தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு 12 மாதம் சிறை!

12:10 PM Oct 03, 2024 IST | admin
Advertisement

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியான முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு 12 மாதம் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு ஐகோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது. கடந்த 50 ஆண்டு காலத்தில் சிங்கப்பூரில் அமைச்சர் ஒருவருக்கு எதிராக இத்தகைய வழக்கு பதிவு செய்யப்படுவதும், தண்டிக்கப்படுவதும் இதுவே முதல் முறையாகும்.

Advertisement

1962-ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த ஈஸ்வரன்,1997-ஆம் ஆண்டு முதன் முதலில் சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2004 முதல் 2006 வரை சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராக பதவி வகித்தார். 2018-ஆம் ஆண்டு தகவல் தொடர்புத் துறை அமைச்சராக பதவியேற்ற ஈஸ்வரன், பின்னர் வர்த்தக உறவுகளுக்கான அமைச்சராகவும் தொடர்ந்தார். 2021-ஆம் ஆண்டு அவருக்கு கூடுதலாக போக்குவரத்துத் துறை அமைச்சராகவுன் பொறுப்பு வழங்கப்பட்டது.

சிங்கப்பூரில் ஃபார்முலா ஒன் (F1) இரவுப் பந்தயத்தை கொண்டு வந்ததற்காக மிகவும் பாராட்டப்பட்டார் ஈஸ்வரன். இந்த ஃபார்முலா ஒன் பந்தயத்துக்காக கோடீஸ்வரர் ஓங் பெங் செங் மற்றும் லம் சாங் ஹோல்டிங்ஸின் இயக்குநர், டேவிட் லம் ஆகிய தொழிலதிபர்களிடமிருந்து 4,00,000 சிங்கப்பூர் டாலர்கள் மதிப்புள்ள பரிசுகளைப் பெற்றதாக ஈஸ்வரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தின் வழிநடத்தல் குழுவின் ஆலோசகராக ஈஸ்வரன் இருந்த காலகட்டத்தில், கார் பந்தயத்துக்கான உரிமையை வைத்திருந்தவர் ஓங் பெங் செங். கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஈஸ்வரன் கைது செய்யப்பட்ட சமயத்தில் அவருடன் ஓங் பெங் செங்கும் விசாரணைக்காக கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் மீது வழக்கு எதுவும் பதியப்படவில்லை.அதேபோல வர்த்தக உறவுகள் துறை அமைச்சராக இருந்த ஈஸ்வரன், ஒரு ரயில்வே நிலையத்தின் கட்டுமான பணிகளுக்கான பொறுப்பை ஏற்றிருந்த லம் சாங் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் டேவிட் லம் இடமிருந்து ஏராளமான பரிசுப் பொருட்களை பெற்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.இதன் பிறகு சில நாள்களிலேயே தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த ஈஸ்வரன், கட்சிப் பொறுப்பை மட்டுமின்றி அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார். மேலும், தன் மீது விழுந்த களங்கத்தை விரைவில் துடைத்தெறிவேன் என்றும் உறுதி பூண்டார்.

Advertisement

எனினும், தன் மீது முன்வைக்கப்பட்ட 35 குற்றச்சாட்டுகளில் ஐந்தில் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார் ஈஸ்வரன். சிங்கப்பூரில் இதுபோன்ற குற்றங்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். எனினும், அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குறைந்தபட்ச தண்டனையாக ஆறு முதல் ஏழு மாத சிறைத் தண்டனையை ஈஸ்வரனுக்கு பரிந்துரைத்த நிலையில் ஈஸ்வரனுக்கு 12 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது

சர்வதேச அளவில் அதிகம் சம்பளம் பெறும் அரசியல்வாதிகளில் சிங்கப்பூர் அமைச்சர்களும் அடக்கம். அவர்களுக்கு மாதம் 46,750 சிங்கப்பூர் டாலர்கள் ஊதியமாக வழங்கப்படுகிறது. ஊழலை தடுக்க அரசு பதவியில் இருப்பவர்களுக்கு அதிக சம்பளம் அவசியம் என்பது அந்நாட்டு அரசின் கொள்கையாக உள்ளது. இதனால் ஊழல் குற்றங்களுக்கு கடுமையான நடவடிக்கையையும் சிங்கப்பூர் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனாலேயே உலகின் ஐந்தாவது ஊழல் குறைந்த நாடாக சிங்கப்பூர் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் அமைச்சர் ஒருவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது

Tags :
12 monthsex-transport ministerIswaranjailobstructing justicereceiving giftssentencedSingaporeஈஸ்வரன்சிங்கப்பூர்
Advertisement
Next Article