தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

டிரம்ப் ஆட்சியில் இருந்து தப்பித்து சொகுசு கப்பலில் நான்காண்டு கழிக்கலாம் வாங்க!

07:32 AM Nov 17, 2024 IST | admin
Advertisement

ரண்டாவது முறையாக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்பது உறுதியான நேரத்தில் அமெரிக்கர்கள் இணையத்தில் என்னென்ன தேடினார்கள் என்று சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவிலிருந்து நியூசிலாந்து சென்று செட்டில் ஆவது எப்படி என்பது தொடர்பான கூகுள் தேடல்கள் 2,000% அதிகரித்திருந்தன. கனடாவில் குடியேறுவது எப்படி என்று கூகுள் தேடல்கள் 1,270% அதிகரித்திருந்தன. இதேபோல ஆஸ்திரேலியாவில் குடியேறும் நடைமுறைகளை அறிந்துகொள்ளும் தேடல்கள் 820% அதிகரித்தன.பணக்கார அமெரிக்கர்கள் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறும் சூழலை ட்ரம்ப்பின் வெற்றி ஏற்படுத்தி விட்டதாகச் செய்திகள் பரவும் நிலையில், சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவர்களைத் திருப்பி அனுப்புவதில் ட்ரம்ப் உறுதியாக இருக்கிறார்

Advertisement

இந்த நிலையில், அடுத்து டிரம்பின் பதவிக்காலத்திலிருந்து தப்ப விரும்புபவர்களுக்கு ஃபுளோரிடாவை சேர்ந்த வில்லா வை ரெசிடன்ஸ் என்ற கப்பல் நிறுவனம் அசத்தல் ஆஃபர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, நான்காண்டுகள் சொகுசு கப்பலில் உலகை வலம்வரும் திட்டத்தை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.இந்த திட்டத்துக்கு, ‘Skip Forward’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நான்காண்டில் ஏழு கண்டத்திலும் 140 நாடுகள் வழியாக சுமார் 425 துறைமுக நகரங்களை சொகுசு கப்பல் உலா வரவுள்ளது. இதில் பயணிக்க விரும்புவோர் எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் ஏறிக் கொள்ளலாம். பயணிகளுக்குத் தேவையான உணவு, உடற்பயிற்சி நிலையம், மசாஜ் சென்டர், மருத்துவ வசதி என சகல வசதிகளும் கப்பலில் இடம்பெற்றுள்ளன.

Advertisement

நான்காண்டுகள் முழுமையாகப் பயணிப்பது என்றால், ஆண்டுக்கு தலா 40 ஆயிரம் டாலர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், நான்காண்டுக்கு குறைவாகவும் பயண ஆஃபர் இருப்பதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது இந்தப் பயணத்திட்டத்திற்கு 4 வருடத்திற்கான பணத்தை முன்பணமாக செலுத்திய பின்னர், இருவர் தங்கும் அறைக்கு 1,59,999 அமெரிக்க டாலர்களும், ஒருவருக்கு 2,55,999 அமெரிக்க டாலர்களும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், அடுத்த நான்கு ஆண்டுகளில் 140 நாடுகளில் உள்ள 425 துறைமுகங்களுக்குச் சென்று 7 கண்டங்களையும் அவற்றில் உள்ள 13 உலக அதிசயங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட தீவுகளையும் சுற்றி வர முடியும். சுமார் 600 பேர் இதில் பயணிக்கலாம். இப்போது கப்பல் ஏறினால் அடுத்து 2029ஆம் ஆண்டுதான் இவர்கள் மீண்டும் அமெரிக்கா வந்து சேர்வார்கள்.

இந்தத் திட்டம் குறித்து வில்லா வீ நிர்வாக செயல் இயக்குநர் மைக்கெல் பீட்டர்சன், “ ‘தேர்தலில் அவர் (ட்ரம்ப் பெயரை அவர் குறிப்பிடவில்லை) வெற்றிபெற்றால் நாட்டைவிட்டு வெளியேறுவோம்’ என்று கூறியவர்களுக்கான சரியான பயணத்திட்டம் எங்களிடம் இருப்பதாக நாங்கள் உணர்கிறோம். எங்களுக்கு அரசியல்ரீதியில் பல்வேறு பார்வைகள் இருக்கின்றன. ஆனால், அரசியலுக்கு அப்பாற்பட்டு உலகை ஆராய்வதற்கான ஆர்வத்தின் மூலம் நமது சமூகம் ஒன்றிணைகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Escape the Trump regimeluxury ship!whole worldஆட்சிசொகுசுக் கப்பல்டிரம்ப்தப்பித்தல்
Advertisement
Next Article