாதம் 18 ஆம் தேதி முதல் (செப்டம்பர் 18) செயல்பட்டு வந்துள்ளது. வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதத்தில் எஸ்பிஐ வங்கியின் பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து வண்ணமயமான விளம்பர பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் அக்கட்டடம் முழுவதும் வைக்கப்பட்டிருந்தது.

Advertisement

இந்த வங்கிக் கிளை அப்பகுதி மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த அதே வேளையில், இதன் செயல்பாடுகள் மீது பலருக்கும் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து எஸ்பிஐ வங்கியின் கோர்பா மண்டல தலைமை அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் குழு, சப்போரா கிராமத்தில் இயங்கி வந்த அலுவலகத்துக்கு சென்று நேரில் விசாரணை மேற்கொண்டது. இதில் அந்த கிளை போலியானது என்பது தெரிய வந்தது.

Advertisement

வங்கி நிர்வாக மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவையடுத்து, அதிகாரிகள் குழு கடந்த மாதம் 27 ஆம் தேதி சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தியதாக சக்தி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமா படேல் கூறினார். மேலும், ஐந்து பேருடன் இந்தப் போலி வங்கி கிளை இயங்கி வந்ததும் தெரிய வந்தது என்றும் காவல் துறை அதிகாரி தெரிவித்தார். இதையடுத்து அந்த அலுவலகத்தில் இருந்த கணினிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார், அங்கு பணிபுரிந்து வந்தவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருதின்றனர். முதல்கட்ட விசாரணையில் பணியாளர்கள் நேர்காணல் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.

இப்போலி வங்கி கிளையில் எவ்வளவு நபர்கள் சேமிப்பு கணக்கு உள்ளிட்டவற்றை தொடங்கி உள்ளனர், அவர்கள் எவ்வளவு தொகையை டெபாசிட் செய்துள்ளனர் என்பன உள்ளிட்ட விவரங்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்ட வருவதாக சக்தி மாவட்ட போலீசார் கூறியுள்ளனர்.போலி வங்கி கிளையின் மேலாளர் என்று கூறி வந்தவரும், இந்த மோசடியின் மூளையாக செயல்பட்டவராக கருதப்படும் நபர் உள்ளிட்ட மூன்று பேர் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ், போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
FakeSBIஎஸ் பி ஐசதீஸ்கர்போலி
Advertisement
Next Article