தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

10:24 AM Jul 14, 2024 IST | admin
Advertisement

மிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஏற்படும் காலிப்பணியிடங்களை அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படும். அதன்படி தற்போது தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

பணியிடங்கள் விவரம்:

அலுவலக உதவியாளர்: 04
டிரைவர்: 01 என மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

Advertisement

கல்வி தகுதி:

அலுவலக உதவியாளர் பணியிடங்களை பொறுத்தவரை விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்து இருக்க வேண்டியது அவசியம். சைக்கிள் ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும்.

டிரைவர் பணிக்கு குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் டிரைவிங் லைசன்ஸ் வைத்து இருக்க வேண்டும்.

வயது வரம்பு & சம்பளம்:

வயது வரம்பை பொறுத்தவரை 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். எனினும், அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

சம்பளத்தை பொறுத்தவரை அலுவலக உதவியாளர் மற்றும் டிரைவர் ஆகிய இரு பணியிடத்திற்கும் மாதம் ரூ.15,700 - 50,000-வரை சம்பளம் கிடைக்கும்.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னையில் உள்ள ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவர்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?:

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தினை டவுன்லோடு செய்து அதில் கேட்கப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 31 ஆம் தேதிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

The Secretary,
Tamil Nadu Electricity Regulatory Commission,
4th Floor, SIDCO Corporate Office Building,
Thiru.vi.ka. Industrial Estate,
Guindy,
Chennai 600032

தேர்வு முறை:

தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கபட்டு நேர்முகத்தேர்வு முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு எதுவும் கிடையாது. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை ஒரு முறை நன்கு படித்து அறிந்து கொள்ளவும். தேர்வு அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்ய ஆந்தை வழிகாட்டி/வேலைவாய்ப்பு - இந்த இணையதளத்தை கிளிக் செய்யவும்.

Tags :
அரசு வேலைஜாவ்
Advertisement
Next Article