தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

கனமழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய மின்சார முன்னெச்சரிக்கை & பாதுகாப்பு வழிமுறைகள்!

06:59 PM Dec 02, 2023 IST | admin
Advertisement

ழக்கமான வடகிழக்கு பருவமழை காரணமாக, தமிழக தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு அரசு மக்களுக்காக துரித நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் வரும் டிச. 3 (நாளை), 4, 5 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் டிசம்பர் 4-ம் தேதி மிக்ஜாம் புயல் தெற்கு ஆந்திரா - வட தமிழகத்தில் சென்னைக்கும் - மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது டிசம்பர் 5-ம் தேதி காலை கரையை கடக்கும் என்றும், இந்த மிக்ஜாம் புயல் தீவிர புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதையடுத்து புயல், கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு துரிதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் பொதுமக்களுக்கு பாதுகாப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

இது தொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :

Advertisement

* மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள், மின்சார கேபிள்கள், மின்சார கம்பங்கள், பில்லர் பாக்ஸ் (Pillar Box) மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்.

* சாலைகளிலும், தெருக்களிலும் மின்கம்பங்கள் மற்றும் மின் சாதனங்களுக்கு அருகே தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் நடப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும்.

* தாழ்வாக தொங்கிக்கொண்டிருக்கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்வதையும், தொடுவதையும் மக்கள் தவிர்க்க வேண்டும்.

மிக்ஜாம் புயல் எதிரொலி : அவசர எண்ணுடன் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மின்சார வாரியம் : முழு விவரம் !
* ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க யாரும் முயற்சிக்க வேண்டாம்.

* மின்வயர் இணைப்புகளை திறந்த நிலையில் இல்லாமல், இன்சுலேசன் டேப் (Insulation Tape) சுற்றி வெளிபுற மின் காப்பு செய்யவும்.

* வீடுகள் மற்றும் கட்டிடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களில் கை வைப்பதை தவிர்க்க வேண்டும்.

* மின்சார கசிவு, மின் அதிர்ச்சி ஏற்படும் நிகழ்வில் உடனே அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். மின் வாரியத்தின் 24 மணி நேர சேவைக்காக 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Tags :
CurrentCycloneMichaungelectricityHeavy Rainsprecautionssafety measures
Advertisement
Next Article