தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

பிதா திரைப்பட அறிவிப்பு விழாத் துளிகள்!

05:23 PM Jun 08, 2024 IST | admin
Advertisement

SRINIK PRODUCTION சார்பில் தயாரிப்பாளர்கள் D பால சுப்பிரமணி & C சதீஷ் குமார் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் குமார் இயக்கத்தில், V மதி நடிகராக அறிமுகமாகும் திரைப்படம்  பிதா. மாறுபட்ட களத்தில் திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சி, படக்குழுவினருடன் திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

Advertisement

இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியது...

Advertisement

பிதா அன்மாஸ்கிங் மிக சந்தோசமாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் இன்னொரு புது ஹீரோ, புது தயாரிப்பாளர் வருவதை நாம் வரவேற்க வேண்டும். இன்றைக்குத் தமிழ் சினிமாவில் ஹீரோ சம்பளம் மிகப்பெரியதாகி விட்டது. படத்தின் பட்ஜெட் எங்கோ போய்விட்ட நிலையில், இந்த மாதிரி புது அறிமுகங்கள் வர வேண்டும். மதியழகன் நல்ல கதைகள் தேர்ந்தெடுத்து, நல்ல படங்கள் செய்ய வாழ்த்துக்கள். கார்த்திக் குமாருக்கு என் வாழ்த்துக்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  எல்லோரையும் மகிழ்விக்கும் படமாகப் பிதா வர வாழ்த்துக்கள்

நடிகர் குணா பேசியது

மண்டியிட்டு வாழ்வதைவிட சண்டையிட்டு சாவதே மேல் என்ன சொன்னான் என் அண்ணன் வேலு பிரபாகரன். நான் இந்த விழாவிற்கு வந்ததற்கான காரணம் அண்ணன் வேலு பிரபாகரன் தான்.  இந்த படைப்பைத் தம்பி கார்த்திக் நன்றாக எடுத்து இருப்பார் என்று நம்புகிறேன்.   தயாரிப்பாளர் மதியழகன் பல திரைப்படங்களை எடுத்துள்ளார், அவர் சமீபத்தில் எடுத்த சாமானியன் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும் இந்த வீடு பேங்கினுடையது உங்களுடையது அல்ல என,  மக்களிடம் கொள்ளையடிக்கும் பேங்க் பற்றி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு அற்புதமான திரைப்படத்தை எடுத்திருந்தார். அந்த கதையை எழுதியவர் தான் கார்த்திக். அவரை வைத்து இப்போது மதியழகன் நடித்து எடுத்திருக்கும் படம் கண்டிப்பாக ஒரு நல்ல படைப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த திரைப்படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்

திருமுருகன் காந்தி பேசியது...

திரைத்துறை சார்ந்து பெரிய அறிமுகம் இல்லை. மண் சார்ந்து ஒரு படமெடுத்துள்ளார்கள் என்று சொன்னார்கள். டிரெய்லரில் பிரபாகரன் அய்யா படம் பார்த்த போது ஒரு நம்பிக்கை வந்தது. சமூக அக்கறையோடு இயங்கக் கூடிய நாயகனை மதி முன்னிறுத்துகிறார். முதல் படம் போல் தோன்றவில்லை. வாழ்த்துக்கள். இயக்குநர் கார்த்திக்குமார் நேர்த்தியாகப் படத்தை எடுத்துள்ளது போல் இருக்கிறது. நல்ல படைப்பாக இருக்குமென்று நம்புகிறேன். ஈழத்தினை பற்றிப் பேசும்போது மனதில் பெரும் வலி இருக்கிறது. இங்கு ஈழத்திற்காக போராடிய அண்ணன் பிரபாகரன் பெயரைக்கூடச் சொல்ல முடியாத நிலை நிலவுகிறது.  அதைப்பற்றிப் பேசவே பயப்படும் காலத்தில், ஒரு படைப்பைத் தர முயலும் இந்த குழுவிற்கு என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

நடிகை வனிதா விஜயகுமார் பேசியது...

எனது தண்டுபாளையம் திரைப்படம் இந்த வாரம் ரிலீஸ் ஆகியுள்ளது, அதைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தின் விழா நடக்கிறது. இங்கு பர்சனலாக ஒரு விஷயத்தை நான் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன், எல்லோருடைய வாழ்விலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் பல பர்சனல் பக்கங்கள் இருக்கும். அதில் நடக்கும் விஷயங்கள் நம்மை முடக்கிவிடும் ஆனாலும் அதைத் தாண்டி நல்ல விஷயங்களும் நடக்கும்.  எக்ஸாம் தோல்வி  அடைந்தால் சூசைட், காதல் தோல்வி அடைந்தால் சூசைட்   என்ற நிலை இப்போது இருக்கிறது ஆனால் அதைத் தாண்டியும் வாழ்க்கை இருக்கிறது வெற்றி இருக்கிறது உங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்து வாழுங்கள்  வெற்றியை எதிர்பார்க்கத் தேவையில்லை அது உங்களை வந்தடையும்.  இப்படம் கதை எனக்குப் பிடித்திருந்தது, எனக்கு இதில் பிராஸ்தடிக் மேக்கப், அதைச் சாதாரணமாக நினைத்து விட்டேன், அதன் பிறகு தான் புரிந்தது மிக மகிழ்ச்சியாக ரசித்து இந்த வேலையைச் செய்தேன்.  இந்தப்படம் எடுக்கும்போதே படத்தின் தரம் தெரிந்தது. திட்டமிட்டு உழைத்தார்கள். கார்த்திக் மதியழகன் மிகக் கடுமையாக உழைத்துள்ளார்கள். படத்தின் வெற்றி விழாவில் இன்னும் நிறையப் பேசுகிறேன் எல்லோருக்கும் நன்றி.

