தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

டொனால்டு டிரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிட மேலும் ஒரு மாகாணத்தில் தடை!

12:52 PM Dec 29, 2023 IST | admin
Advertisement

மெரிக்க மோடி என்றழைக்கப்படும் டொனால்ட் டிரம்ப் மீதான் ஒரு குற்றச்சாட்டில் கொலராடோ சுப்ரீம் கோர்ட் அண்மையில் பரபரப்பு தீர்ப்பு ஒன்றை அளித்து இருந்தது. அதில், அடுத்த ஆண்டு 2024இல் நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிட டிரம்புக்கு தகுதி இல்லை என்ற பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும், குடியரசு கட்சியின் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் தேர்தலின் வாக்குச் சீட்டில் டிரம்ப்பின் பெயர் இடம் பெறக்கூடாது என்றும், அவ்வாறு இடம்பெற்றால் அவருக்கு அளிக்கும் வாக்கு செல்லாது என்றும் தெரிவித்து இருந்த பரபரப்பே இன்னும் தணியாத நிலையில் கடந்த 2021-ல் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்து நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய விவகாரத்தில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு மைனே மாகாணத்திலும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக புதுத் தகவல் வெளியாகியுள்ளது..!

Advertisement

டொனால்ட் ட்ரம்ப், குடியரசு கட்சி சார்பில் அமெரிக்க அதிபராக கடந்த 2016 ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து நடந்த 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார். இதையடுத்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனிடம் ஆட்சி பொறுப்பை வழங்குவதற்கு வழிவகை செய்யும் வெற்றிச் சான்றிதழ் அளிப்பு நிகழ்ச்சி நாடாளுமன்றத்தில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது அந்த நிகழ்ச்சியை நடத்த விடாமல், டிரம்ப்பின் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகை முன்னால் நின்று கலவரத்தில் ஈடுபட்டனர். அவர்களை விரட்டியடிக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். ஒட்டுமொத்த அமெரிக்காவையும் உலுக்கிய இந்த கலவரத்தில் டொனால்ட் ட்ரம்ப்புக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

Advertisement

மேலும், அந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக டிரம்ப் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகளும் எழுந்தன.அதனைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையை விட்டு டிரம்ப் வெளியேறிய பின்பு, அமெரிக்கா அரசின் ரகசிய ஆவணங்களை அவர் எடுத்துச் சென்றதாகக் குற்றச்சாட்டும் எழுந்தது. இது தொடர்பாக முன்னாள் அதிபர் டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் உள்ள நீதிமன்றங்களில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அந்த வகையில், கொலராடோ மாகாணத்தின் உச்சநீதிமன்றத்திலும் நாடாளுமன்ற கலவரம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் கொலராடோ உச்சநீதிமன்றம் நேற்று முன் தினம் (19-12-23) பரபரப்பு தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது. அதில், அடுத்த ஆண்டு 2024இல் நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிட டிரம்புக்கு தகுதி இல்லை என்ற பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

மேலும், குடியரசு கட்சியின் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் தேர்தலின் வாக்குச் சீட்டில் டிரம்ப்பின் பெயர் இடம் பெறக்கூடாது என்றும், அவ்வாறு இடம்பெற்றால் அவருக்கு அளிக்கும் வாக்கு செல்லாது என்றும் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, இந்த தீர்ப்பை டிரம்ப் எதிர்த்த நிலையில், அவர் மேல்முறையீடு செய்யும் வகையில் ஜனவரி 4ஆம் தேதி வரை தீர்ப்பை நிறுத்தி வைப்பதாக நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. .அந்த உத்தரவால் டிரம்ப் தரப்பு அதிர்ச்சி அடைந்தது. மேலும், டிரம்ப்க்கு தடை விதித்த நீதிபதிகளுக்கு, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், அங்கு நாளுக்கு நாள் பரபரப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சர்ச்சைகளுக்கு பெயர்போன டிரம்ப், எப்படியாவது மீண்டும் அதிபர் பதவியை கைப்பற்றிவிட வேண்டும் என துடித்து வருகிறார்.

இதற்கிடையே, 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் மைனே மாகாண வாக்குப்பதிவில் இருந்து டொனால்ட் டிரம்ப் பெயர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்த மாகாண உயர்நிலை தேர்தல் அதிகாரி இன்று தெரிவித்துள்ளார்.20021 ஜனவரி 6 கேபிடல் மீதான தாக்குதல் சம்பவத்தின் பேரில், டிரம்ப்க்கு கொலராடோவைத் தொடர்ந்து, இரண்டாவது மாகாணமாக மைனேவிலும் தடை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
disqualified presidential electiondonald trumpone more province!
Advertisement
Next Article