தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

வேலூரில் சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி, குணமடைந்து வீடு திரும்பினார்!

05:23 PM Sep 24, 2024 IST | admin
Advertisement

மு.க.ஸ்டாலினின் சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகியின் மகன் துரை தயாநிதிக்கு கடந்தாண்டு டிசம்பர் 6-ம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அப்போது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையிலுள்ள ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதை உறுதி செய்தனர். அதனை தொடர்ந்து, உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

தொடர்ந்து, வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் கடந்த மார்ச் 14-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சையுடன், புனர்வாழ்வு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவ வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடர் சிகிச்சையில் இருந்த துரை தயாநிதியை சிஎம்சி மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு முறை சந்தித்து நலம் விசாரித்தார். கடந்த மாதம் 26-ம் தேதி திமுக துணைத்தலைவரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி, துரை தயாநிதியை சந்தித்து நலம் விசாரித்தனர்.

Advertisement

அங்கு சுமார் 294 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.மருத்துவமனையில் இருந்து துரை தயாநிதி வெளியேறிய போது அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள், செய்தியாளர்களை படம் பிடிக்க விடாமல் தடுக்க முற்பட்டதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

Tags :
Durai Dhayanidhiதுரை தயாநிதிவேலூர் சி எம் சி
Advertisement
Next Article