தயாரிப்பாளர் நடிகர் V மதி பேசியது...

இது வித்தியாசமான தருணம், நான் நடிகனாக அறிமுகமாகும் முதல் மேடை , இந்த மாதத்திலேயே தயாரிப்பாளராக நான்கைந்து படங்களுக்கு இந்த மேடைக்கு வந்திருக்கிறேன் இப்பொழுது நடிகனாக உங்கள் முன்னால் வந்திருக்கிறேன்.  உங்கள் முழு ஆதரவினை தர வேண்டுகிறேன், நீங்கள் எப்போதும் எனக்கு நல்ல ஆதரவைத் தந்து வந்திருக்கிறீர்கள் ஆனாலும் கடைசி படம் பெரிய அளவில் செல்லவில்லை, இருந்தும் ராமராஜன் அவர்களை நடிக்க வைத்த பெருமை கிடைத்தது சந்தோஷம். இப்படத்தில் ஈழம், மேதகு பிரபாகரன் போன்ற விஷயங்களைப் பரபரப்புக்காகப் பயன்படுத்தவில்லை அவர்களை எந்த விதத்திலும் அவமதிக்கவில்லை மிகவும் உண்மையாக ஒரு படைப்பை உருவாக்கி உள்ளோம். இதுவரை இல்லாத வகையில் மிக வித்தியாசமான படைப்பாக இந்த படம் இருக்கும், உங்கள் அனைவர் ஆதரவையும்  தாருங்கள் நன்றி.

இயக்குநர் கார்த்திக் குமார் பேசியது..

எனது தயாரிப்பாளர் பால சுப்ரமணியன் மற்றும் சதீஷ் ஆகியோருக்கு முதல் நன்றி சாமானியன் திரைக்கதையை சொன்னபோது, கேட்டவுடனே அந்தக் கதை மீது நம்பிக்கை வைத்து, உடனே அதைத் தயாரித்தார்கள். அதேபோல் இந்தக் கதையின் மீதும் நம்பிக்கை வைத்து, தயாரித்து இருக்கிறார்கள் மிக்க நன்றி. அவர்கள் தந்த வாய்ப்புதான் இந்த மேடையில்  நான் நிற்கக் காரணம், நடிகராக இந்த படத்தில் மதியழகன் அறிமுகமாகிறார். அவர் மனதளவில் மிக அழகானவர், அவர் எங்கேயும் பேச மாட்டார் இந்த மேடையில் தான் முதல் முறையாகப் பேசியுள்ளார். மிக அமைதியானவர் ஒரு சிறு தொழிலைப் பார்த்தாலே பலர் வேறு துறைக்குச் சென்று விடுவார்கள் ஆனால் மதியழகன் பத்து பன்னிரண்டு படங்களைத் தாண்டி திரைத்துறை தான் வேண்டும் என்று நிமிர்ந்து நிற்கிறார் தொடர்ந்து படங்கள் செய்கிறார் இப்படத்தில் முழு நடிகராக வருகிறார். அவரிடம் பயங்கரமான திறமை இருக்கிறது, அது இந்த திரைப்படத்தில் முழுமையாக வெளிப்படும், இந்தப் படத்திற்காக மதி சார் ரொம்பவும் மெனக்கெட்டுள்ளார். இதுவரை சொல்லாத புதிய விஷயத்தைச் சொல்ல முயற்சித்துள்ளோம் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நாஞ்சில் சம்பத் பேசியதாவது..

நண்பர் தம்பி கார்த்திக் குமாருக்கு என் வாழ்த்துக்கள். நான் வாழ்ந்த ஊரைச் சார்ந்தவன் தம்பி கார்த்திக். ஒரு அதிர்வை உண்டாக்கும் படைப்பைத் தம்பி செய்கிறான் என்பது மகிழ்ச்சி. இன்றைய காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட பல படங்கள் திரைக்கு வரவில்லை. பல படங்கள் சென்சார் பிரச்சனைகளில் சிக்கி முடங்கிக் கிடக்கிறது.  நான் நடித்த ஒரு படத்தின் பெயர் சேகுவாரா. அதில் என் பெயர் அண்ணாதுரை அந்தப்பெயர் வரக்கூடாதென்கிறார்கள். சினிமா என்பது சதுப்புநிலம். அதை அணுகுவது கடினம். நான் சினிமாக்காரன் இல்லை நான் இருக்கும் இடத்தில் இருக்கும் அரசியலை விட இங்கு அதிக அரசியல் இருக்கிறது. அந்த களத்தில் தம்பி கார்த்திக் ஒரு நல்ல படைப்பைத் தர முயற்சிக்கிறார். அவர் முயற்சி கண்டிப்பாக வெற்றி அடையும். ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படைப்பாளியாக கார்த்திக் குமார் வருவார். 11 படங்களைத் தயாரித்த மதியழகன் இப்படத்தில் நடிகராக மாறியுள்ளார். இந்தக்கூட்டணி வெல்வதற்கு என் வாழ்த்துக்கள் நன்றி.

Tags :
Bala SubramaniKarthik KumarOfficial Unmasking VideoPithaSathish KumarSrinik ProductionV Mathiபிதா
Advertisement
Next Article