For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

எக்சிட் போல்கள் தரும் குழப்பங்கள்!

05:49 PM Jun 02, 2024 IST | admin
எக்சிட் போல்கள் தரும் குழப்பங்கள்
Advertisement

டைசிக் கட்டத் தேர்தல் முடிந்து விட்டதால் எக்சிட் போல் முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கின்றன. தேசிய அளவிலான பெரும்பாலான ஆய்வுகள் பாஜக தலைமையிலான என்டிஏவுக்கே வெற்றி என்பதைக் குறிக்கின்றன. நானூறை அடைய முடியவில்லை என்றாலும் சென்ற தேர்தலை விட மேம்பட்ட எண்ணிக்கையில்தான் பாஜக ஆட்சி அமைக்கப் போவதாகத் தோன்றுகிறது. எக்சிட் போல் முடிவுகள் நம்பகத்தன்மை கொண்டவை அல்ல என்று பாஜக விமர்சகர்கள் அங்கலாய்க்கிறார்கள். மாநில எக்சிட் போல் முடிவுகள் பல முறை தவறி இருக்கின்றன.

Advertisement

தேசிய அளவில், 2004 தேர்தலில் எக்சிட் போல் முடிவுகளுக்கு மாறாக இறுதி முடிவுகள் இருந்தன. ஆனால் தேசிய அளவில் பெரும்பாலும் இவை உண்மைக்கு நெருக்கமாகவே இருந்திருக்கின்றன. எனவே இந்த முறை ரிசல்ட் மாறி வந்தால் அதுதான் ஆச்சரியமாக இருக்குமே தவிர எக்சிட் போலுக்கு அருகில் வரும் ரிசல்ட்டுகள் ஆச்சரியமாக இருக்காது. அது ஒரு புறம் இருக்க, எனக்கு இதில் ஒரு கேள்வி வருகிறது. என்டிஏ அதீத வெற்றியை அடையப் போகிறது என்பது ஒவ்வொரு கட்டத் தேர்தலுக்குப் பிறகும் பாஜக தலைமைக்குத் தெரியவே வந்திருக்கும். இருப்பினும் மோடி தனது அவலப் பேச்சுகளின் தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே வந்திருந்திருக்கிறார். ஏன்?

Advertisement

இதற்கு ஒரே காரணம்தான் இருந்திருக்க முடியும். நானூறு சீட்டுகள் என்பதை பாஜக தலைமை மிகவும் சீரியசாகவே எடுத்துக் கொண்டு செயல்பட்டிருக்கிறார்கள். முதல் கட்டம் முடிந்ததுமே நானூறுக்கு அருகில் வர முடியாது என்பது தெரிய வந்திருக்கும். அதனால் இன்னும் வீரியத்தைக் கூட்டி இருந்திருக்கிறார்கள். அதாவது எப்பாடு பட்டாவது நானூறை அடைந்தே தீர வேண்டும் என்ற வெறி அப்படியெல்லாம் பேச வைத்திருக்கிறது.

எக்சிட் போல்கள் உண்மை என்று ஆகி விட்டால் மோடியின் அவல அணுகுமுறையை இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. ஒரு வேளை எக்சிட் போல்கள் தவறானவையாக இருந்து, நிசமாகவே கள நிலவரம் அவர்களுக்குத் தெரிய வந்து அதனால்தான் தங்கள் strategyஐ மாற்றிக் கொண்டார்களா என்பது நான்காம் தேதி தெரிய வந்து விடும்.

இன்னமும் இரண்டு நாட்கள்தான் உள்ளன. கொஞ்சம் அமைதியாக காத்திருப்போம்.

- ஸ்ரீதர் சுப்ரமணியம்

Tags :
Advertisement