தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

இந்திய தேர்தல் ஆணையத்தின் தில்லாலங்கடியும், தில்லுமுல்லுவும்!

06:02 PM Apr 26, 2024 IST | admin
Advertisement

பாம்பும் சாகக் கூடாது; கம்பும் உடையக் கூடாது’ என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள். அதற்கு, ‘நான் அடிப்பதுபோல் அடிக்கிறேன்; நீ அழுவதுபோல் அழு’ என்றும் பொருள் கொள்ளலாம். இதைத்தான் நமது தேர்தல் ஆணையம் இப்போது செய்து கொண்டிருக்கிறது.

Advertisement

நமது மாண்புமிகு பிரதமர் அவர்கள் இராஜஸ்தான் மாநிலம் பாஸ்வாராவில் பேசும்போது, ‘காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், உங்களிடமுள்ள தங்கத்தையும் கடினமாக உழைத்துச் சம்பாதித்த பணத்தையும் அபகரித்து, ஊடுருவல்காரர்களுக்கும் அதிக குழந்தைகள் பெறுபவர்களான முஸ்லிம்களுக்கும் பகிர்ந்தளித்துவிடும்; பெண்களின் தாலியைக்கூட பறித்து, ஊடுருவல்காரர்களுக்குக் கொடுத்து விடுவார்கள்’ என்று பேசியதோடு, ‘நாட்டின் உசொத்துக்களில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை’ என்று மன்மோகன் சிங் எப்போதோ பேசியிருப்பதாகச் சொல்லி, அவரையும் வம்புக்கிழுத்து, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார்.

Advertisement

பிரதமர் பேசியதோடு, இராகுல் காந்தி கோட்டயத்தில், ‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்ற நிலையை நோக்கி பிரதமர் மோடி வழி நடத்துகிறார்’ என்றும் கோவையில், தமிழ் மொழி, கலாசாரம், பாரம்பரியத்தை பிரதமர் மோடி அழிக்க முயற்சி செய்கிறார்’ என்று பேசியதையும் ஒப்பிட்டால், ஒன்றுமேயில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனாலும் நடுநிலையான நமது தேர்தல் ஆணையம் சும்மா இருக்குமா? பொங்கி எழுந்து விட்டது. இங்கே ‘தேர்தல் நடத்தை விதிகளை மீறி விட்டார்’ என்று மோடிஜி மேல் எந்தப் புகாரும் இல்லாமல், இராகுல்மீது மட்டுமே புகார் வந்திருந்தால், தேர்தல் ஆணையம் இராகுலுக்கே நேரடியாக நோட்டீஸ் அனுப்பியிருக்கும். மோடிஜி மீதும் புகார் வந்து விட்டதே...என்ன செய்வது? அவருக்கு நேரடியாக நோட்டீஸ் அனுப்ப முடியுமா என்ன? மோடிஜிக்கு அனுப்பாமல், இராகுலுக்கு மட்டுமே அனுப்பினால் மக்கள் பொங்கிவிடுவார்கள். பின் என்னதான் செய்வது?

அதனால்தான், இருவருக்குமே நேரடியாக நோட்டீஸ் அனுப்பாமல், இதுவரை இல்லாத முன்னுதாரணமாக, அவரவர் கட்சித் தலைமைக்கு நோட்டீஸ் அனுப்பி, தனது அதிகாரத்தை மிகவும் துணிச்சலாக நிலைநாட்டி விட்டது நமது தேர்தல் ஆணையம். அதாவது பாம்பும் சாகாமல்; கம்பும் உடையாமல்! (‘ முன்பு நமது ‘மலைஜி’ சொன்னது போலவா?’ என்று யாராவது பச்சையாகவும் கொச்சையாகவும் கேட்டால், அவர்களை நான் மிக மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன்)

✍️செ.இளங்கோவன்

தேர்தல் ஆணையம் ஒரு சைக்கோ கோமாளி தானே?

குஜராத் சூரத் எம்பி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரின் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. உடனே மற்ற சுயேச்சை வேட்பாளர்கள் வாபஸ் வாங்குகிறார்கள். நம்புங்கள், தானாக வாபஸ் வாங்குகிறார்கள்.. கடைசியில் பார்த்தால் பாஜக வேட்பாளர் மட்டுமே இருக்கிறார். இப்போது புரிகிறதா? சுயேட்சை வேட்பாளர்கள் ஏன் வாபஸ் வாங்கினார்கள் என்று. ஆக, போட்டியாளரே இல்லாததால் பாஜக வேட்பாளர் எம்பியாக வெற்றி பெற்றதாய் அறிவிக்கப்படுகிறார். இங்குதான் தேர்தல் ஆணையம் சில கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்.

வேட்பாளர்கள் பட்டியலில் பாஜக தவிர அனைவரும் வாபஸ் வாங்கி விட்டாலும் நோட்டா என்ற வேட்பாளர் உயிரோடு தான் இருக்கிறார். அந்த நோட்டா வேட்பாளர் வாபஸ் வாங்காத போது எப்படி இன்னொருவர் போட்டியே இல்லாமல் வெற்றி பெற்றதாக அறிவிக்க முடியும்? சரி நான் ரெடி என்று பாஜக வேட்பாளர் களமிறங்குகிறார் என வைத்துக் கொள்வோம்.

நோட்டாவுக்கு அவருக்கும் இடையே போட்டி நடக்கிறது. பாஜக வேட்பாளரை வெறுக்கும் மக்கள், நோட்டாவுக்கு அதிகமாக வாக்களிக்கிறார்கள். இப்போது பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்க முடியுமா? பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது என்றால்,பாஜகவை பிடிக்காதவர்கள் தங்களது வாக்கை எங்கே செலுத்துவார்கள்? என் தொகுதியில் நிற்கும் ஒரு வேட்பாளருக்கு எதிராக போட்டியாளர்களே இல்லை என்றால், நோட்டா என்று ஒன்று இருக்கும்போது நான் எப்படி என்னுடைய வாக்குரிமையை விட்டு தர முடியும்?

இப்படித்தானே போட்டியின்றி தேர்வு என பாஜகவை பிடிக்காதவர்களின் வாக்குரிமையை தேர்தல் ஆணையம் சூரத் தொகுதியில் பறித்திருக்கிறது. இந்த புண்ணாக்கு பொடலங்காவுக்கு பெயர்தான் ஜனநாயகமா?

விதிகளை எல்லாம் மாற்றி தொலையுங்கடா..!

✍️ஏழுமலை வெங்கடேசன்

Tags :
ECIElection Commision of India
Advertisement
Next Article