தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

அமலாக்க அதிகாரி அங்கித் திவாரி வழக்கு: சுப்ரீம் கோர்ட் நிபந்தனை ஜாமீன்!

08:19 PM Mar 20, 2024 IST | admin
Advertisement

மலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி திண்டுக்கல்லில் அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கும் போது பிடிபட்ட வழக்கில் கைதாகி கடந்த 99 நாட்களுக்கு மேலாக மதுரை மத்திய சிறையில் உள்ள அவருக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Advertisement

திண்டுக்கல் ஏரியாவில் உள்ள அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவிடம், அவர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் வாங்கியதாக மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் அங்கித் திவாரி ஜாமீன் கோரி திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்

இந்த வழக்கில் அவா் ஜாமின் கோரி திண்டுக்கல் முதன்மை நீதிமன்றம், சென்னை ஐகோர்ட் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுக்கள் ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டன. இதனிடையே, அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் வழக்கை விசாரிக்க தான் விரும்பவில்லை என்றும், விசாரணையில் இருந்து விலகுவதாகவும் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி விவேக்குமார் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

அதே சமயம் இடைக்கால ஜாமின் வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் அங்கித் திவாரி வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் அங்கித் திவாரிக்கு ஜாமின் வழங்க கூடாது என தமிழக அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்து இருந்தது. ஆனால் கைது செய்யப்பட்டு 99 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்து வருகிறேன். இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. நீண்ட நாள் சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும். நீதிமன்றம் பிறப்பிக்கும் நிபந்தனைகளை பின்பற்றுவேன்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி அமர்வு அங்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், மாநில அரசு அனுமதி இன்றி வெளியூர் செல்ல கூடாது. விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வழக்கு சாட்சியங்களை கலைக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை குறிப்பிட்டுள்ளது. மேலும், அங்கித் திவாரி வழக்கு குறித்து அமலாக்கத்துறை விளக்கம் அளிக்க வேண்டும் என்று வழக்கை வரும் ஏப்ரல் மாதம் 18ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Tags :
Ankit TiwaricaseConditional Bail!EDEnforcement OfficergrantsSupreme Court
Advertisement
Next Article