For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

பிணைக் கைதிகள் பரிமாற்றம்..அமைதி ஒப்பந்தம் துவக்கம்! மகிழ்ச்சி!!

09:13 PM Jan 20, 2025 IST | admin
பிணைக் கைதிகள் பரிமாற்றம்  அமைதி ஒப்பந்தம் துவக்கம்  மகிழ்ச்சி
Advertisement

நேற்று ஞாயிறன்று பாலஸ்தீன நேரம் காலை 8.30 க்கு போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வரும் என்று இஸ்ரேல்தான் அறிவித்திருந்தது. அந்த காலை 8.30 வரைக்குமே வான் படை மூலம் இஸ்ரேல் பலஸ்தினியர்களை குண்டு வீசி கொன்றபடிதான் இருந்தது. காலை 8.30 ம் வந்தது. அவ்வளவு நேரமும் மனம் பதைக்க தத்தம் வீடிருந்த இடத்துக்கு திரும்புவதற்காக காத்திருந்த மக்கள் எல்லாரும் ஆவலோடு வீடு நோக்கி புறப்படத் துவங்கினார்கள். அந்த மனிதக் கூட்டத்தின் மீது குண்டு வீசி மூன்று பேரை கொன்றது இஸ்ரேல்.. .வியாழனன்று போர் நிறுத்த ஒப்பந்தம் இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப் பட்டது என்று அறிவிக்கப் பட்டது. அன்றிலிருந்து ஞாயிறு வரை இஷ்டப்படி இலக்கே இல்லாமல் அப்பாவி பாலஸ்தீனர்கள் மீது குண்டு வீசி கொன்று அழிக்கத் துவங்கியது தீவிரவாத இஸ்ரேல். வியாழன் முதல் ஞாயிறு வரை அது கொன்று போட்ட ஜனங்களின் எண்ணிக்கை மட்டும் 116 பேர். எந்த பாவமும் செய்யாத அப்பாவி மக்கள்.

Advertisement

அதுதான் எட்டரை முதல் போர் நிறுத்தம் என்று நீங்கள்தானே அறிவித்தீர்கள். இப்படி வீடு நோக்கி போகும் அப்பாவிகள் மீது குண்டு வீசி அழிக்கிறீர்களே என்று கேட்டதற்கு இன்னும் ஹமாஸ் தரப்பிலிருந்து அவர்கள் முதல் நாள் யார் யாரை விடுவிக்கப் போகிறார்கள் என்ற லிஸ்ட்டை தரவில்லை. அந்த லிஸ்ட் எங்களுக்கு கிடைக்கும்வரை போர் நிறுத்தம் கிடையாது என்று அறிவித்தது தீவிரவாத இஸ்ரேல்.. ஹமாஸ் அந்த லிஸ்ட்டை அனுப்ப ஏன் தாமதம் ஆனது என்று இப்போது வரை தெரியவில்லை.,.

உடனடியாக மத்தியஸ்தர்கள் மூலம் ஹமாசை தொடர்பு கொண்டு உடனடியாக லிஸ்ட்டை கொடுத்தார்கள். அதன் பிறகு அரை மணி நேரம் கழித்து இப்போதுதான் போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது என்று தீவிரவாத இஸ்ரேல் அறிவித்தது.அதன் பின்தான் பொது மக்கள் நிம்மதியாக தத்தம் வீடு நோக்கிய நடை பயணத்தை துவங்கினார்கள். அது வரை அபு கரீம் ஷலோம் திறப்பில் ராஃபா பக்கத்தில் உணவு டிரக்குகள் காத்துக் கிடந்தன..1பாலஸ்தீனர்கள் தெருவெங்கும் இந்த வெற்றியை கொண்டாடத் துவங்கினார்கள். தீவிரவாத இஸ்ரேலிய பிரதமர் நேத்தன்யாகு அது பொறுக்காமல் டிவியில் அறிவித்தான். இந்த ஒப்பந்தம் நிரந்தரமானது அல்ல. தாற்காலிகமானதுதான். மறுபடியும் எப்போது வேண்டுமானாலும் போரை துவங்கலாம் என்று எங்களுக்கு டிரம்ப் அனுமதி கொடுத்து விட்டார் என்றும்.. பாலஸ்தீனர்களின் முகங்களில் இருந்து புன்னகையை நான் அழிப்பேன். வாழ்நாள் முழுக்க அவர்களை அச்சத்தில் இருக்க வைப்பேன் என்றும் அறிவித்து அவனது வயிற்றெரிச்சலை தீர்த்துக் கொண்டான்.

Advertisement

மக்கள் அவரவர் ஏரியாவுக்கு செல்லச் செல்ல ஹமாசின் சிவில் பணியாளர்களும் ஹமாஸ் போலிசாரும் அந்தந்த இடங்களுக்கு அவரவர் வாகனங்களில் வந்து விட்டார்கள். உலகத்துக்கு இதுதான் ஆகப் பெரிய ஆச்சரியம். இத்தனை பெரிய அமைப்பு ஹமாசிடம் இருந்ததா.? ஹமாஸ் போலீசார் இன்னமும் இருக்கிறார்களா.? இவர்களது ஆம்புலன்ஸ்கள் உட்பட அனைத்து வாகனங்களையும் தீவிரவாத இஸ்ரேல் குண்டு வீசி அழித்து விட்டதே.. இத்தனை வாகனங்கள் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது என்று உலகம் முழுவதும் ஒரே ஆச்சரிய அலைகள். ஹமாசின் சிவில் நிர்வாக ஊழியர்கள் படபடவென்று சிதைந்த சாலைகளை சீரமைப்பது.. Rubbles எனப்படும் கட்டிட இடிபாடுகளை புல்டோசர் கொண்டு அகற்றுவது என்று அவரவர் வேலையை மளமளவென்று பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். காசாவின் தெருக்கள் முழுக்க ஒரே கொண்டாட்ட மயம்..!

அதே நேரம் இஸ்ரேல் முழுக்க ஒரே போராட்ட மயம். ஒரு பக்கம் யூதர்களில் தீவிர வலது சாரிகள் ஒப்பந்தத்தை திரும்பப் பெறு.. ஹமாசை அழித்து ஒழி என்று ஜெருசலேமில் போராட ஆரம்பித்தார்கள். முக்கியமான விஷயம் இஸ்ரேலிய யூதர்களில் பெரும்பாலோர் தீவிர வலதுசாரிகள்தான். ஈவிரக்கமற்ற யூத சிந்தனையாளர்கள்தான்..அதே நேரம் டெல் அவிவ்வில் 33 பேர் தவிர பாக்கி உள்ள பிணைக் கைதிகளையும் விடுவிக்க ஏற்பாடு செய் என்று போராட ஆரம்பித்தார்கள். இந்த யூதர்கள் அனைவரும் பாலஸ்தீனத்தில் நடக்கும் கொண்டாட்டங்களை வயிறு எரிய எரிய பார்த்தபடி இருந்தார்கள்.ஒரு வழியாக மாலை 4‘. 30 மணிக்கு ஹமாஸ் தரப்பில் முதல் மூன்று பிணைக் கைதிகள் விடுவிக்கப் பட்டார்கள். வடக்கு காசாவில் காத்திருந்த செஞ்சிலுவை சங்கத்தாரிடம் கையெழுத்துப் பெற்றுக் கொண்டு ஒப்படைத்தார்கள். ஒப்படைக்கப் பட்ட பிணைக் கைதிகளின் அடையாளங்களோடு சான்றுகளையும் ஒப்படைத்தார்கள் ஹமாசினர். விடுவிக்கப் பட்ட மூவரும் பெண்கள் ஆவர். ரோமி கோனென், எமிலி டமாரி, டோரோன் ஸ்ட்ரெயின்ப்ரெச்சர் (Romi Gonen, Emily Damari, and Doron Steinbrecher) ஆகிய மூவர்தான் அவர்கள். இவர்களை ஐநவின் செஞ்சிலுவை சங்க அதிகாரிகள் கையெழுத்துப் போட்டு பெற்றுக் கொண்டு இஸ்ரேல் நோக்கி அழைத்துச் சென்றார்கள்.

விடுவிக்கப் பட்ட மூவருக்கும் ஹமாஸ் ஒரு பரிசுப் பையை வழங்கியது. அந்த பரிசுப் பையில் அவர்கள் பிணைக் கைதிகளாக தங்க வைக்கப் பட்டிருந்தபோது எடுக்கப் பட்ட படம். ஒரு கிராஜுவேஷன் சர்ட்டிபிகேட் (எதற்காக இந்த கிராஜுவேஷன் சர்ட்டிபிகேட் என தெரியவில்லை.) பாலஸ்தீனத்தின் வரைபடம்,.இன்னும் சில பொருட்கள் வைக்கப் பட்டிருந்தன.. அவர்கள் விடுவிக்கப்படும் வீடியோக்களை நான் தருகிறேன். ஒரு வழியாக மூன்று கைதிகளும் விடுவிக்கப் பட்டவுடன் பாலஸ்தீனத்தின் மக்களை இவர்கள் எப்போது விடுவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப் பட்டது.

