தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

12-ம் வகுப்பு, டிகிரி தகுதிக்கு EPFO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

07:18 PM Apr 05, 2023 IST | admin
Advertisement

த்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் (EPFO) 2859 சமூக நல அலுவலர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 28.04.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisement

சமூக நல அலுவலர் (Social Security Assistant)

Advertisement

காலியிடங்களின் எண்ணிக்கை – 2674

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 18-27 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின் படி SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவுகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 29,200 – 92,300

சுருக்கெழுத்து தட்டச்சர் (Stenographer)

காலியிடங்களின் எண்ணிக்கை – 185

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 18-27 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின் படி SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவுகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 25,500 – 81,100

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறனறித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வில் கணிதம், திறனறிதல், ஆங்கிலம், பொது அறிவு மற்றும் கணினி அறிவு ஆகிய பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். தேர்வு 2 மணி நேரம் 30 நிமிடங்கள் நடைபெறும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு திறனறித் தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://recruitment.nta.nic.in/WebInfo/Page/Page?PageId=1&LangId=P என்ற இணையதள பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2023

விண்ணப்பக் கட்டணம்: ரூ.700. இருப்பினும் பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்று திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.epfindia.gov.in/site_docs/PDFs/Recruitments_PDFs/Advertisement_for_SSA_24032023.pdf  மற்றும் https://www.epfindia.gov.in/site_docs/PDFs/Recruitments_PDFs/Advertisement_for_Stenographer(Gr.C)_24032023.pdf என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணையை பார்வையிடவும்.

Tags :
12th Classdegree?EligibilityEPFOjobsSocial Security Assistant
Advertisement
Next Article