தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

இன்றைய அரசியல் போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்!

09:33 PM Nov 14, 2023 IST | admin
Advertisement

சினிமா நடிகை- நடிகர்களுக்கு லட்ச கணக்கில் லைக் வரும், எல்லையில் நம் நாட்டை காக்கும் வீழ்ந்தாலும் விதையாக மீண்டும் முளைப்பேன் என நாட்டை காக்க Jai Jawan-ஜெய்ஹிந்த்.. என்று கூறும் இந்திய இராணுவ வீரர்களை ஒரு லைக் வருமா …?போற்றி புகழுந்து எல்லையில் போராடும் இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துங்கள் என்றால் யாரும் கவனிக்கமாட்டர்கள். இனி,எல்லா ஆரோக்கிய இலக்கணங்களையும் மீறி, புதிய அவ லட்சண இலக்கணம் படைத்துக் கொண்டே இருக்கும் ; அப்படிதான் இன்றைய அரசியல் போலிகளை லைக் செய்து கொண்டவது ஆகும்.போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்.

Advertisement

வெறும் பிம்ப ஊடக விளம்பர , வெளிச்ச அரசியல் தொழில்நுட்ப வாதிகளை வைத்துக்கொண்டு அவர்களை நம்பி இங்கு அரசியல். இனிமேல் இப்படி கொண்டு செலுத்த முடியாது இவை எனமாறும் காலம் வர வேண்டும்.எதார்த்தங்களாலும் மாறி மாறி ஆட்டம் போடும் மூலதன விளையாட்டுகளால் ஒரு பின்னவீன முறையில் மூலதனத்தில் விளையாடும் ஒரு பொம்மை அமைப்புகள்! அதை நம்பி திமுக தன் கொள்கைகளை அது இருந்தால் அல்லது அது இருக்கிறதாக நம்பிக் கொண்டால் கூட மக்களிடம் கொண்டு போய் அதனை சேர்ப்பதில் தத்துவம் ஏதுமில்லை வெறும் பணம் மட்டும் தான் இறுதியில் உங்களிடம் இருக்கிறது. இருத்தல் வாதம் என்றும் உண்மையின் கீழ்தான் இருக்கும்.

திமுக ஒரு பெரும் கோடீஸ்வர கட்சி என்பதை தவிர என்ன கொள்கையை அது இனி மக்களிடம் சொல்லி அவர்களை ஏமாற்ற பார்க்கிறது ஒரு திட்டமும் நிறைவேறவில்லை கொடுத்த வாக்குறுதிகள் மதுவிலக்கு,நீட் என உறுதிகள் அனைத்தும் பொய்யாய் போய்விட்டது ஒரு கம்பெனி விளம்பரங்கள் மாதிரி இந்த கட்சிகள் லக்ஸ் சோப், சென்னை சில்க்ஸ் மற்றும் நகர்ப்புற அல்சாமால்களில் குடி கொண்டு விட்டது. இலவச ஏமாற்று வேலைகளில் தமிழர்கள் இனம் புரியாது குழம்பி கிடக்கிறார்கள்.இதற்கு துணை நிற்பது ‘பல’

Advertisement

அறமற்ற ஊடகங்கள்,பத்திரிக்கையாளர்கள். நான் பல முறை சொல்லியிருக்கேன் கட்சிகாரனை விட மோசமானவர்கள் சில பத்திரிக்கையாளர்கள் எழுத்தாளர்கள் என்ற போர்வையில் தவறு என நன்கு தெரிந்தும் அவ அரசியல் பம்மாத்துக்கு முரட்டு முட்டுக்கொடுக்கும் இந்த நடுநிலை வேடதாரிகள் தான்... பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்கள், பத்திரிக்கை நிறுவனம்,. இதில் பல பிரிவுகள், வகைகள் உண்டு. பல கொள்கைகள் கொண்டவர்கள் ஒன்றாகவே பணிபுரிந்தனர். அனைவரின் கருத்துக்களையும் 1991 ஆண்டுக்கு முன்பு வரைக்கும் உங்களால் படித்து இருக்க முடியும். நிலமைகள் படி படியாக சரிந்து…..இப்போது ஒரே கூட்டம். பத்திரிக்கைகள். ஊடகங்கள். தற்போது யூ டியூப் மற்ற சமூக வலை தளங்கள். அநியாயங்கள் தெரிந்தாலும் மக்களிடம் சென்று சேராமல் தங்கள் சரியாக பணியை இவர்களுக்கு சாதகமாக செய்து விடுகின்றார்கள். இவர்களை கொண்டு இங்கு நாடக கதை அரசியல் தளம் நடக்கிறது

ஓட்டுக்கு பணம், கட்சி கூட்டத்துக்கு ஆட்கள் வர பணம்-மது- உணவு, தன்னை புகழ சமூக ஊடகங்களை கவனிப்பு, ‘சில’ பத்திரிக்கையாளர்களை தன் வசத்தில் கொள்வது என இருந்தால் போதும். அர்த்தமற்ற அபத்தமான மாலை- இரவு தொலைகாட்சி விவாதங்கள் வேறு. இவைதான் பிரதானம் இங்கு. அரசியல்-ஆட்சி கைகூட இதுவே இவர்களின் சூத்திரம் ஆகும்.

இப்படியான so called லீடர்கள், பதவியாளர்கள், பரிவாரங்கள் உள் நிலை இதுவே:
‘இது எனக்காக நானேத் தேடிக்கொண்ட வாழ்க்கை
இவை நானே உருவாக்கிக்கொண்ட சந்தோசங்கள்
இவை நானே தேர்ந்தெடுத்தக் கனவுகள்
இவை நானே போட்டுக்கொண்ட ஒப்பனைகள்
இவை நானே திணித்துக்கொண்டப் புன்னகைகள்
இவை நானே செய்துகொண்ட சமாதானங்கள்
இவை நானே சொல்லிக்கொள்ளும் நியாயங்கள்

அந்தோ
எட்டி நின்றுப் பார்த்து
வாய் பிளக்கிறீர்கள்
"அவளுக்கென்ன ராணிபோல் வாழ்க்கை" என்பதாய்

நல்லது
யார் யாரிடமோ தன்னைத் தானே
நிரூபித்துத்தோற்குமிந்த அற்ப நாடகம் அலுத்துப்போன
ஒரு நாளில்

ராணிகளும்
கண்ணீர் சிந்துகிறார்கள்
யாரும் அறியாமல்
நான்கு சுவர்களுக்குள்ளாக..’
-Riska Mukthar
-ரிஸ்கா முக்தார்-

“The creatures outside looked from pig to man, and from man to pig, and from pig to man again; but already it was impossible to say which was which.”

“Man is the only creature that consumes without producing. He does not give milk, he does not lay eggs, he is too weak to pull the plough, he cannot run fast enough to catch rabbits. Yet he is lord of all the animals. He sets them to work, he gives back to them the bare minimum that will prevent them from starving, and the rest he keeps for himself.”
― George Orwell, Animal Farm
(Audible: https://amzn.to/3NstS63 #ad)

#கேஎஸ்ஆர்போஸ்ட்

Tags :
debateFake JournalistmediaPoliticsTamilnadu Politics
Advertisement
Next Article