தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

ஊட்டி, கொடைக்கானல் போக மீண்டும் இ-பாஸ்!

09:30 PM Sep 30, 2024 IST | admin
Advertisement

சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் முறை 07.05.2024 முதல் 30.09.2024 வரை அமல்படுத்தப்பட்டு தற்போது வரை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறையை சென்னை ஐகோர்ட் மறுஉத்தரவு வரும் வரை நீட்டித்துள்ளது.

Advertisement

எனவே, கொடைக்கானலுக்கு வரும் பொதுமக்கள் தங்களின் வாகனங்களுக்கு ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள 'epass.tnega.org” என்ற இணையதளத்தில் உரிய விவரங்களை உள்ளீடு செய்து இ-பாஸ் பெற்று பயணிக்கலாம். மேலும் இ-பாஸ் பெற விண்ணப்பிப்பது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் உள்ளுர் வாகனங்களுக்கு உள்ளூர் இ-பாஸ் (Local e Pass) பெறுவது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு தொலைபேசி எண் : 0451-2900233, 9442255737 வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Advertisement

இதேபோல நீலகிரி மாவட்ட நிர்வாகமும் ஊட்டி வருவோர் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Tags :
e passgo to Ootyhighcourtkodaikanal.
Advertisement
Next Article