For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

என்ஜினீயரிங்: முதல் சுற்று கலந்தாய்வில் 12,747 இடங்கள் ஒதுக்கீடு!

05:04 PM Aug 05, 2024 IST | admin
என்ஜினீயரிங்  முதல் சுற்று கலந்தாய்வில் 12 747 இடங்கள் ஒதுக்கீடு
Advertisement

ன்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான பொது கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடக்கிறது. இதில் முதல் சுற்று கலந்தாய்வு கடந்த 29ம் தேதி தொடங்கியது. இந்த கலந்தாய்வில் பங்கேற்க 26 ஆயிரத்து 654 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.ஆன்லைன் வாயிலாக நடைபெறும் இந்த கலந்தாய்வில், விருப்ப இடங்களை தேர்வு செய்தல், தற்காலிக ஒதுக்கீடு செய்தல், அந்த இடங்களை உறுதி செய்தல், பின்னர் தற்காலிக ஒதுக்கீடு ஆணை அல்லது இறுதி ஒதுக்கீடு ஆணை பெறுதல், ஒதுக்கீடு ஆணை பெற்றவர்கள் கல்லூரிகளில் சேருதல் ஆகிய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

Advertisement

அந்தவகையில் விருப்ப இடங்களை தேர்வு செய்யும் மாணவ–மாணவிகள் எத்தனை கல்லூரிகளை வேண்டுமானாலும் தேர்வு செய்ய முடியும். அதன்படி, 26 ஆயிரத்து 654 பேர் அழைக்கப்பட்ட முதல் சுற்று கலந்தாய்வில், 21 ஆயிரத்து 408 பேர் விருப்ப இடங்களை தேர்வு செய்தனர். அவர்களில் 6 ஆயிரத்து 870 பேர் தற்காலிக ஒதுக்கீடு ஆணையையும், 10 ஆயிரத்து 890 பேர் இறுதி ஒதுக்கீடு ஆணையையும் பெற்றுள்ளனர்.

Advertisement

இதேபோல், 7.5 சதவீத உள் ஒதுக்கீடு பிரிவில் 1,406 பேர் அழைக்கப்பட்டு, அவர்களில் 1,250 பேர் விருப்ப இடங்களை தேர்வு செய்திருந்தனர். அவர்களில் 835 பேர் இறுதி ஒதுக்கீடு ஆணைகளையும், 323 பேர் தற்காலிக ஒதுக்கீடு ஆணைகளையும் பெற்றிருக்கின்றனர்.

மேலும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளில் சேருவதற்கான பொது கலந்தாய்வில் 889 பேர் இறுதி ஒதுக்கீடு ஆணைகளையும், 165 பேர் தற்காலிக ஒதுக்கீடு ஆணைகளையும் பெற்றுள்ளனர். இந்த பாடப்பிரிவுகளில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் இறுதி ஒதுக்கீடு ஆணையை 133 பேரும், தற்காலிக ஒதுக்கீடு ஆணையை 27 பேரும் பெற்றுள்ளனர்.

ஆக மொத்தம் முதல் சுற்று கலந்தாய்வில் 12,747 பேர் இறுதி ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இறுதி ஒதுக்கீடு ஆணை பெற்றவர்கள் அவர்கள் தேர்வு செய்த கல்லூரிகளுக்கான இடங்களில் வருகிற 7-ம் தேதிக்குள் சேரவேண்டும். அதேபோல், தற்காலிக ஒதுக்கீடு ஆணை பெற்றவர்கள் அவர்களுக்கு கிடைத்த இடங்களை முதலில் உறுதி செய்து அதற்கான கட்டணத் தொகையை மாணவர் சேர்க்கை சிறப்பு மையத்தில் வருகிற 7ம் தேதிக்குள் செலுத்தி காத்திருக்க வேண்டும்.

இதில் இறுதி ஒதுக்கீடு ஆணை பெற்று கல்லூரிகளில் சேராதவர்களின் இடங்கள், அதேபோல் தற்காலிக ஒதுக்கீடு ஆணை பெற்று கட்டணம் செலுத்தாதவர்களின் இடங்கள், மாணவர் சேர்க்கை சிறப்பு மையத்தில் கட்டணம் செலுத்தி காத்திருக்கும் தற்காலிக ஒதுக்கீடு ஆணை பெற்ற மாணவ-மாணவிகளின் விருப்ப இடங்களில் முன்னுரிமை பெற்றதாக இருந்தால் அது அவர்களுக்கு வழங்கப்பட்டு, இறுதி ஒதுக்கீடு ஆணை வருகிற 10ம் தேதி கொடுக்கப்படும் என மாணவர் சேர்க்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement