For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

எலான் மஸ்க் டீமின் நடக்கவும் பேசவும் கூடிய ஆப்டிமஸ் ஜெனரேஷன்-2 ரோபோ!

04:41 PM Oct 12, 2024 IST | admin
எலான் மஸ்க் டீமின் நடக்கவும் பேசவும் கூடிய ஆப்டிமஸ் ஜெனரேஷன் 2 ரோபோ
Advertisement

மெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், கடந்த வியாழன் அன்று 'வீ ரோபாட் ' என்ற நிகழ்ச்சியை டெஸ்லா நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தவர்களை, வரவேற்ற ரோபோக்கள், நடனம் ஆடி வரவேற்றன. உணவு, டிரிங்க்ஸ் வழங்குவது என எல்லோருடனும் பழகி பேசி செல்பி எடுத்து அசத்தியது.ரோபோக்களுக்கு ஆப்டிமஸ் ரோபோ என டெஸ்லா நிறுவனம் பெயரிட்டுள்ளது.

Advertisement

மனிதனைப் போலவே செயல்படும் ஒரு ரோபோவை உருவாக்குவதற்கு மிக அருகில் வந்துவிட்டான் மனிதன். ஆம், அமெரிக்க தொழிலதிபரும், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் மனிதர்களைப் போலவே நடக்கவும் பேசவும் கூடிய ரோபோவை உருவாக்கியுள்ளார்.கலிஃபோர்னியாவில் நடைபெற்ற ‘We, Robot’ நிகழ்ச்சியில் டெஸ்லாவின் மனித உருவ ‘ஆப்டிமஸ்’ ரோபோக்களை அறிமுகப்படுத்தினார் எலான் மஸ்க்.

Advertisement

இதுகுறித்து அவர் பேசுகையில்,'' 'இந்த ஆப்டிமஸ் ரோபோக்கள், உங்களுக்கு தேவையான அடிப்படை செயல்கள், சேவைகளை வழங்கும்.உங்களுக்கு ஓர் ஆசிரியராக, குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டுவது, வளர்ப்பு நாயுடன் நடைபயிற்சிக்கு செல்வது என உங்கள் நண்பன் போல சேவைகளை வழங்கும். வீட்டில் உள்ள அலமாரியில், அந்தந்த பொருட்களை அடுக்குவது, சமையலறை பாத்திரங்களை கழுவுவது, சுத்தம் செய்வது என நீங்கள் என்ன செய்ய நினைக்கிறீர்களோ, அதை அந்த ரோபோக்கள் செய்து அசத்திவிடும்.உங்களுடன் நன்றாக பேசி, நடந்து வரும். மதுபான கூடாரங்களில், பானங்களை வழங்கி சேவை செய்யும்.இந்த ஆப்டிமஸ் ரோபோக்களின் விலை, ரூ.17 லட்சத்திலிருந்து 26 லட்ச ரூபாய் வரை இருக்கும்'' எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது 20 பேர் அமர்ந்து செல்லும் ரோபோ டேக்ஸி ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டது. நேற்றைய தினம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஆப்டிமஸ் ஜெனரேஷன்-2 ரோபோ, இதற்கு முந்தைய ரோபோக்கள் செய்ய முடியாத பல வகையான வேலைகளை இந்த ரோபோட் செய்ய முடிகிறது. முன்பு அது நடக்கவும் பேசவும் மட்டுமே முடியும். முந்தைய மாடலை விட இப்போது புதிய பதிப்பில் பல மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags :
Advertisement