பாலஸ்தீன நேரம் மாலை நான்கு முப்பதுக்கு யூத கைதிகள் விடுவிக்கப்பட்டாலும் தீவிரவாத இஸ்ரேல் தரப்பிலிருந்து பாலஸ்தீன கைதிகள் விடுவிப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.. விடுவிப்பார்களா மாட்டார்களா என்ற பெரும் பதட்டத்துக்கு பாலஸ்தீன மக்கள் மட்டுமல்ல. உலகம் முழுவதும் இந்த நிகழ்வை தவிக்கும் மனத்தோடு பார்த்தபடி இருந்த நம்மைப் போன்ற மனிதர்கள் அனைவரும் பதட்டத்துக்கு உள்ளானார்கள்.உலகத்தின் கண்கள் அனைத்தும் பாலஸ்தீனர்கள் அடைக்கப் பட்டுள்ள ஓஃபெர் சிறையை நோக்கியே இருந்தன..

பல மணி நேரங்கள் தாமதத்துக்குப் பிறகு நள்ளிரவும் 1.30 க்கு பாலஸ்தீன கைதிகள் விடுதலை செய்யப் படுவார்கள் என்று ஒரு வழியாக இஸ்ரேல் அறிவித்தது.இந்த விடுவிக்கப் பட்டவர்களில் மிகச் சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பெண் கைதிகளே.. தொண்ணூற்றைந்து சதம் பெண் கைதிகளே விடுவிக்கப் பட்டார்கள். இவர்கள் அனைவவருமே கொடும் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறை வைக்கப் பட்டிருந்தவர்கள். ஒன்றரைக்கு விடுவிக்கப்பட்ட அவர்கள் காசாவுக்குள் நுழைய காசாவே உணர்ச்சிப் பிழம்பாக மாறியது. எங்கெங்கம் ஆனந்தக் கண்ணீர் அழுகைகள் என்று பார்ப்போர் நெஞ்சம் கலங்க வைக்கும் காட்சிகள் வெளியாகின.இந்த 90 பிணைக் கைதிகளும் செஞ்சிலுவை சங்கத்தின் வழியாகவே பெறப் பட்டுள்ளார்கள். ஏனென்றால் தீவிரவாத இஸ்ரேலின் வரலாறு அப்படி. விடுவிக்கப் பட்ட மறுநாளே காசாவுக்குள் படைகளை அனுப்பி உடனடியாக விடுவிக்கப் பட்டவர்களை கைது செய்து மறுபடி கொண்டு போவதுதான் தீவிரவாத இஸ்ரேலின் வழக்கம். இம்முறை இந்த கைதிகள் அனைவரும் இன்டர்நேஷனல் சட்டங்களின்படி பாதுகாக்கப் பட வேண்டும். அவர்களில் எவரும் அடுத்து எந்த குற்றமும் செய்யாத வரை அவர்களை கைது செய்ய முடியாது. அது போர் நிறுத்த ஒப்பந்த மீறலாக கருதப்படும்.

இதில் கலீதா ஜரார் என்ற பெண் கைதி மிக முக்கியமானவர் ஆவார். இள வயதில் கைது செய்யப்பட்ட இவர் தற்போது அறுபது வயது அருகில் விடுவிக்கப் பட்டிருக்கிறார். கொடூரமான சிறை தண்டனையை அனுபவித்த இவர் அரசியல் கைதி ஆவார். இது போன்ற பல பெண்களின் கண்ணீர்க் கதைகள் இனிதான் வெளியே வரும்.இதற்கிடையில் என்னை கைய புடிச்சு இழுத்துட்டான் என்கிற ரீதியில் தீவிரவாத இஸ்ரேலின் அடுத்த ப்ரோபகாண்டா துவங்கிவிட்டது. விடுவிக்கப் பட்ட யூத கைதிகள் மூவரின் சட்டையிலும் பாலஸ்தீன கொடியை வைத்து ஹமாஸ் அனுப்பி இருக்கிறது என்று பெரிய்யய குற்றச்சாட்டை பரப்பத் துவக்கினார்கள் தீவிரவாத இஸ்ரேலிகள்.அதற்கு பதிலாக பாலஸ்தீன கைதிகளை எப்படி மனிதத் தன்மையே இல்லாமல் தீவிரவாத இஸ்ரேலிகள் நடத்துகிறார்கள் என்பதற்கான வீடியோ ஆதாரங்களை அதுவும் தீவிரவாத இஸ்ரேலிய ராணுவத்தினரே அவர்களது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்த வீடியோவை வெளியிட்டு அவர்கள் முகத்தில் கரியை பூசினார்கள் உலகமெங்கும் உள்ள பலஸ்தீன ஆதரவாளர்கள். இதன் பின் அபு கரீம் ஷலோம் பாதைகள் வழியாக உணவு டிரக்குகள் மெல்ல உள்ளே வரத் துவங்கின.

