தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு !

05:29 AM Dec 10, 2024 IST | admin
Advertisement

ந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முப்படைகளில் விமானப்படையின் பங்கு மிக முக்கியமானதாக இருந்து வருகிறது. எதிரிகளை விரைவாக எதிர்கொள்வதற்கு மட்டுமின்றி, வான் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய விமானப்படையின் பங்கு மிக முக்கியமானது.பாதுகாப்புப் பணிகள் மட்டுமின்றி, இயற்கை பேரிடர் சமயங்களில் மீட்புப் பணிகளில் இந்திய விமானப்படையின் பங்கு அளப்பரியதாக உள்ளது. அண்டை நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வரும் இந்திய விமானப்படையில் இணைந்து பணியாற்ற வாய்ப்பு வந்துள்ளது.

Advertisement

பணி விபரம்

Advertisement

பிளையிங் (Flying), கிரவுண்ட் டியூட்டி (டெக்னிக்கல், டெக்னிக்கல் சாராதது)

குறிப்பு: ஆண், பெண் - இருபாலினரும் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலி பணியிடங்கள்:

336

வயது வரம்பு:

பிளையிங் பிரிவு - 20 - 24

கிரவுண்ட் டியூட்டி பிரிவு - 20 - 26

சம்பளம்:

ரூ.56,100 - 1,77,500

கல்வி தகுதி:

பி.இ, பி.டெக் அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.

தேர்வு செய்வது எப்படி?

ஆன்லைன் தேர்வு, செய்முறை தேர்வு, நேர்காணல். உடல்தகுதி தேர்வும் இருக்கும்.

தேர்வு தேதி:

பிப்ரவரி 22 மற்றும் 23, 2025

விண்ணப்பிக்க கடைசி தேதி:

டிசம்பர் 31, 2024.

விண்ணப்பிக்கும் இணையதளம்:

https://afcat.cdac.in/AFCAT/

மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Tags :
Air Force:employmentflyingIndian Air Forceஇந்திய விமானப் படைபிளையிங்விமானப்படைவேலை வாய்ப்பு
Advertisement
Next Article