தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

தேர்தல் 2024: முழு முடிவுகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

04:49 PM Jun 05, 2024 IST | admin
Advertisement

மோடி தலைமையிலான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) 293 இடங்களையும், எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி 235 இடங்களையும் வென்றுள்ளன. மீதமுள்ள 15 இடங்கள் 5 அணிசேரா கட்சிகள் மற்றும் 7 சுயேச்சை வேட்பாளர்கள் வசம் உள்ளன.

Advertisement

பாஜக கடந்த 2014 தேர்தலில் 282 தொகுதிகளிலும், 2019 தேர்தலில் 303 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்த முறை அக்கட்சி 240 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றுள்ளது. எனினும், ஆட்சி அமைப்பதற்கு தேவையான 272 என்ற எண்ணிக்கைக்கு கூட்டணி கட்சிகளை சார்ந்து இருக்க வேண்டிய நிலை பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றியுள்ளது. பாஜக கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆந்திர பிரதேசத்தில் 16 தொகுதிகளிலும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பீகாரில் 12 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 328 தொகுதிகளில் போட்டியிட்டு, 99 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2019 தேர்தலில் காங்கிரஸ் 421 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அந்த வகையில் இந்த முறை 99 எம்பி-க்கள் கிடைத்திருப்பது அக்கட்சிக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாகும்.

Advertisement

illustration of Indian people Hand with voting sign showing general election of India

இதற்கு அடுத்த படியாக உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 37 தொகுதிகளில் வெற்றி பெற்று 3வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. கடந்த 2019 தேர்தலில் இக்கட்சியில் வெறும் 5 எம்பி-க்களே வெற்றி பெற்றிருந்தனர். அகிலேஷ் யாதவ் சிறப்பான செயல்பாடு காரணமாக, உத்தரப் பிரதேசத்தில் கடந்த தேர்தல் 62 எம்பி-க்களை கொண்டிருந்த பாஜக இந்த முறை அங்கு 33 ஆக சரிவை சந்தித்துள்ளது.

மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 29 எம்பி-க்களையும், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. மகாராஷ்டிராவில் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் பிரிவு), சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாதி கூட்டணி, மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் 30 தொகுதிகளை கைப்பற்றியது.

இதில் உத்தவ் சிவசேனா 9 தொகுதிகளிலும், சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் 8 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதே நேரத்தில் ஆளும் கட்சி முகாமில் உள்ள ஏக்நாத் ஷிண்டே சிவசேனா 7 தொகுதிகளிலும், அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன.

Tags :
ECIElection Commission of Indiaparliament election 2024இந்திய தேர்தல் ஆணையம்தேர்தல் முடிவுகள்
Advertisement
Next Article