கால்நடை பல்கலை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க ஜூன் 21(நாளை) கடைசிநாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பெற்றோர், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று வரும் 28-ம் தேதி அவரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 19-ம் தேதி வரை கால்நடை மருத்துவ இளநிலை பட்டப்படிப்புகளுக்கு 13,978 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. adm.tanuvas.ac.in என்ற வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்https://adm.tanuvas.ac.in/ பல்கலைக்கழகத்தில் 2024-25ம் ஆண்டு இளநிலை படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு ஜூன் 3ம் தேதி முதல் தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிகளில் உள்ள கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு சார்ந்த 4 இளநிலை பட்டப்படிப்புகளுக்கும், உணவு, பால்வளம், கோழியினம் ஆகிய தொழில்நுட்ப படிப்புகளுக்கும் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கலந்தாய்வை தமிழ்நாடு கால்நடை அறிவியல் மற்றும் மருத்துவ பல்கலைக்கழகம் நடத்துகிறது. நடப்பாண்டில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்பிற்கு 660 இடங்களும், தொழில்நுட்ப படிப்புகளுக்கு 100 இடங்களும் உள்ளன.
இவற்றில் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் 15 சதவீத இடம் போக மீதம் உள்ள இடங்கள் தமிழக மாணவர்கள் மூலம் நிரப்பப்பட உள்ளன. அந்த வகையில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான கால்நடை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு ஜூன் 3ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் ணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. B.Tech படிப்புகளுக்கான விண்ணப்ப தேதியை ஜூன் 28 வரை பல்கலைக்கழக நிர்வாகம் நீட்டித்துள்ளது. அயல்நாடு வாழ் இந்தியர்கள் உள்ளிட்டோர் ஜூலை 5 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது