தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

தேர்தல் முடிவுகள் எதிரொலி: பங்குச்சந்தையில் கடும் சரிவு!.

05:30 PM Jun 04, 2024 IST | admin
Advertisement

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு அடுத்ததாக வாக்கு இயந்திரத்தில் பதிவாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.

Advertisement

தொடக்கத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்தது. இந்நிலையில், முடிவுகள் குறித்து நிலையான ஊகத்திற்கு வர முடியாததால், தேசிய பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்தது.ஜூன் 3 ஆம் தேதி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் ரூ.3,029 என்ற உச்சபட்ச விலையை எட்டியிருந்த நிலையில், இன்று பங்குச்சந்தையில் 11% சரிவைச் சந்தித்தன. இதன் காரணமாக, நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 2 லட்சம் கோடி வரையில் குறைந்தது.

Advertisement

இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 2719.33 ரூபாய் என்ற மோசமான நிலைக்கு சரிந்தாலும், வர்த்தகம் முடியும் போது 7.53 சதவீதம் சரிந்து 2793.60 ரூபாய் அளவில் உள்ளது.முன்னதாக, ஜூன் 3 ஆம் தேதி ரூ.3,029 என்ற உச்ச விலையை எட்டியிருந்த நிலையில், இன்று ரூ.18.50 லட்சம் கோடியாக RIL நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு சரிந்துள்ளது என்று தகவல்.

மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் மற்றொரு கிளை நிறுவனமான ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவன பங்குகள் 6.54 சதவீதம் வரையில் சரிவுடன் முடிந்ததுள்ளது. ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் இன்று 307.05 ரூபாய் என்ற மோசமான நிலைக்கு சென்றாலும் வர்த்ததகம் முடியும் போது 332.80 ரூபாய் விலையிலும், 2.11 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பீட்டிலும் முடிந்துள்ளது.

ஆக இறக்கத்துடன் துவங்கிய இன்றைய பங்குச்சந்தை சென்செக்ஸில் 2303.45 புள்ளிகளை இழந்து 74275.46 இறக்கத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதேபோல், நிஃப்டி 700.32 புள்ளிகளை இழந்து 22633.12-ல் தடுமாறி வருகிறது. மேலும், இன்றைய பங்குச்சந்தை முடிவில் 3000 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் குறையும் என பங்குச்சந்தை நிபுணர்களால் கணிக்கப்பட்ட நிலையில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று 6,000 புள்ளிகளுக்கும் மேல் சரிவைக் கண்டது. அதேபோல், தேசிய பங்குச் சந்தையில் 2,000 புள்ளிகள் வரை சரிவு காணப்பட்டது. இந்தச் சரிவில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் நிதி நிறுவனப் பங்குகளின் பங்கு அதிகம் இருந்தது. குறிப்பாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஐசிஐசி வங்கி ஆகிய மூன்று நிறுவனங்களின் பங்குகள் மட்டும் சென்செக்ஸ் குறியீட்டில் 2012 புள்ளிகள் சரிவுக்குக் காரணமாக அமைந்தன. இதனைத் தொடர்ந்து, Larsen & Toubro (L&T), ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), ஆக்சிஸ் வங்கி (Axis Bank), என்.டி.பி.சி (NTPC), பவர் கிரிட் (Power Grid) போன்ற நிறுவனங்களின் பங்குகளின் சரிவும் சென்செக்ஸ் குறியீட்டின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தன.

Tags :
Election Resultsshare marketsதேர்தல் முடிவுகள்பங்குச் சந்தை
Advertisement
Next Article