தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

கூகுளில் தேர்தல் விளம்பரம் செய்வதற்காக ரூ100 கோடி செலவழித்த இந்தியாவின் முதல் அரசியல் கட்சி எது தெரியுமோ?

09:57 PM Apr 26, 2024 IST | admin
Advertisement

தேர்தல் என்றாலே விளம்பரங்கள் தவிர்க்க முடியாதவை. முன்னொரு காலத்தில் சுவர் விளம்பரங்களும், சுவரொட்டிகளும் , துண்டு பிரசுரங்களும் , வாகனப் பேரணிகளுமே தேர்தல் விளம்பரங்களில் முதலிடம் பிடித்திருந்தன. ஆனால் நவீனமயமாகி விட்ட இந்த யுகத்தில் அந்த விளம்பரங்களும் டிஜிட்டல் வடிவெடுத்துள்ளன. அதிலும் உலகின் மிகப்பெரும் தேடு தளமான கூகுளில் விளம்பரங்களை வெளியிடுவதில் அரசியல் கட்சிகள் மத்தியில் போட்டி எழுந்திருக்கிறது. பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றோடு திமுகவும் இந்த கோதாவில் குதித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

அதன்படி மே 2018 முதல் தற்போது வரையிலான கணக்கெடுப்பில் பாஜக தனது டிஜிட்டல் பிரச்சாரங்களுக்கு ரூ100 கோடிக்கு மேல் செலவழித்துள்ளது. இவை அதன் அடுத்த இடங்களில் இருக்கும் காங்கிரஸ், திமுக ஆகியவற்றின் மொத்த செலவினத்தை விட அதிகமாகும். 2018 மே முதல்தான் கூகுள் நிறுவனம் தனது விளம்பரங்களின் வெளிப்படைத் தன்மைக்காக அவற்றை வெளியிடத் தொடங்கியது. இதனால் அதற்கு முந்தைய டிஜிட்டல் விளம்பரங்கள் தொடர்பான தரவுகள் துல்லியமாக இல்லை. இந்த புள்ளி விவரங்களை ‘இந்தியா டுடே’ ஊடக நிறுவனம் தொகுத்து வழங்கியுள்ளது.

Advertisement

அந்த விவரப்படி மே 31, 2018 - ஏப்ரல் 25, 2024-க்கு இடையில் வெளியிடப்பட்ட கூகுள் விளம்பரங்களின் மொத்த செலவில் பாஜகவின் பங்கு சுமார் 26 சதவீதம் ஆகும். அதாவது கூகுள் நிறுவனத்தால் ’அரசியல்’ என வகைப்படுத்தப்பட்ட விளம்பரங்கள் மூலம் ரூ.390 கோடி வருமானம் பெற்றுள்ளது. அவற்றில் சுமார் கால்பங்கினை பாஜக நிறைவு செய்துள்ளது.

இந்தக் காலகட்டத்தில் கூகுளின் ’அரசியல் விளம்பரம்’ என்று விவரிக்கப்பட்டுள்ள மொத்தம் 2,17,992 உள்ளடக்கங்களில் 1,61,000-க்கும் அதிகமானவை அதாவது, 73 சதவீத பங்கு பாஜகவால் வெளியிடப்பட்டுள்ளன. கட்சியின் பெரும்பாலான விளம்பரங்கள் கர்நாடகாவில் வசிப்பவர்களைக் குறிவைத்து ரூ.10.8 கோடியை செலவழித்துள்ளன. அடுத்தபடியாக உத்தரப் பிரதேசத்தை குறிவைத்து ரூ.10.3 கோடியிலும், ராஜஸ்தானுக்கு ரூ.8.5 கோடி, மற்றும் டெல்லிக்கு ரூ.7.6 கோடியிலும் அரசியல் விளம்பரங்களை பாஜக வெளியிட்டுள்ளது.

அனைத்து அரசியல் கட்சிகளும் குறிவைத்ததில் ஒட்டுமொத்தமாக, இந்திய மாநிலங்களில் கூகுளின் அரசியல் விளம்பரங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியவை வருகின்றன. பாஜகவுக்கு அடுத்தபடியா ரூ45 கோடியுடன் காங்கிரஸ் அடுத்த இடத்தைப் பிடிக்கிறது. இந்த 6 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி 5,992 ஆன்லைன் விளம்பரங்களை வெளியிட்டது. இந்த விளம்பரங்களும் கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களை குறிவைத்து தலா ரூ.9.6 கோடி செலவுடன் முதன்மை இடத்தைப் பிடித்துள்ளன. அடுத்த இடத்தில் ரூ.6.3 கோடியுடன் மத்தியப்பிரதேசம் வருகிறது.

பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளுக்கு அடுத்தபடியாக பிராந்திய கட்சியான திமுக, கூகுளில் அதிகளவு விளம்பரத்துக்காக செலவிட்டுள்ளது. அதிலும் கிட்டத்தட்ட காங்கிரஸ் கட்சிக்கு இணையாக ரூ42 கோடியை திமுக செலவிட்டுள்ளது. இதில் அரசியல் ஆலோசனை நிறுவனமான பாப்புலஸ் எம்பவர்மென்ட் நெட்வொர்க், திமுக சார்பாக செலவழித்த ரூ.16.6 கோடியும் அடங்கும்.

Tags :
AdvertismentBjpcongressdmkelectionGoogleIndia TodayPolitical Party
Advertisement
Next Article