For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா: வருமானவரித்துறை அதிரடி!

04:30 PM Mar 17, 2024 IST | admin
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா  வருமானவரித்துறை அதிரடி
Advertisement

டப்பு 18-வது பாராளும்ன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு டெல்லியில் வெளியானது. தமிழகத்தில் ஏப்ரல் 19 -ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

Advertisement

பொதுவாகத் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு அதிக பணம் கொடுப்பது அல்லது மது, துணிமணி, தொலைக்காட்சி பெட்டி போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் கொடுப்பது தற்போது நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி தேர்தல் முதல் நாடாளுமன்ற தேர்தல் வரை வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் இதுபோன்ற நிகழ்வுகளை முற்றிலுமாக தடுக்க தேர்தல் கமிஷன் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

Advertisement

அதன் ஒரு பகுதியாக கேரளாவில் 1960ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போதுதான் மாதிரி நடத்தை விதிகள் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டன. அதன் வெற்றியைத் தொடர்ந்து, 1962 மக்களவைத் தேர்தலின் போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது. 1991 மக்களவை தேர்தலின் போது, தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாலும், ஊழல் குறித்த கவலைகள் காரணமாகவும், நடத்தை விதிமுறைகளை இன்னும் கடுமையாக அமல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்து விதிகளை வகுத்து அமல்படுத்தியது.

ஆனாலும் கடந்த தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கியதாக புகார் எழுந்தது. தற்போது நடைபெற உள்ள தேர்தலிலும், அதுபோல், பணப்பட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட ஒரு சில அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் சென்றது.

AanthaiReporter Press release Income Tax-1 17.03.2024

எனவே இந்த 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் வகையில், வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை உள்ளிட்டவைகளை இணைத்து தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. இதை ஒட்டி தமிழகத்தில் வருமான வரித்துறை சார்பில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 1800 425 6669 என்ற தொலைபேசி எண்ணிலும், 94453 94453 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் புகார் அளிக்கலாம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Tags :
Advertisement