தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

இ-மெயில் விமர்சனம்!

08:51 PM Feb 10, 2024 IST | admin
Advertisement

ர்வதேச அளவில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கோடிக்கணக்கானோர் அடிமையாகி உள்ளனர். இது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.ஆன்லைன் வீடியோ கேம்களுக்கான பயன்பாடு ஊரடங்கு காலத்தில் அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் அதிகரித்துள்ளதாக தகவல் வந்த நிலையில் ஆன்லைன் விளையாட்டுகளின் மூலம் ஏற்படும் ஆபத்துகளை மையப்படுத்தி ஒரு கதையை இ மெயில் என்ற பெயரில் வழங்கி இருக்கிறார்கள்.. இக்கதையை சஸ்பென்ஸாகவும், யூகிக்க முடியாத பல திருப்பங்களுடனும் சொல்லியிருக்கும் இயக்குநர் எஸ்.ஆர்.ராஜன், அதன் பாதிப்புகளை தெளிவாக சொல்லாததால் இந்த மெயில் ஸ்பேம் ஃபோலடருக்குள் போய் விட்டது.

Advertisement

அதாவது ஹீரோ அசோக் ராகினி திவேதி லவ் செய்து மேரேஜ் செய்துக் கொள்கிறார். அந்த நாயகி ராகினி ஆன்லைன் கேமில் அதீத ஆர்வம் உள்ள நிலையில் ஒரு பெரும் பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையில் இருந்து தன் ஒய்ஃபை காப்பாற்ற நினைக்கும் அசோக் செல்வனின் உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது. இதனால், பிரச்னையை தானே ஃபேஸ் செய்து சமாளிக்க நினைக்கிறார் ராகினி திவேதி, அந்த பிரச்சனை என்ன?, நாயகனுக்கு யாரால் ஆபத்து? ஹீரோயின் என்ன செய்து சமாளிக்க முயன்றார் என்பதையெல்லாம் திக் திக் பாணியில் சொல்ல முயன்றிருப்பதே ‘இ-மெயில்’ கதை.

Advertisement

ஹீரோவாக வரும் முருகா அசோக். லவ் சீன்கள் புகுந்து விளையாடுகிறார். அத்துடன் மனைவிக்கு ஆபத்து என்றதும் களமிறங்கும் வேகத்தில் கவனம் ஈர்க்கிறார். திரைக்கதையில் இவருக்கு குறைவான பங்கே இருப்பதால் நீர்த்தும் போய் விடுகிறார். நாயகி ராகினிதிவேதிக்கு இ மெயிலின் ஹார்ட் டிஸ்க் லெவலில் ஒட்டு மொத்த படத்தை தாங்கிப் பிடிக்கும் கனமான வேடம். ரொமான்ஸ் மட்டுமின்றி ஃபைட் சீனகளு அவருக்கு இருப்பதை இரசித்து சரியாக செய்திருக்கிறார்.

இரண்டாவது நாயகன் நாயகியாக நடித்திருக்கும் ஆதவ்பாலாஜி, ஆர்த்திஸ்ரீ ஆகியோரும் கிடைத்த ரோலின் கனத்தை உணர்ந்து சரியாக செய்திருக்கிறார்கள். .

மறைந்த மனோபாலா, லொள்ளுசபா மனோகர் மற்றும் வில்லனாக நடித்திருக்கும் பில்லிமுரளி ஆகியோரும் வருகிறார்கள்.. போகிறார்கள்..

கேமராமேன் எம்.செல்வத்தின் ஒளிப்பதிவால் மெயில் முழுக்க வண்ணமயமாக காட்சிப்படுத்தியிருக்கிறது.

கவாஸ்கர் அவினாஷ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஜுபினின் பின்னணி இசை சுமார்தான்.

மனித இனத்திற்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பம் நிறைய நல்லது செய்திருந்தாலும் இன்றைய இளைஞர்கள் பலர் ஆன்லைன் விளையாட்டுகளில் பொழுதைக் கழிக்கின்றனர். மைதானங்களுக்கு சென்று சக நண்பர்களுடன் விளையாடி பொழுதைக் கழிப்பது இப்போது குறைந்துவிட்டது. தொழில்நுட்பத்தை இன்றைய இளைஞர்கள் நல்லபடியாகப் பயன்படுத்தினால் நிறைய கல்பனா சாவ்லாக்கள், அப்துல் கலாம்கள் உருவாவதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது. ஆனால் ஆர்வக் கோளாறால் ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாவதால் ஏற்படும் விளைவுகளைச் சொல்ல முயல்வதில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். ஆனாலும் யூத்களுக்கு பிடிக்கும் விதத்தில் கொடுக்க  ஆசைப்பட்டிருக்கிறார்.

மொத்தத்தில் இந்த இ மெயில் - இளசுகளுக்கு எச்சரிக்கை

மார்க 2.25/5

Tags :
AshokDR. SHIVARAJ KUMARe mailRAGINISR RAJANTAMIL MOVIE Reviewஇ மெயில்விமர்சனம்
Advertisement
Next Article