ஆக உலகம் முழுக்க ஆவலாக எதிர்பார்க்கப் பட்ட இந்த அமைதி ஒப்பந்தத்தின் முதல் படி இப்படியாக நிறைவேற்றப் பட்டு இருக்கிறது. உள்ளே இருந்து வந்தவர்கள் இனி காலகாலகத்துக்கும் அவர்கள் கொடுமைப் படுத்தப்பட்ட கதைகளை உலகத்தாருக்கு கண்ணீரோடு விவரிப்பார்கள். காசா மக்கள் தற்போது வெறும் மண்ணின் மேல் ஒன்றுமற்று நிற்கிறார்கள். இனிமேல்தான் அவர்களது மறுவாழ்வுப் பணிகள் தொடங்கும்.பாலஸ்தீன சமூகமெங்கும் தற்போது பதினைந்தாயிரம் சின்னஞ் சிறார்கள் தற்போது தாய் தந்தை இழந்து அநாதையாக திரிகிறார்கள். அவர்களது மறுவாழ்வும் இனிதான் துவங்கும்..!இதன் பின் இஸ்ரேலின் அடுத்த கட்ட சகுனி நகர்வுகள் துவங்கும். ஏற்கெனவே PA வையும் தீவிரவாத இஸ்ரேலின் கால் நக்கி அப்பாசை வைத்து தன் நகர்வுகளை இஸ்ரேல் துவங்கி விட்டது.காசாவின் ஆட்சியை அடுத்து ஹமாஸ் கைப்பற்றும் என்பது மாதிரியான வதந்திகளை இஸ்ரேல் பரப்பத் துவங்கி விட்டது. போராளி குழுக்களான பதிமூன்று விடுதலைக் குழுக்களையும் பிரித்து ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொள்ள வைக்க அப்பாஸ் மூலம் காய் நகர்த்தி வருகிறது தீவிரவாத இஸ்ரேல். காசாவின் ஆட்சியில் அமரப் போவது யார் என்று இந்த பதின்மூன்று குழுக்களுக்குள் அடிதடி வரவைக்க கடுமையாக முயற்சி செய்து வருகிறது தீவிரவாத இஸ்ரேல்.

ஆனால் ஹமாஸ் மிகத் தெளிவாக அறிவித்து இருக்கிறது. நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல. நாங்கள் ராணுவம். பாலஸ்தீனத்தின் ஆட்சியில் நாங்கள் பங்கு பெற மாட்டோம். பாலஸ்தீனத்தின் பாதுகாப்பே எங்களது பொறுப்பு என்று அறிவித்திருக்கிறது. தீவிரவாத இஸ்ரேல் என்ன தகிடுதத்தங்கள் செய்தாலும் அவை அனைத்தையும் நம் போராளிகள் வெற்றிகரமாக முறியடிப்பார்கள் என்று நான் தீவிரமாக நம்புகிறேன்..!தற்போது காசாவின் தெருக்களெங்கும் ஹமாஸ், அல் குத்ஸ், சரா அல் குத்ஸ் போன்ற அனைத்து படையணியினரும் வெளிப்படையாக நடமாடத் துவங்கி இருக்கிறார்கள். இதுவே நற் சகுனமாக தெரிகிறது.

மூன்று வல்லரசு நாடுகள்.. ஒட்டு மொத்த ஐரோப்பிய ஒன்றியம். முக்கியமாக உலகின் பெரியண்ணன் அமெரிக்கா.. இந்த அனைத்து நாடுகளையும் மண்டியிட வைத்து இந்த போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொள்ள வைத்த போராளிகளின் வீரத்தை உலகம் வாய் பிளந்து பார்ககிறது.அதே நேரம் விடுவிக்கப்பட்ட மூன்று பிணைக் கைதிகளையும் எங்கே வைத்திருந்தார்கள் என்று கேட்டால் வடக்கு காசாவில்தான் என்று சொல்கிறார்கள். அங்கேதான் இத்தனை நாட்களும் தீவிரவாத இஸ்ரேலிய ராணுவமும் முற்றுகையிட்டு உள்ளே நுழைந்து மக்களை கொத்து கொத்தாக கொன்று போட்டுக் கொண்டிருந்தது. அவர்கள் முற்றுகையிட்டிருந்த பகுதியிலேயே அவர்களுக்கு தெரியாமல் பிணைக் கைதிகளை ஒளித்து வைத்திருந்த போராளிகளின் திறமையை இஸ்ரேலே வாய் பிளந்து பார்த்தபடி இருக்கிறது.!

வீழட்டும் மேற்கத்திய வல்லாதிக்கம்..

வெல்லட்டும் பாலஸ்தீனம்..

விரைவில் சந்திப்போம் நண்பர்களே...!

நந்தன் ஸ்ரீதர்

Advertisement