தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் -தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டார்!

01:27 PM Oct 27, 2023 IST | admin
Advertisement

மிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தால் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது தமிழகத்தில் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆண் (3 கோடி) வாக்காளர்களை விட பெண் (3.10 கோடி) வாக்காளர்களே அதிகம். அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் தொகுதியும், குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதியாக கீழ்வேளூர் தொகுதியும் உள்ளதாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் ஆகியவைகளை மேற்கொள்ளலாம். இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர், அக்டோபரில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் நடைபெறுவது. பின்னர் ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என கூறப்படுகிறது.  உங்களது வாக்கு விபரங்களை சரிபார்க்க  ஆந்தை - இந்திய வாக்காளர் -என்ற லிங்க்கைக் க்ளிக் செய்யவும்

Advertisement

நாடு முழுவதும் வர இருக்கும் 2024 மே மாதத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார். இதை அடுத்து சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி `` வாக்காளர் பட்டியல் திருத்த பணியின் தொடக்கமாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடைபெற்று ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும்.

Advertisement

நவம்பர் 4, 5, 18, 19 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் மொத்தம் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 3 கோடி, பெண் வாக்காளர்கள் 3.10 கோடி, மூன்றாம் பாலினத்தவர்கள் 8,016 பேர் உள்ளனர். புதிய வாக்காளர்கள் 3.94 லட்சம் பேர் இருப்பதாகவும், அதில், ஆண்கள் 2.18 லட்சம், பெண்கள் 1.75 லட்சம் பேர் உள்ளதாகவும் தெரிவித்தார்.

சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் அதிகபட்சமாக 6.52 வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் 17 வயதிற்கு மேல் இருப்பவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். 17 வயதுக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்தால் 18 வயது நிரம்பியதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும். பின்னர் அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் ஆணையம் வழங்கும்.

மேலும், வாக்காளர்கள் உதவிக்கான மொபைல் செயலி மூலம் தங்கள் பெயர்களை வாக்காளர்கள் சேர்க்கலாம். டிசம்பர் 9-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்யலாம். ஜனவரி 5ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என கூறினார்.

ஆக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளிடம் நேரடியாகவும், தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாகவும் உரிய ஆவணங்களுடன் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். பரிசீலனைக்கு பிறகு பெயர் சேர்ப்பு, திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் அடிப்படையில், இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்படும். எனவே, இந்தாண்டுக்கான தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்ட நிலையில், மாவட்ட அளவிலான வரைவு வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டனர்.

Tags :
electionelectioncommissionParliamentElectionParliamentElection2024sathyapradhasahootamilnaduvotersvoters voterslist
Advertisement
Next Article